ஆணுறை பாக்கெட்டுகளை வைத்திருந்த 25 வயது மனைவி! காரணம் கேட்ட 21 வயது கணவனுக்கு நடந்த கொடூரம்!

சென்னை : தென் தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து கனவுகளுடன் சென்னை வந்த இளைஞன்... கட்டிட வேலை செய்து குடும்பத்துக்கு உதவி வந்தான்.

ஆனால் அந்த கனவு ஒரு நரக வாழ்க்கையாக மாறியது. இறுதியில் அவன் உயிரைப் பறித்தது அவனே திருமணம் செய்து கொண்ட மனைவியின் கைகளால்!

(இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) 

  • குமரன் (21) – திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி
  • சரண்யா (25) – சென்னையில் அதே வீட்டின் தரைத்தளத்தில் வசித்த பெண்
  • பிரியா (24) – சரண்யாவுடன் தங்கியிருந்த நண்பி

குமரன் சென்னை வந்து ஒரு பழைய வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு தங்கினான். கீழே தரைத்தளத்தில் சரண்யாவும், பிரியாவுன் தனியாக வசித்து வந்தனர்.

அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சில ஆண்கள் டிப் டாப்பாக வந்து செல்வதை கவனித்தாலும், “என் உறவினர்கள்” என்று சரண்யா சொன்னாள்.

பழக்கம்... நட்பு... பின்னர் காதல்... இருவரும் தனிமையில் அதிக நேரம் செலவிட்டனர். உல்லாசமாக இருக்க தொடங்கினர்..

ஒரு நாள் குமரன் உணர்ச்சி வசப்பட்டு,“உனக்கு என்னைவிட வயது அதிகம்தான்... ஆனாலும் உன்னை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என்றான்.

முதலில் தயங்கிய சரண்யா பின்னர் சம்மதித்தாள். உறவினர்கள் இல்லாமல், நண்பர்கள் முன்னிலையில் ஒரு கோயிலில் இரண்டு மாலை, ஒரு தாலியுடன் திருமணம் நடந்தது. ஒரு சிறிய ஹோட்டலில் நண்பர்களுக்கு விருந்து. திருமணம் நடந்து முடிந்தது. முதல் மூன்று மாதங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால்...

ஒரு கட்டத்தில், வீட்டுக்கு திருமணமாகாத இளைஞர்கள் அடிக்கடி வருவதை குமரன் கவனித்தான். சந்தேகம் வளர்ந்தது. ஒருநாள் சரண்யாவின் ஹேண்ட்பேக்கில் பத்திற்கும் மேற்பட்ட ஆணுறைகள் இருப்பதைப் பார்த்தான். கோபத்தில் கேட்டான்.

அப்போதுதான் உண்மை வெளியானது...

“நான் இப்படித்தான் பணம் சம்பாதிக்கிறேன். ஒரு கஸ்டமருக்கு 5,000 முதல் 10,000 ரூபாய் வரை. மாதத்துக்கு 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை வரும். இந்தப் பணத்துலதான் வீட்டு வாடகை, உன் செலவு எல்லாம் போகுது. வருமானத்தில் உனக்கு பாதி, எனக்கு பாதி. நீ என் கணவனா இரு... கொஞ்ச நாள் இப்படி சம்பாதிச்சிட்டு, பிறகு ஊருக்கு போய் சந்தோஷமா வாழலாம்” என்று சரண்யா தைரியமாகச் சொன்னாள்.

அதிர்ந்து போன குமரன்... ஆனால் இலட்சக்கணக்கில் பணம் வருவதால் மெல்ல மெல்ல சம்மதித்தான். ஒரு கட்டத்தில், சரண்யா தன் “நண்பர்களுடன்” உல்லாசமாக இருப்பதை குமரன் முன்னிலையிலேயே செய்ய ஆரம்பித்தாள்.

குமரனுக்கு மாதம் மூன்று-நான்கு லட்சம் கொடுத்தாள். அந்தப் பணத்தில் அவன் ஊரில் நிலம் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தான். அதே சமயம், மனைவி சரண்யாவுடன் தங்கியிருந்த தோழி பிரியாவுடனும் கள்ளத்தொடர்பில் இருந்தான் குமரன்.

பிரியாவும், சரண்யாவை போல மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடியவள். ஆனால், யாரையும் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் சரண்யாவின் நிழலில் பாதுகாப்பாக வளர்ந்து வந்தால்.

சரண்யாவின் சம்மதத்துடன் தான்  அவளுடைய கணவன் குமரனுடன் உல்லாசமாக இருந்து வந்தால். குமரன் சில நேரங்களில் சரண்யாவை உல்லாசத்திற்கு அழைக்கும் போது, உடம்பு ரொம்ப டயர்டா இருக்கு, பிரியாகிட்ட போ.. அவ உன்னை கவனிச்சுக்குவா... என்று சொல்லி அனுப்பி வைப்பாள் சரண்யா.

மறுப்பக்கம், வீடு கட்டி முடிக்கப்போகும் தருவாயில் இருந்தது. ஆனால், காலப்போக்கில் குமரனுக்கு மனசாட்சி கொல்லை செய்தது. வாக்குவாதங்கள், தாக்குதல்கள்... ஒருநாள் உறுதியாகச் சொன்னான்,

“இந்தத் தொழில விடு. இத்தனை நாள் நீ சேமித்து வைத்துள்ள பணத்தை எனக்கு கொடு. நாம ஊருக்கு போய் நிம்மதியா வாழலாம்.”

சரண்யா உறுதியாக மறுத்தாள்.

“ருசி கண்ட பூனை அடுப்பங்கரை ஏறும் என்பதை போல, இந்தத் தொழில தான் அதிக பணம். வேணும்னா நீ ஊருக்கு போய்வா... நான் இங்கேயே இருந்து பணம் அனுப்புறேன்.. என் அழகு.. இளமை இருக்கும் வரைதான் சம்பாதிக்க முடியும்..”

இதற்கு குமரன் கடுமையாக எதிர்த்தான். பணம் மட்டும் தான் வருது, ஆனால், என் முன்னாலேயே உன்னுடன் நிறைய பேர் தனிமையில் இருப்பதை என்னால் ஜீரணிக்க முடியல.. இந்த வாழ்க்கை நரகம் போல இருக்கு.. இந்த தொழில் வேணாம் விட்டுடு.. என்று கதறினான் குமரன்.

தகராறு முற்றியது. சரி நான் தொழிலை விட்டுடுறேன். நீ பிரியாவை மறந்துடனும் என்று கோரிக்கை வைத்தாள் சரண்யா. ஆனால், குமரன் இதற்கு அதற்கு சம்பந்தம் இல்லை என்றும், பிரியாவுடன் நான் உறவை தொடர்வேன். அவளும் எனக்கு மனைவி மாதிரி தான் என்று சண்டையிட்டுள்ளான்.

(பாத்திங்களா மக்களே.. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.. கேட்டாலே காது கூசுது.. கலிகாலம்) 

சண்டை முற்றி, சரண்யாவை கடுமையாக தாக்கி, காயம் ஏற்படுத்தினான். இதனால், கடும் கோபத்தில் இருந்தால் சரண்யா.

ஒரு நாள் இரவு... சரண்யா தன் சில “நண்பர்களை” வரவழைத்தாள். அவர்களுடன் சேர்ந்து குமரனுக்கு மது கொடுத்து போதையேற்றினர். மயக்கத்தில் இருந்த குமரனை அவர்கள் பிடித்துக் கொண்டிருக்க... சரண்யா ஒரு கத்தியால் அவனது ஆணுறுப்பை அறுத்து கொலை செய்தாள்.

பின்னர் அவள் தப்பி ஓடினாள்.

பத்து நாட்களுக்குப் பிறகு... வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் வீட்டு உரிமையாளரிடம் புகார் கொடுக்க, ஜன்னல் வழியாக பார்த்த போது குமரனின் சடலத்தை பார்த்து அதிர்ந்த வீட்டின் உரிமையாளர் காவல் துறையிடம் புகார் கொடுத்தார்.

போலீசார் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது... குமரன் ஆணுறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தான்.

தொடர்ந்த விசாரணையில் சரண்யாவும், பிரியாவும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் மேற்கண்ட அனைத்து அதிர்ச்சி தகவல்களும் வெளியாகின.

பணம், வசதி, சொகுசு வாழ்க்கைக்காக எந்த அளவுக்கு ஒரு மனிதன் தன்னை இழக்கிறான்... எந்த அளவுக்கு ஒரு உறவு நரகமாக மாறுகிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு கொடூர உதாரணமாக அமைந்துள்ளது.

Summary : A 21-year-old construction worker from southern Tamil Nadu moved to Chennai, fell in love with his 25-year-old neighbor, married her, and later discovered her source of high income. Conflicts arose over continuing that lifestyle, leading to a tragic end after intense disputes.