துறையூர் போலீசார், 26 வயது பள்ளி ஆசிரியையை, தனது 17 வயது மாணவனை ரகசியமாக திருமணம் செய்து வைத்ததாக கூறி போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் மற்றும் அதே பள்ளியில் பணியாற்றும் ஊர்மிளா (26)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் ஒரே நாளில் காணாமல் போனதாக மாணவரின் பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆரம்பத்தில் காணாமல் போன வழக்காக பதிவு செய்யப்பட்டது. பின்னர் விசாரணையில் இருவரும் உறவில் இருந்தது தெரியவந்தது. மாணவரின் செல்போன் எண் மற்றும் ஆசிரியையின் எண் ஒரே நேரத்தில் செயலிழந்திருந்தது.
பின்னர் புதிய சிம் கார்டு மூலம் போன் இயக்கப்பட்டதை கண்டறிந்த போலீசார், திருச்சியில் அவர்கள் தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்தனர். விசாரணையில் இருவரும் தஞ்சாவூரில் உள்ள கோவிலில் ரகிசயமாக திருமணம் செய்து கொண்டு ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தது உறுதியானது.
18 வயதுக்கு கீழ் திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்படாததால், ஆசிரியை ஊர்மிளா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மாணவர் சிறார் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், பள்ளியில் படிக்கும் போதே பலமுறை மாணவனும், ஆசிரியையும் தனிமையில் சந்தித்து உடலுறவு கொண்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது.
தமிழ்நாட்டில் தொடர் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள்
கடந்த வாரத்தில் தமிழ்நாட்டில் மூன்று வேறுபட்ட வழக்குகளில் இரண்டு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஒரு உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டனர்.
- திருவண்ணாமலை: அரசு உதவி பெறும் குழந்தைகள் இல்லத்தின் 36 வயது வார்டன் துரைபாண்டி மற்றும் நிர்வாகி சகாயராஜ் ஆகியோர் 7 குழந்தைகளை பாலியல் துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டனர்.
- மதுரை மேலூர்: 51 வயது அறிவியல் ஆசிரியை பாரதி இரண்டு பெண் மாணவிகளை பாலியல் துன்புறுத்தியதாக கைது.
- கன்னியாகுமரி தெற்கு தாமரைக்குளம்: 22 வயது கல்லூரி மாணவி ஒருவர் உதவி பேராசிரியரால் பாலியல் துன்புறுத்தப்பட்டதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு.
- தருமபுரி : எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி, மூன்று ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கர்ப்பமானதை தொடர்ந்து மூன்று ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்.
இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது கல்வித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary : A 26-year-old school teacher from Thuraiyur, Tiruchirappalli district, was arrested on March 24 for allegedly marrying her 17-year-old student. Both went missing from school on March 5. Police traced them to Trichy, where they had married at a temple in Thanjavur. The teacher was booked under POCSO Act and remanded to custody.

