Posts

Showing posts with the label 200 seats

விஜய் தனித்து போட்டியிட்டால் இது தான் நிலைமை.. வெளியான கள நிலவரம்..!

Image
சென்னை, டிசம்பர் 28, 2025: தமிழக அரசியல் களம் தற்போது கொதி நிலையில் உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் (தவெக) அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சத்தியம் செய்து கூறி வருகின்றனர்.  இதனால், கூட்டணி ஆட்சி அமைந்தால் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி உறுதி என்கிறார்கள்!சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, தேர்தல் மிகவும் இழுபறியாக உள்ளது. 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி-தோல்வி கடும் போட்டி. ஆனால், தவெக கூட்டணியில் சேர்ந்தால், அதிமுக-பாஜகவுக்கு உடனடியாக பெரிய உந்துதல் கிடைக்கும்.  40-45 தொகுதிகளை தவெகவுக்கு ஒதுக்கீடு செய்து, விஜய் சட்டமன்ற உறுப்பினராக உள்ளே நுழைந்தால், அவரது குரல் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் நோக்கர்கள். மேலும், எல்லா பூத்களுக்கும் பூத் ஏஜெண்ட் போட்டுவிட்டோம் என தவெக விழா நடத்தியது. ஆனால், அது வெறும் பிம்பம். பெருவாரியான பூத்களுக்கு பூத் ஏஜெண்ட் நியமனம் செய்ய முடியாமல் நிர்வாகிகள் திணறி நிற்கின்றனர் என்பது தான் உண்மை. விஜய் தனித்து நின்றால் என்ன நடக்கும்...