ராஜஸ்தானின் ஒரு சிறிய கிராமத்தில், ரமேஷ் என்ற ஆசிரியரும், அவன் மனைவி பிரியாவும் 15 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை நடத்தி வந்தனர். குழந்தைகள் இல்லாததால், அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டைகள் வெடிக்கும்.
ரமேஷ் பள்ளியில் பிஸியாக இருப்பான், பிரியா வீட்டில் தனிமையில் தவிப்பாள். அப்போதுதான் ரமேஷின் நெருங்கிய நண்பனும், அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வருபவனுமான விக்ரம் அவர்கள் வாழ்க்கையில் நுழைந்தான்.

விக்ரம் ஒரு தொழிலதிபர். ரமேஷுடன் பழைய நட்பு. ஆனால் பிரியாவுடன் அவன் பேச்சு வார்த்தைகள் விரைவில் ரகசிய சந்திப்புகளாக மாறின. மூன்று மாதங்களில் அது தகாத உறவாக உருமாறியது. பிரியா கர்ப்பமாக இருந்தாள் – விக்ரமின் குழந்தையை சுமந்து கொண்டிருந்தாள். ஆனால், ரமேஷுக்கு இது தெரியாது.
ஒரு நாள், விக்ரமின் போன் செய்தியை ரமேஷ் தற்செயலாக பார்த்துவிட்டான். உடனே சண்டை. "என் நண்பனுடன் இப்படியா? நான் உன்னை நம்பினேன்!" என்று ரமேஷ் கோபத்தில் கத்தினான். பிரியாவை அடித்தான், விக்ரமுடனான நட்பை முறித்துக்கொண்டான். பிரியா அழுதாள், ஆனால் உள்ளுக்குள் கோபம் கொதித்தது. "இனி இவன் தடையாக இருக்கக் கூடாது" என்று முடிவெடுத்தாள்.
விக்ரமை சந்தித்து, "அவனை அகற்ற வேண்டும். நாம் சேர்ந்து வாழ வேண்டும்" என்றாள். விக்ரம் தயங்கினான், ஆனால் பிரியாவின் காதல் (அல்லது பயம்?) அவனை இணங்க வைத்தது.
திட்டம் தீட்டினார்கள்: ரமேஷை வீட்டில் தனியாக இருக்கும் போது அவனை தீர்த்து கட்ட முடிவு எடுத்தனர்.
அந்த இரவு வந்தது. விக்ரம் வீட்டுக்குள் நுழைந்தான். ரமேஷ் தூங்கிக் கொண்டிருந்தான். பிரியா அவனுக்கு மது கொடுத்து, அதில் தூக்க மாத்திரை கலந்திருந்தாள். ரமேஷ் மயக்கமடைந்ததும், விக்ரம் ஒரு கயிற்றால் அவன் கழுத்தை இறுக்கினான். ரமேஷ் விழித்து போராடினான் – கடுமையாக. அவன் கைகள் விக்ரமை ஆக்ரோஷமாக தாக்கின, கழுத்தில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. பிரியாவும் உதவினாள். இறுதியில் ரமேஷ் இறந்தான்.
கோபத்தில் உச்சத்தை அடைந்த பிரியா, ரமேஷின் சடலத்தின் மீது சிறுநீர் கழித்தாள்.
கொலை முடிந்ததும், பிரியா தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாள். விக்ரம் தப்பி ஓடினான். ஐந்து நாட்கள் கழித்து, அக்கம் பக்கத்தினர் துர்நாற்றம் பற்றி போனில் சொன்னார்கள். பிரியா "ஒன்றும் தெரியாதது" போல வந்து, சடலத்தை பார்த்து நாடகமாக கதறினாள். "சண்டை போட்டுட்டு.. கோபித்து கொண்டு என் அம்மா விட்டு நான் போயிட்டேன்... அவர் நல்லாத்தான் இருந்தார்!" என்று அழுதாள்.
காவல்துறை வந்தது. சந்தேக மரணமாக வழக்கு பதிவு. உடல் பிரேத பரிசோதனைக்கு. அறிக்கை: கழுத்து நெரித்து கொலை, போராட்ட காயங்கள், மற்றும்... சடலத்தில் சிறுநீர்! DNA ஒப்பீடு செய்த போது, அது பிரியாவின் சிறுநீர் தான் என தெரியவந்தது.
முதல் திருப்பம்: விசாரணையில் பிரியா உறுதியாக மறுத்தாள். "என் கணவருக்கு எதிரிகள் இல்லை. அவர் குடித்துவிட்டு என்னை அடித்தார், அதான் போனேன்." போலீஸ் சந்தேகப்பட்டு, அவள் போனை சோதித்தார்கள். விக்ரமுடன் ரகசிய அழைப்புகள்.
ஆனால் இங்கே ஒரு பெரிய ட்விஸ்ட்: விக்ரம் பயந்து போய், பிரியாவை கைவிட்டு வேறு ஊருக்கு ஓடிவிட்டான். பிரியா தனியாக சிக்கினாள். போலீஸ் அவளை இறுக்கி விசாரித்த போது, அவள் ஒப்புக்கொண்டாள் – ஆனால் பாதி உண்மை மட்டும். "விக்ரம் மட்டும் தான் கொலை செய்தான், நான் தெரியாமல் உதவினேன்" என்றாள்.
இரண்டாவது திருப்பம்: போலீஸ் விக்ரமை தேடினார்கள். அவன் ஜெய்ப்பூரில் பதுங்கியிருந்தான். கைது செய்த போது, அவன் சொன்னது அதிர்ச்சி: "பிரியா தான் திட்டம் போட்டாள். அவள் கர்ப்பமாக இருக்கிறாள் – என் குழந்தை. ஆனால் அவள் என்னை ஏமாற்றினாள்! கொலைக்கு பிறகு, அவள் எனக்கு போன் செய்து, 'நீ தப்பி ஓடு, நான் பணம் அனுப்புறேன்' என்றாள். ஆனால் அனுப்பலை. அவள் என்னை பலிகடாவாக்க திட்டமிட்டிருந்தாள்!"
விக்ரம் சான்றுகளை கொடுத்தான் – அவர்கள் ரகசிய சந்திப்புகளின் ஆதாரங்கள், பிரியாவின் கர்ப்பம் பற்றிய மருத்துவ ரிப்போர்ட் (அவள் மறைத்திருந்தது).
மூன்றாவது ட்விஸ்ட்: பிரியா மீண்டும் விசாரிக்கப்பட்ட போது, அவள் உடைந்தாள். உண்மை வெளிவந்தது: அவள் விக்ரமை காதலித்தது உண்மை, ஆனால் கர்ப்பம் வந்த பிறகு, விக்ரம் திருமணம் செய்து கொள்ள தயங்கினான்.
"என் கணவனை கொலை செய்தால், நீ என்னை கல்யாணம் பண்ணிப்பியா.." என்று அவனை கெஞ்சினாள். கொலைக்கு பிறகு, விக்ரம் பயந்து ஓட, பிரியா தனியாக சிக்கினாள்.
சடலத்தின் மீது சிறுநீர் கழித்தது ஏன்.? ரமேஷ் அவளை அடித்த வலியின் கோபம் மட்டுமல்ல, கடந்த சில ஆண்டுகளாக அவள் உள்ளார்ந்த வெறுப்பும்.
இறுதி திருப்பம்: பிரியா சிறையில் இருக்கும் போது, ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்தாள். DNA டெஸ்ட் (போலீஸ் சந்தேகத்தால் செய்தது) அது உயிரிழந்த கணவர் ரமேஷின் குழந்தை!
பிரியா கள்ளக்காதலன் விக்ரமுடன் உறவு கொள்ளும் முன்பே, ரமேஷுடனும் பலமுறை உல்லாசமாக இருந்திருக்கிறாள். ரமேஷ் பல ஆண்டுகளாக எடுத்துக்கொண்ட சிகிச்சையின் பலனாக பிரியா கருவுற்றாள். ஆனால், பிரியா கர்பத்திற்கு காரணம் விக்ரம் தான் என நினைத்து விக்ரமை ஏமாற்றி கொலை செய்ய வைத்தாள்.
பிரியா சிறையில், குழந்தையை பெற்றெடுத்தாள் – அந்த குழந்தை தன் தந்தையின் கொலையாளியின் வயிற்றில் வளர்ந்தது. தன்னுடைய குழந்தையை பார்க்காமலே, மனைவி கர்ப்பமாக இருப்பது கூட தெரியாமலே.. ரமேஷ் மரணமடைந்தார். கண்டிப்பாக, அவரது ஆன்மா... அமைதி அடைந்திருக்காது. அதுவும், அவர் இறந்த பின்பு அவரது சடலத்தின் மீது சிறுநீர் கழிக்கும் அளவுக்கு பிரியாவின் மனதில் வஞ்சம் நிறைந்திருக்கின்றது.
இந்த கதை இரகசியங்கள், ஏமாற்றங்கள், கோபம், பழிவாங்கல்களால் என ஒரு சூறாவளி போல சுழன்று, அனைவரையும் அழித்தது.
வேதனைக்குரிய முடிவு: அந்த பச்சிளம் குழந்தை, பாவமறியாது, சிறையில் தன் வாழ்க்கையை தொடங்கியது. இது ரமேஷின் குழந்தை தான் என ஆய்வு முடிவுகள் காட்டியதால், ரமேஷின் பெற்றோர்கள் (குழந்தையின் தாத்தா பாட்டி) முன் வந்து குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர் என்பது மட்டும் தான் ஒட்டு மொத்த இந்த கொடூரத்தின் நிம்மதி பெருமூச்சு விட வைக்கும் ஒரு விஷயம்.
பாத்திங்களா நண்பர்களே.. திருமணம் தாண்டிய உறவு பெண்ணின் சுதந்திரன் என சில முற்போக்கு முள்ளம்பன்றிகள் வீசிய முள்ளின் விஷம் எந்த அளவுக்கு கொடுமையானது என்று.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்குஅறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.
Summary : In Rajasthan, childless wife Priya, having an affair with husband's friend Vikram and pregnant, plots and murders her husband Ramesh with Vikram's help after he discovers the betrayal.


