11-ம் வகுப்பு மாணவனுடன் பலமுறை தனிமை.. 26 வயது ஆசிரியை செய்த கொடூரம்.. இறுதியில் அரங்கேறிய அசிங்கம்..
துறையூர் போலீசார், 26 வயது பள்ளி ஆசிரியையை, தனது 17 வயது மாணவனை ரகசியமாக திருமணம் செய்து வைத்ததாக கூறி போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் மற்றும் அதே பள்ளியில் பணியாற்றும் ஊர்மிளா (26)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் ஒரே நாளில் காணாமல் போனதாக மாணவரின் பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆரம்பத்தில் காணாமல் போன வழக்காக பதிவு செய்யப்பட்டது. பின்னர் விசாரணையில் இருவரும் உறவில் இருந்தது தெரியவந்தது. மாணவரின் செல்போன் எண் மற்றும் ஆசிரியையின் எண் ஒரே நேரத்தில் செயலிழந்திருந்தது. பின்னர் புதிய சிம் கார்டு மூலம் போன் இயக்கப்பட்டதை கண்டறிந்த போலீசார், திருச்சியில் அவர்கள் தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்தனர். விசாரணையில் இருவரும் தஞ்சாவூரில் உள்ள கோவிலில் ரகிசயமாக திருமணம் செய்து கொண்டு ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தது உறுதியானது. 18 வயதுக்கு கீழ் திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்படாததால், ஆசிரியை ஊர்மிளா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலு...