உடலுறவு கொள்ளும் போதெல்லாம் அதை கேட்கும் மனைவி.. நீதிமன்றத்தில் கணவர்.. வினோத புகாரால் அதிர்ந்த நீதிபதி..

பெங்களூரு: திருமணமான இரு ஆண்டுகளுக்கும் மேலாகியும் மனைவி உடல் ரீதியாக நெருக்கமாக இருக்க மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக ஒரு நாளைக்கு ரூ.5,000 கேட்பதாகவும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டி, மென்பொருள் பொறியாளர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு வயலிகாவல் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (28) என்பவர் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பிந்துஸ்ரீ என்பவருக்கும் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு முன்பே மனைவியின் தாயார் பணம் கேட்டதாகவும், திருமண செலவுகளுக்காக ரூ.3 லட்சம் மாமியார் கணக்குக்கு அனுப்பியதாகவும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். திருமணத்துக்குப் பிறகு, மனைவி சரியாக இல்லற வாழ்க்கை நடத்தவில்லை என ஸ்ரீகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

தன்னை உடல் ரீதியாக தாக்குவது, அந்தரங்க உறுப்புகளைத் தாக்கி கொலை முயற்சி செய்வது, குழந்தை பெற்றுக்கொள்ள மறுப்பது (உடல் தோற்றம் மாறிவிடும் என பயந்து), அதற்கு பதிலாக தத்து எடுக்க வலியுறுத்துவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.

மேலும், உடல் நெருக்கத்துக்கு தினசரி ரூ.5,000 கேட்பதாகவும், தன்னை நெருங்க முயன்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவதாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். வீட்டில் வேலை செய்யும் போது சத்தமாக பாட்டு போட்டு நடனமாடி தொந்தரவு செய்ததால் வேலையையும் இழந்ததாக அவர் கூறுகிறார்.

விவாகரத்து கோரிய போது, மனைவி ரூ.45 லட்சம் இழப்பீடு கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்பேரில் ஸ்ரீகாந்த் வயலிகாவல் போலீசில் புகார் அளித்தார். வழக்கு சதாசிவநகர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், ஸ்ரீகாந்தின் எழுத்துப்பூர்வ புகாரில் தினசரி ரூ.5,000 கோரிக்கை குறிப்பிடப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனால் வழக்கில் சில சந்தேகங்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம், பிந்துஸ்ரீ தரப்பில் அனைத்து குற்றச்சாட்டுகளும் மறுக்கப்பட்டுள்ளன. கணவரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், உடல் ரீதியாக தாக்கியதாகவும், வீட்டு வேலைக்காரி போல நடத்தியதாகவும் பிந்துஸ்ரீ எதிர்புகார் அளித்துள்ளார்.

பொதுமக்களின் கவனத்தைப் பெறவே கணவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பரப்புவதாக அவர் கூறியுள்ளார். போலீசார் இரு தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த வழக்கு சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Summary in English : A Bengaluru software engineer, Srikant, accused his wife of demanding ₹5,000 daily for physical intimacy, refusing closeness for over two years, physically assaulting him, and threatening suicide. He filed a police complaint seeking divorce, while she demanded ₹45 lakh compensation and denied all allegations, calling them defamatory.