ஆணுறை வேண்டாம்.. தாய் முன்னே காதலனுடன் மகள்.. விசாரணையில் வெளியான கொடூர சம்பவம்..

மும்பை, டிசம்பர் 13 : கனவுகளால் நிறைந்த 17 வயது சிறுமியின் வாழ்க்கை, ஒரு போதைப்பொருள் அடிமையான “காதலன்” மற்றும் அவனது நண்பர்களின் கொடூர செயலால் நொடியில் நாசமாகிப்போனது.

இன்ஸ்டாகிராம் பிரபலமாக மாறிய ஆஷா பட்டேல், தனது அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில் வைரலானதால் தாங்க முடியாத வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான நான்கு மருத்துவ மாணவர்களுக்கு மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிர்ச்சி அளித்துள்ளது. நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த ஆஷா, தந்தையை இழந்து தாய் கீதா பட்டேலுடன் வசித்து வந்தார்.

தாயின் சிற்றுண்டிக் கடைதான் அவர்களது ஒரே வாழ்வாதாரம். இருப்பினும் ஆஷா பள்ளிப்படிப்பை முடித்ததும் ஆன்லைனில் படிக்க வைப்பதற்காக தாய் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கிக் கொடுத்தார்.

அந்த ஒரு போன்தான் ஆஷாவின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. தொடக்கத்தில் படிப்புக்காகப் பயன்படுத்திய போன், பின்னர் இன்ஸ்டாகிராமுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

நடன வீடியோக்கள், பயண வ்லாக்ஸ், ஸ்டைலிஷ் உடைகள்... கொஞ்ச நாட்களிலேயே ஆஷாவுக்கு லட்சக்கணக்கான பாலோவர்ஸ். ஒரு பிரபல நடிகை கூட அவரைப் பின் தொடர்ந்தார்.

ஆனால் இந்த பிரபலத்திற்கு பின்னால் ஒரு குறை எப்போதும் உறுத்திக் கொண்டே இருந்தது – “நானும் பெரிய இன்ஃப்ளுன்சர்கள் மாதிரி வசதியாக வாழ வேண்டும்” என்ற ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றப் போவதாகக் கூறி வலையில் வீழ்த்தியவன் – மும்பையில் இறுதி ஆண்டு மருத்துவம் படிக்கும் ஹர்ஷத் மேத்தா.

விலை உயர்ந்த கார், செலவு செய்யும் பணம், ஆடம்பர வாழ்க்கை... ஆஷா முழுமையாக ஹர்ஷத்யின் காதல் வலையில் சிக்கினார். காரில் சுற்றுதல், வெளியூர் ட்ரிப்கள், போதைப்பொருள் பார்ட்டிகள்... ஒருகட்டத்தில் ஆஷா போதைக்கு அடிமையானார்.

“என்னைத்தான் திருமணம் செய்யப்போகிறாய் அல்லவா? அதனால் ஆணுறை போட வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டு ஏமாந்த பெண்ணின் குரல், ஹர்ஷத்யின் போனில் வீடியோவாக பதிவானது.

“உன் மகளை மருத்துவரின் மனைவியாக பாக்க போறீங்க..” என்று தாயிடமே பெருமையாக அறிமுகப்படுத்தினார் ஆஷா. ஆனால் ஹர்ஷத்யோ “திருமணம் செய்துகொள்வேன்” என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி பலமுறை ஆஷாவை உடல்ரீதியாக சுரண்டினான்.

2023-ல் திடீரென ஆஷாவின் அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின. ஐந்து நிமிட கிளிப்கள் எடிட் செய்யப்பட்டு ஆபாச தளங்களில் வைரலானது. “யாரோ ஹேக் செய்திருப்பார்கள்” என்று மழுப்பிய ஹர்ஷத், உண்மையில் தன் நண்பர்களிடம் அந்த வீடியோக்களைக் கொடுத்திருந்தான்.

அந்த “நண்பர்கள்” விளையாட்டாக வெளியிட்ட ஐந்து நிமிட கிளிப்தான் ஆஷாவின் உயிரையே பறித்தது. வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே ஆஷா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

தாய் கீதா பட்டேல் மயங்கி விழுந்தார். ஒரே மகளை தனியாக வளர்த்து ஆளாக்கிய தாய்க்கு இது உலக முடிவாகிப் போனது. போலீஸ் விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. ஹர்ஷத்யும் அவனது மூன்று நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்.

“பணம் பறிக்க நினைத்தோம், விளையாட்டாக வெளியிட்டோம்” என்று நண்பர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால் அந்த “விளையாட்டு” ஒரு உயிரைப் பறித்துவிட்டது. மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

“பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்து, அவளது மரணத்திற்கு காரணமாக இருந்தவர்களுக்கு இது தகுந்த தண்டனை” என்று நீதிபதி குறிப்பிட்டார். இன்று ஆஷா இல்லை.

ஆனால் அவளது கதை இணைய உலகில் “பிரபலம்” என்ற பெயரில் எத்தனை உயிர்கள் பலிகொடுக்கப்படுகின்றன என்பதற்கு ஒரு கொடூர எச்சரிக்கையாக நிற்கிறது. RIP ஆஷா. உன்னுடன் விளையாடியவர்கள் இன்று சிறையில் அழுது கொண்டிருப்பார்கள்.

Summary : 17-year-old Instagram influencer Asha Patel from a middle-class family fell into a toxic relationship with medical student Harshad, who exploited her with promises of marriage. He recorded intimate videos, which his friends leaked online, leading to viral humiliation. Unable to bear the shame, Asha committed suicide. Four medical students, including Harshad, were sentenced to life imprisonment.