நீ அழகா இருக்க.. அதான் பிரச்சனையே.. நிச்சயமான காதலி.. உடலுறவு முடிந்ததும் அரங்கேறிய கொடூரம்..

2025-ஆம் ஆண்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஸ்ரீபெரும்புதூர். நகரின் புறநகர்ப் பகுதியில், மேவலூர்குப்பம் ஏரிக்கரையோரமாக ஒரு சின்ன வாடகை வீடு. அந்த வீட்டில் ஐந்து பெண்கள் தங்கியிருந்தனர்.

ஐந்து பேரும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சின்ன வயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்த, ஒன்றாகப் படித்த, ஒன்றாகக் கனவு கண்ட நண்பிகள்.

கல்லூரி முடிந்ததும், “வேலைக்குப் போய் சுதந்திரமா வாழலாம்” என்று ஐவரும் கை கோர்த்து இங்கு வந்து தங்கினர்.அந்த ஐந்து பேரில் ஒருத்திதான் சௌந்தர்யா. 24 வயது. கண்ணைப் பறிக்கும் அழகு.சினிமா நடிகை போல உடல் வாகு. சிரிப்பில் ஒரு மாயம். இப்படி இருக்கும் பெண்ணை பசங்க விடுவாங்களா என்ன..? ஆம், அவளுக்கு ஒரு காதலன் இருந்தான் – தினேஷ். 25 வயது.

இருவரும் ஒரு வகையில் தூரத்து உறவினர்கள். எட்டு வருடங்களாகக் காதல். தினேஷ் அவளுக்காகவே R15 பைக் வாங்கி, இருவரும் ஸ்ரீபெரம்பதூரின் சாலைகளில் பறந்தனர்.

காதலின் உச்சத்தில் இருந்தவர்கள்.இருவீட்டாரும் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும். ஒரு வழியாக சமாதானம் ஆகி, கடந்த 2025 ஏப்ரல் – நிச்சயதார்த்தம் முடிந்தது. செப்டம்பரில் திருமணம் என்று தேதி குறிக்கப்பட்டது. “இனி நமக்கு சொர்க்கம்தான்” என்று இருவரும் கனவு கண்டனர்.ஆனால் காதல் எப்போதும் நேர்கோட்டில் போவதில்லை.

ஜூலை 17, 2025. காலை 8:30 மணி.

தினேஷ் வழக்கம் போல கம்பெனிக்குச் செல்லும் வழியில் சௌந்தர்யாவின் வீட்டைப் பார்த்தான். நால்வர் மட்டுமே புறப்பட்டுச் சென்றனர். சௌந்தர்யா இல்லை. மொபைலில் அழைத்தான் – சுவிட்ச் ஆஃப். மனதில் ஏதோ ஒரு பயம்.

வேகமாக வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினான். கதவு திறந்தது. ஆனால், திறந்தது சௌந்தர்யா இல்லை. அவள் கம்பெனியில் வேலை செய்யும் சக ஊழியன் விக்னேஷ் என்ற இளைஞர். உள்ளே பெட்ரூமில் சௌந்தர்யா. இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். உடலுறவு முடிந்ததும் தினேஷ் கதவை தட்டும் சத்தம். அதிர்ந்து போனார்கள். தினேஷின் கண்களில் ரத்தம் தெரித்தது. கொடூர சம்பவத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

“என்னடி இது?” என்று கத்தினான் தினேஷ்.

சௌந்தர்யா அமைதியாக, கண்களில் ஒரு வெறுப்புடன், “நமக்கு கல்யாணம் வேண்டாம் தினேஷ். இப்போலாம், எனக்கு உன்னை பிடிக்கல. நீ என்னை ரொம்ப சந்தேகப்படுற.. எனக்கு பிடித்தவனோடுதான் இருப்பேன், நீ போயிடு” என்று சொன்னாள்.

தினேஷ் உலகமே தலைகீழாக ஆகிவிட்டதுபோல உணர்ந்தான். எட்டு வருட காதல். திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. இப்போ, வேற ஒருத்தன் கூட படுக்கையில், எல்லாம் ஒரு நொடியில் சிதறியது.அந்த நாள் முதல் தினேஷ் மாறிப்போனான்.

மூன்று நாள் சௌந்தர்யா மீது சந்தேகம். நைட்டில் போன் எங்கேஜ்டு. வாட்ஸ்அப்பில் எப்போதும் ஆன்லைன். “யாருடி பேசுறது?” என்று கேட்டால் அப்பா, அம்மாகிட்ட பேசுறேன்னு சொல்லுறா.. சண்டை.

சௌந்தர்யாவின் தோழி, அவளின் உண்மை முகத்தை தினேஷிடம் கூறினால். தினேஷ், சௌந்தர்யா முன்ன மாதிரி இல்ல, வேற ஒரு பையன் கூட தினமும் பேசிகிட்டு இருக்கா.. நான் கூட உன் கூட தான் பேசுறான்னு நினைச்சேன்.. ஆனா, அவ வேற ஒருத்தன் கூட பேசிட்டு இருக்கா.. உன்னை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு.. எட்டு வருஷமா லவ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. ஆனா, இப்போ இவ இப்படி பண்றது எனக்கே மனசு கேக்கல.. என்று கூறினாள். தினேஷிற்கு பைத்தியம் பிடித்தது போல ஆகிவிட்டது.

தினேஷ் ஒவ்வொரு நாளும் உள்ளுக்குள் எரிந்தான். “என் வாழ்க்கை சௌந்தர்யாதான். அவளில்லாம என்னால் வாழ முடியாது” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டான்.

ஜூலை 20, 2025. காலை 9:15 மணி.

சௌந்தர்யா உடல் நிலை சரியில்லை என்று நண்பிகளிடம் சொல்லி வீட்டிலேயே இருந்தாள். நால்வரும் கம்பெனிக்குப் புறப்பட்டுச் சென்றனர். “இன்னிக்கு தினேஷ் வருவான் போலிருக்கு, ஜாலியா இரு” என்று கிண்டலடித்துச் சென்றனர்.தினேஷ் வந்தான். கையில் ஒரு பெரிய கத்தியும் இரும்பு ராடும்.கதவு திறக்கப்பட்டதும் உள்ளே நுழைந்தான். சௌந்தர்யா அதிர்ந்து நின்றாள்.“ஏன்டி என்னை ஏமாற்றின?” என்று கேட்டான்.

அவளால் பேச முடியவில்லை.தினேஷ் கண்களில் சிவந்த ரத்தம். “நீ ரொம்ப அழகா இருக்க. அதனாலதான இப்படி திமிரோட இருக்க... உன் அழகை இனி யாரும் பார்க்கக் கூடாது” என்று சொல்லி ராடால் அவள் முகத்தில் ஓங்கி அடித்தான்.முதல் அடி. இரண்டாவது. ஐந்து, பத்து, இருபது என தன்னுடைய வெறி தீர ரத்தம் சிதறியது. அலறல் அடங்கியது.

அவன் கத்தியால் குத்தினான். மீண்டும் மீண்டும். ரத்த வெள்ளத்தில் அவள் உயிர் பிரிந்தது.அவன் நின்று பார்த்தான். அந்த ரத்தத்தை. அந்த சிதைந்த முகத்தை. வாய் விட்டு சிரித்தான். “இப்போ, இனி நீ அழகா இல்லை.. இப்போவும் திமிரு இருக்கா உனக்கு..” என்று கத்தினான்.பிறகு R15 பைக்கில் ஏறி நாகப்பட்டினம் நோக்கிப் பறந்தான்.

அங்கு போலீஸ் ஸ்டேஷனில் நின்று, கையில் ரத்தம் ஒழுகும் கத்தியுடன், “நான் சௌந்தர்யாவை கொலை பண்ணிட்டேன்” என்று சரண்டரானான்.போலீஸ் அதிர்ந்தது. பெற்றோர்கள் அதிர்ந்தனர். நண்பிகள் அதிர்ந்தனர்.எட்டு வருட காதல் ஒரு கொடூரக் கொலையாக முடிந்தது.

காதல் தோல்வியைத் தாங்க முடியாத ஒரு மனிதன், தன்னையும் தன் காதலியையும் அழித்தான். காதல் ஒரு போதை. அதைத் தாண்டி வாழப் பழகினால் வாழ்க்கை அழகாகும்.

இல்லையேல்… இப்படி ரத்தத்தில் முடியும்.காதலில் ஏமாந்துவிட்டேன் என்று யோசிப்பவர்களே…விலகிச் செல்பவர்களை விட உங்களுக்கு வாழ்க்கை இருக்கிறது.அதை வாழுங்கள்.கொலை செய்யாதீர்கள்.கொல்லப்படாதீர்கள்.இது ஒரு உண்மைக் கதை.இது ஒரு எச்சரிக்கைக் கதை.

### Summary In Sriperumbudur, 25-year-old Dinesh, engaged to his 8-year love Saundarya, catches her cheating. Unable to bear the betrayal, he brutally murders her with a rod and knife on July 20, 2025, disfiguring her face, then surrenders with the bloodied weapon.