அவன் என்னை விட சின்ன பையன்.. வயசு வித்தியாசம் பாக்கம.. தாய்ப்பால் கேட்டு நுழைந்து அதை ரசிப்பாங்க..

நாம் எவ்வளவோ கிரைம் கதைகளை பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தியாவில் நடந்த ஒரு கிரைம் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என தொடர்ச்சியாக படம் எடுத்து அந்த படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகியது.

அது என்ன கிரைம் சம்பவம். அது என்ன படம்..? என்று விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம். 2000-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி, கர்நாடகாவின் காமாட்சிபாளையம் பகுதியில் 42 வயதான சுதாமணி என்ற பெண் தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரது கழுத்தில் கடும் தாக்குதல் தடயங்கள் இருந்தன. அருகில் ஒரு செம்பு தண்ணீர், சாப்பாட்டுத் தட்டு, மற்றும் சில பீடிகள் கிடந்தது ஆரம்பத்தில் போலீசை குழப்பியது.

வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததால், கொள்ளைதான் மோட்டிவ் என்று நினைத்தனர்.

ஆனால் பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி: சுதாமணி கொலைக்கு முன் பல மணி நேரம் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியிருந்தார்.

ஒரு வருடம் கழித்து, 2001 மே மாதம், ஹோசூர் அருகே கான்வென்ட் ரோடு பகுதியில் 70 வயதான மீனா மற்றும் அவரது வீட்டு வேலைக்காரி 30 வயதான பிரேமா மேரி ஆகியோர் அதே முறையில் கொலை செய்யப்பட்டனர்.

கழுத்தில் கடும் தாக்குதல், பாலியல் வன்புணர்வு, கொள்ளை – மேலும் கிரைம் சீனில் அதே பீடி மற்றும் மதுபாட்டில். இது ஒரே கும்பலின் வேலை என்பது தெளிவானது.இரு இடங்களுக்கும் இடைவெளி வெறும் 11 கி.மீ தான்.

பின்னர் ஆகஸ்ட் 2001-இல் 59 வயதான நிர்மலா மற்றும் அவரது மகள் 29 வயதான ராஜேஸ்வரி கொலை. இதுவரை 5 கொலைகள் – எல்லாம் தனியாக வாழும் அல்லது வயதான பெண்களை இலக்காகக் கொண்டவை. இந்தியா முழுவதும் பரபரப்பு.

போலீசார் பழைய ரெக்கார்டுகளைத் தோண்டினர்: 1990 முதல் 2001 வரை கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா எல்லைப் பகுதிகளில் இதே மோடஸ் ஆபரண்டியில் 40-60 கொலைகள்!

பெரும்பாலும் தனியாக வாழும் பெண்கள், கொள்ளை + பாலியல் வன்புணர்வு + கழுத்தை அறுத்துக் கொலை. கிரைம் சீனில் சுருட்டு, தண்ணீர் செம்பு போன்ற ஒற்றுமைகள்.இவ்வளவு கொலைகளுக்கும் எந்த க்ளூவும் இல்லை. கில்லர் யாரும் பார்க்காமல் தப்பித்தார். CCTV இல்லாத காலம். மூன்று மாநில போலீசாரும் தீவிர விசாரணை.

திருப்புமுனை: சுருட்டு க்ளூ!

தமிழ்நாடு போலீசார் சுதாமணி வீட்டு பின்புறம் கிடந்த பீடி மற்றும் கால்தடங்களை (செருப்பு சைஸ், டிசைன்) கவனித்தனர். கர்நாடகாவில் ஒரு போலீஸ் ஆபீசர் இளநீர் கடையில் இளநீர் குடித்துக்கொண்டு இருக்கும் போது பீடி புகைக்கும் சித்தாள்களை சந்தேகித்தார்.

அந்த பீடி குறிப்பிட்ட பகுதியில் மட்டும் விற்கப்படுவது தெரியவந்தது. கட்டிட வேலை சைட்டுகளில் வேலை செய்யும் சித்தாள்கள் அதை வாங்குவது வழக்கம்.அங்கு மஃப்டியில் சென்ற போலீசார் ஒரு தம்பதியை (லட்சுமி மற்றும் வெங்கடம்மா) பீடி வாங்கும் போது பிடித்தனர்.

விசாரணையில் உடைந்தனர்: இவர்கள் தண்டுப்பாளையம் (Dandupalya) கிராமத்தைச் சேர்ந்த கொள்ளை அடிப்பதை மட்டுமே தொழிலாக செய்து வரும் கொடூர கும்பல்!

கன்பெஷன்: லட்சுமி தலைமையில் 6-8 பேர் கொண்ட கும்பல் (லட்சுமி, வெங்கடம்மா, கிருஷ்ணா, ஹனுமக்கா, முனிகிருஷ்ணா, ரம்மா, திமாக்கா போன்றோர்). 1990களில் இருந்து நகரங்களின் அவுட்ஸ்கர்ட்ஸில் தனியாக வாழும் வயதான பெண்களின் வீடுகளை இலக்கு வைத்தனர்.

மோடஸ் ஆபரண்டி:

  • பெண்கள் (லட்சுமி, வெங்கடம்மா) டாய்லெட் கழுவுவது, புடவை விற்பது போல் வீட்டுக்குச் சென்று நோட்டம் விடுவார்கள். ஆண்கள் இருக்கிறார்களா, நாய் உண்டா, எப்படி வீட்டுக்குள் நுழைய வேண்டும், அவர்களின் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு என்ன../இப்படி அனைத்து விபரங்களையுள் தெரிந்துகொள்வர்.
  • சந்தேகம் வராமல் அஅவர்களின் வீட்டு நடமாட்டத்தை கண்காணிப்பர்.
  • தனியாக இருக்கும் நாளை தேர்வு செய்து, பின்புறம் ஏறி அல்லது அந்த குடும்பத்திற்கு தெரிந்த நபர்களின் பெயரையோ சொல்லி கதவு தட்டி உள்ளே நுழைவர்.
  • உள்ளே நுழைந்ததும் தாக்கி மயக்கமடைய செய்து, பெண்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளை அடிப்பது + ஆண்கள் அந்த பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து கழுத்தை அறுத்துக் கொலை.
  • கடைசியாக சடலத்தின் அருகே அனைவரும் அமர்ந்து பீடி புகைப்பது ஆண்களின் பழக்கம் – அதனால் கிரைம் சீனில் கிடந்தது.

ஒரு உயிர் பிழைத்த பெண்ணின் கன்பெஷன்: மழை பெய்கிறது. குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என அனுமதி கேட்டு வீட்டின் உள்ளே வந்த கும்பல், அவரைத் தாக்கி வன்புணர்வு செய்து கொலை செய்ய முயன்றது. ஆனால் அவர் உயிர் பிழைத்தார் – 6 நாட்கள் கோமாவில்!

கும்பல் அரெஸ்ட்: லட்சுமி, வெங்கடம்மா முதலில் பிடிபட்டனர். மற்றவர்கள் ஆந்திராவில் தலைமறைவாகி பிடிபட்டனர். 40-50 கொலைகளுக்கு மேல் ஒப்புக்கொண்டனர். பெங்களூரு கோர்ட்டில் தூக்கு தண்டனை, பின்னர் வாழ்நாள் முழுக்க ஆயுள் தண்டனையாக தண்டனை குறைப்பு.

இன்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா ஜெயிலில்.இந்தக் கேஸ் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா எல்லைப் பகுதிகளில் பெண்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியது. சுருட்டு மற்றும் செருப்புத் தடயங்கள் மூலம் கிராக் செய்யப்பட்டது போலீசாரின் தீவிர விசாரணைக்கு சான்று.

இன்றும் இந்தக் கும்பலின் கொடூரங்கள் நினைவில் இருக்கின்றன –இந்த கொடூர சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, இந்த கும்பலின் கிராமத்தின் பெயரிலேDandupalya,Dandupalya 2,Dandupalya 3 என கன்னடத்தில் படங்கள் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பொதுவாக தனியாக வாழும் பெண்கள் எந்த அளவுக்கு தங்களது பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.

Summary in English : The Dandupalya gang, led by Lakshmi, targeted lonely women in Karnataka-Tamil Nadu-Andhra border areas from 1990-2001. They robbed homes after reconnaissance, raped victims, and strangled them, committing over 40-60 murders. Traced via beedi stubs and footprints, the gang was arrested and sentenced to life imprisonment.