Posts

Showing posts with the label psycho lover

நீ அழகா இருக்க.. அதான் பிரச்சனையே.. நிச்சயமான காதலி.. உடலுறவு முடிந்ததும் அரங்கேறிய கொடூரம்..

Image
2025-ஆம் ஆண்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஸ்ரீபெரும்புதூர். நகரின் புறநகர்ப் பகுதியில், மேவலூர்குப்பம் ஏரிக்கரையோரமாக ஒரு சின்ன வாடகை வீடு. அந்த வீட்டில் ஐந்து பெண்கள் தங்கியிருந்தனர். ஐந்து பேரும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சின்ன வயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்த, ஒன்றாகப் படித்த, ஒன்றாகக் கனவு கண்ட நண்பிகள். கல்லூரி முடிந்ததும், “வேலைக்குப் போய் சுதந்திரமா வாழலாம்” என்று ஐவரும் கை கோர்த்து இங்கு வந்து தங்கினர்.அந்த ஐந்து பேரில் ஒருத்திதான் சௌந்தர்யா. 24 வயது. கண்ணைப் பறிக்கும் அழகு.சினிமா நடிகை போல உடல் வாகு. சிரிப்பில் ஒரு மாயம். இப்படி இருக்கும் பெண்ணை பசங்க விடுவாங்களா என்ன..? ஆம், அவளுக்கு ஒரு காதலன் இருந்தான் – தினேஷ். 25 வயது. இருவரும் ஒரு வகையில் தூரத்து உறவினர்கள். எட்டு வருடங்களாகக் காதல். தினேஷ் அவளுக்காகவே R15 பைக் வாங்கி, இருவரும் ஸ்ரீபெரம்பதூரின் சாலைகளில் பறந்தனர். காதலின் உச்சத்தில் இருந்தவர்கள்.இருவீட்டாரும் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும். ஒரு வழியாக சமாதானம் ஆகி, கடந்த 2025 ஏப்ரல் – நிச்சயதார்த்தம் முடிந்தது. செப்டம்பரில் திருமணம் என்று தேதி குறிக்கப்பட...