தமிழ்நாட்டில் மத போதகர்கள்சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவங்கள் தொடர்ந்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
இத்தகைய குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரியில் 63 வயது பாஸ்டர் சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூரம் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே செம்பருத்திவிளை பகுதியைச் சேர்ந்த 63 வயதான கிறிஸ்தவ மத போதகர் ஜான் ரோஸ், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் சிஆர்பிஎப் வீரரான இவர், ஓய்வுக்குப் பிறகு கரும்பாறை பகுதியில் ஜெபக் கூடம் நடத்தி வந்தார். ஏழை மக்கள் அதிகம் வரும் இந்த ஜெபக் கூடத்தில் தவறாமல் கலந்து கொண்ட தக்கலை பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும், பாஸ்டருடன் பழக்கம் ஏற்பட்டது.பாஸ்டரின் ஆசை வார்த்தைகளால் ஏமாற்றப்பட்ட சிறுமி, பலமுறை வன்கொடுமைக்கு உள்ளானார்.
சிறுமி வயிற்று வலியால் துடித்தபோது மருத்துவ பரிசோதனையில் கர்ப்பம் தெரியவந்தது. சிறுமி பாஸ்டர் ஜான் ரோஸை குற்றம் சாட்டியதும், அவர் சிறுமியின் தாயிடம் பாவமன்னிப்பு கோரியுள்ளார். ஆனால், சிறுமியின் எதிர்காலத்தை பாழாக்கிவிடுவேன் என மிரட்டி, கேரளாவில் கருக்கலைப்பு செய்ய முயன்றார்.
ஆனால் மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்கு தகவல் அளித்ததால் திட்டம் தோல்வியடைந்தது.பின்னர் தலைமறைவான பாஸ்டர் ஜான் ரோஸை போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்தனர்.
குற்றத்தை மறைக்க உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி ஜலின் பிரபா மற்றும் மகன் பிரதீப் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது போக்சோ சட்டத்துடன் குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.
சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், பாஸ்டரிடம் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Summary in English : In Tamil Nadu, religious figures including a 63-year-old pastor in Kanyakumari raped and impregnated a 13-year-old girl arrested under POCSO and related laws, sparking calls for stricter punishments against this kind of violence.
