விஜய் தனித்து போட்டியிட்டால் இது தான் நிலைமை.. வெளியான கள நிலவரம்..!

சென்னை, டிசம்பர் 28, 2025: தமிழக அரசியல் களம் தற்போது கொதி நிலையில் உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் (தவெக) அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சத்தியம் செய்து கூறி வருகின்றனர். 

இதனால், கூட்டணி ஆட்சி அமைந்தால் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி உறுதி என்கிறார்கள்!சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, தேர்தல் மிகவும் இழுபறியாக உள்ளது. 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி-தோல்வி கடும் போட்டி. ஆனால், தவெக கூட்டணியில் சேர்ந்தால், அதிமுக-பாஜகவுக்கு உடனடியாக பெரிய உந்துதல் கிடைக்கும். 

40-45 தொகுதிகளை தவெகவுக்கு ஒதுக்கீடு செய்து, விஜய் சட்டமன்ற உறுப்பினராக உள்ளே நுழைந்தால், அவரது குரல் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் நோக்கர்கள்.

மேலும், எல்லா பூத்களுக்கும் பூத் ஏஜெண்ட் போட்டுவிட்டோம் என தவெக விழா நடத்தியது. ஆனால், அது வெறும் பிம்பம். பெருவாரியான பூத்களுக்கு பூத் ஏஜெண்ட் நியமனம் செய்ய முடியாமல் நிர்வாகிகள் திணறி நிற்கின்றனர் என்பது தான் உண்மை.

விஜய் தனித்து நின்றால் என்ன நடக்கும்?

  • விஜய் ஒரு தொகுதியில் வெற்றி பெறலாம்.
  • மற்ற தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் பெரிய வாக்குகளைப் பெறுவார்கள், ஆனால் வெற்றி கடினம்.
  • இது திமுகவுக்கு உதவி செய்யும் – வாக்குகள் பிரிந்து திமுக வெற்றி பெற வாய்ப்பு.
  • திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே தவெகவை உடைக்க முயற்சி செய்யும் – மாவட்ட செயலாளர்கள் மற்றும் தோல்வியடைந்த தவெக வேட்பாளர்களை இழுக்கும்.
  • இது விஜயின் அரசியல் எதிர்காலத்துக்கு பெரிய பின்னடைவாக மாறி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போல மாறிவிடும்.விஜய்யின் பிம்பம் நொறுங்கிவிடும்.

கூட்டணி சேர்ந்தால் என்ன லாபம்?

  • 40-45 எம்.எல்.ஏக்களுடன் விஜய் சட்டமன்றத்தில் நுழைவார்.
  • தவெக அடிமட்ட தொண்டர்களுக்கு, வட்டம், கிளை, வார்டு என அடிமட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் மேலாண்மை மற்றும் எப்படி வேலை செய்ய வேண்டும் என்ற நேரடி அனுபவம் கிடைக்கும். 
  • விஜய் எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்து, மக்கள் நம்பிக்கை பெறலாம்.
  • ரசிகர்களைத் தாண்டி பொதுமக்கள், தொழிலதிபர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என ஜன ரஞ்சகமான பொது வாழ்க்கை நெருக்கம் அதிகரிக்கும்.
  • அதிமுக ஆட்சி அமைந்தால், எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக விஜயின் குரல் தமிழக அரசியலில் பதிவாகும். ஐந்து ஆண்டுகளில் கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்த முடியும் – எதிர்காலத்தில் முதலமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

அரசியல் நோக்கர்கள் கூறுவது: "விஜய் தனித்து நின்று முதல் தேர்தலிலேயே முதலமைச்சராகி விடலாம் என நம்பினால், மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அதிமுக, பாஜகவுடன் கூட்டணி இயல்பானது – பாஜக உள்ளே வந்துவிடும் என்கிற பூச்சாண்டியை மக்கள் ஒரு காலத்தில் நம்பினார்கள். ஆனால், இப்போது அப்படி இல்லை. இதற்கு, மக்களவை தேர்தலை பாஜக தனித்து போட்டியிட்டு பெற்ற வாக்குகளே சாட்சி.

தற்போது அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், தவெக இணைவது பெரிய திருப்பமாக அமையும். சமீப கருத்துக்கணிப்புகளும் இழுபறி காட்டும் நிலையில், இந்த கூட்டணி தமிழக அரசியலை மாற்றி எழுதுமா? காத்திருந்து பார்ப்போம்!இந்த பரபரப்பு செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய அலை ஏற்படுத்தி உள்ளது. உங்கள் கருத்து என்ன?

Summary : Political observers predict that if actor Vijay's Tamilaga Vetri Kazhagam (TVK) joins the AIADMK-BJP alliance for the 2026 Tamil Nadu assembly elections, the coalition could secure over 200 seats. Alliance entry would give Vijay 40-45 MLAs, strong legislative presence, and future growth, while contesting alone risks vote-splitting that benefits DMK and damages TVK's prospects.