திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே புதூர்நாடு நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சின்னகாளி (வயது 42) என்ற பெண், விவசாய நிலத்தில் தலையில் பலத்த காயங்களுடன் நிர்வாண நிலையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னகாளியின் கணவர் சாம்பசிவம் உடல்நிலை பாதிப்பால் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், அவரது பெண் குழந்தைகள் திருமணமாகி கணவர்களுடன் வசித்து வருகின்றனர்.

இதனால் சின்னகாளி தனியாக வசித்து வந்தார். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நீண்ட காலமாக வசித்து வந்த அவர், ஆறு ஏக்கர் நிலத்தை தனது பெயரில் பட்டா பெற்றிருந்தார். நேற்று முன்தினம் பிரகாசம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சின்னகாளியின் உடல் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
ஆரம்ப விசாரணையில் கொலை செய்தவர் யார், எதற்காக கொலை நடந்தது என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், சின்னகாளியின் மகள் கீதாவிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கீதா விசாரணையில், "என் தாய்க்கு ஊரில் பலருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் இந்த கொலை நடந்திருக்கலாம்" என்று கூறியுள்ளார். இது போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஏனெனில், பெற்ற தாய் குறித்து இவ்வாறு ஒரு தகவலை வெளிப்படையாக கூறுவது அரிது என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதனையடுத்து கீதா மற்றும் அவரது கணவர் சிதம்பரத்தை தீவிர விசாரணைக்கு உட்படுத்தியபோது உண்மை அதிர்ச்சிகரமாக வெளியானது.
சின்னகாளி பெயரில் உள்ள 6 ஏக்கர் நிலத்தை தங்களுக்கு எழுதி வைக்குமாறு கீதாவும் சிதம்பரமும் தொடர்ச்சியாக நிர்பந்தித்துள்ளனர். ஆனால் சின்னகாளி அதற்கு மறுத்துவிட்டார். "வயதான உனக்கு இவ்வளவு நிலம் எதற்கு? எங்களுக்கு எழுதிக் கொடு" என்று வாக்குவாதம் செய்தபோது, விஷயம் கைகலப்பாக மாறியது.
இரவு 11 மணியளவில் சின்னகாளியை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். பின்னர், சந்தேகம் வராமல் இருக்க தகாத தொடர்பு காரணமாக கொலை நடந்ததுபோல தோற்றமளிக்க, சின்னகாளியின் உடைகளை கழற்றி பக்கத்து நிலத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர் கீதாவும் சிதம்பரமும்.
இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கீதா மற்றும் சிதம்பரத்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்சனையால் தாயை கொலை செய்த மகள்-மருமகன் என்ற தகவல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Summary in English : In Tiruppathur district, Tamil Nadu, 42-year-old Chinnakali was found murdered naked in a farmland. Police investigation revealed her daughter Geetha and son-in-law Chidambaram killed her over a dispute regarding 6 acres of land she refused to transfer. They staged it as a crime due to illicit relationships to mislead the probe.

