புதுச்சேரி, டிசம்பர் 13 : புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருகே செந்தாமரை நகரைச் சேர்ந்த 45 வயதுடைய தமிழ்செல்வி என்ற பெண், பணப் பிரச்சினை காரணமாக தனது கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலைக்கு பின்னால், குற்றவாளியின் முந்தைய கொலை வழக்கும் தொடர்புடையதாக தெரியவந்துள்ளது. தமிழ்செல்விக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பரத்ராஜ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, 2020-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.
தமிழ்செல்வி, தனது மகளுடன் வில்லியனூரில் தனி வீடு எடுத்து வசித்து வந்தார். அவரது மகள், ஓதியம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். தினசரி மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று, மாலையில் அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் தமிழ்செல்வி.
இந்நிலையில், அதே பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் ஐயப்பன் என்பவருடன் தமிழ்செல்விக்கு பழக்கம் ஏற்பட்டது. ஐயப்பனுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இருப்பினும், இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசமாக இருந்துவந்துள்ளனர்.
இப்படி கணவரை பிரிந்து பர்னிச்சர் கடை ஐயப்பனிடம் தன்னுடைய மனதையும், உடலை கொடுத்த தமிழ்செல்வி, அதையும் தாண்டி தன்னுடைய பணத்தையும் கொடுத்துள்ளார்.
இருவரும் அடிக்கடி சந்தித்து பழகி வந்த நிலையில், ஐயப்பன் செலவுகளுக்காக அவ்வப்போதுதமிழ்செல்வியிடம் பணம் வாங்கியுள்ளார். சமீபத்தில், தமிழ்செல்விக்கு சில பொருளாதார பிரச்சனைகள் வரவே, ஐயப்பனிடம் கொடுத்த பணத்தில் இருந்து ஒரு லட்ச ரூபாயை திரும்பப் பெற்றார். இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலை, வழக்கம் போல மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற தமிழ்செல்வி, அங்கிருந்து ஐயப்பனின் பர்னிச்சர் கடைக்குச் சென்றார். அங்கு, பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஐயப்பன், சரமாரியாகத் தாக்கியதில் தமிழ்செல்வியின் உயிர் பிரிந்து.
பின்னர், உடலை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த ஐயப்பன், உடலை சாக்கு மூட்டையில் கட்டி கடைக்குள் மறைத்து வைத்தார். இரவு ஆள் நடமாட்டம் குறைந்த பிறகு, அந்த மூட்டையை அருகிலுள்ள வாய்க்கால் பகுதிக்கு தூக்கிசென்று, சாலையின் ஓரமாக வீசிவிட்டு, வழக்கம் போல தனது அன்றாட வேலைகளைத் தொடர்ந்தார்.
தமிழ்செல்வியைக் காணாததால் கவலைப்பட்ட அவரது தம்பி மற்றும் உறவினர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், தமிழ்செல்வியின் செல்போனைப் பரிசோதித்தபோது, அவர் கடைசியாக ஐயப்பனுடன் பேசியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, ஐயப்பனை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பணப் பிரச்சினை காரணமாக தமிழ்செல்வியை கொலை செய்ததாகவும், இருவருக்கும் தகாத உறவு இருந்ததாகவும் ஐயப்பன் ஒப்புக்கொண்டார்.
மேலும், இதே போன்று 2015-ம் ஆண்டு, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு, அவரையும் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசியதும் தெரியவந்துள்ளது.
இந்தத் தகவல், விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. போலீசார், இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ள உறவுகள் மற்றும் பணப் பிரச்சினைகள் காரணமாக ஏற்படும் கொலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
Summary in English : In Puducherry's Villianur, 45-year-old divorced woman Tamilselvi was murdered by her extramarital lover Ayyappan over a money dispute. He beat her to death in his furniture shop, stuffed the body in a sack, and dumped it in a nearby canal. Police arrested him, revealing a similar 2015 murder of another lover.

