கொல்கத்தாவின் புறநகரில், ஹாவ்ரா அருகே உள்ள ஒரு பெரிய தோட்டப் பண்ணை. பெயர் ‘கிருஷ்ணாபூர் டிகி’. மாலை மயங்கும் நேரம். டிராக்டர்களின் சத்தம் அடங்கியிருந்தது. காற்றில் புல் மணமும், ஈரமண்ணின் வாசமும் கலந்து வந்தது.
அர்ஜுன் (34) – டிராக்டரை நிறுத்திவிட்டு, பீடியை பற்றவைத்து ஆழமாக இழுத்தான். உடல் திடகாத்திரமானது. ஆனால் கண்களில் எப்போதும் ஒரு சந்தேகக் கூர்மை. அவன் பார்க்கும் எல்லாவற்றிலும் சந்தேகம் பிறந்தது. அவனுடைய காதலி சாய்மா (36) அந்தத் தோட்டத்திலேயே வேலை செய்து வந்தாள்.

கணவனை இழந்த சாய்மாவின் முகத்தில் சிரிப்பு மிக அரிது. கண்களில் எப்போதும் ஒரு அடக்க முடியாத கோபம். அவளுடைய மகள் நீலா (17) இப்போது பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, தோட்ட வேலையில் உதவியாக இருந்தாள். நீலாவின் கண்கள் பெரும்பாலும் தரையைப் பார்த்தபடியே இருக்கும்.
நீலாவின் காதலன் ரியான் – இருபத்தொரு வயது இளைஞன். கைகள் மண்ணாலும் வியர்வையாலும் கறைபடிந்திருந்தாலும், நீலாவைப் பார்க்கும்போது அவன் முகம் ஒளிரும்.
அர்ஜுன் அவர்களைப் பார்த்தான். உதடுகள் சிரித்தன. ஆனால் அது சிரிப்பல்ல – கத்தியின் முனை போல கூர்மையான ஒரு புன்னகை.
“என்னடி நீலா… இன்னிக்கும் உன் காதலன் கூடவா? இந்தப் பையன் உன்ன விட்டுட்டு ஓடிப்போனா உனக்கு என்ன ஆகும் தெரியுமா?”
நீலா தலையைக் குனிந்தாள். கன்னங்கள் சிவந்தன.சாய்மா பல்லைக் கடித்தாள்.ரியான் முஷ்டியை இறுக்கினான்.
இது அவர்களுக்கு தினசரி நாடகமாகிவிட்டிருந்தது.
ஒரு கட்டத்தில் அர்ஜுன் தன் காதலியான சாய்மாவைக்கூட சந்தேகப்படத் தொடங்கினான். மற்ற ஆண்களைப் பற்றி கேள்வி கேட்டான். அவமானப்படுத்தினான். மகளையும் விட்டுவைக்கவில்லை. ரியானுடன் அடிக்கடி சண்டையிட்டான். காதலி சாய்மாவிடம், ரியான் உன் மகளை மட்டும் காதலிக்கிறானா..? இல்லை, உன்னையுமா..? என்று கேட்டு நொடித்த்தான்.
எல்லாவற்றுக்கும் மேலாக – அவன் குரல் மிக உரத்தது. தோட்டம் முழுக்க கேட்கும் அளவுக்கு.
அன்று இரவு ஒன்பது மணி. பண்ணையின் பின்புறம் முழு இருள். அர்ஜுன் சிரித்தபடி வந்தான். சாய்மா அழைத்திருந்தாள். “இருட்டுல கொஞ்சம் பேசணும்” என்று சொல்லியிருந்தாள்.
அவன் வந்ததும் ரியான் ஒரு மது பாட்டிலை நீட்டினான்.
“இன்னிக்கு என் பிறந்தநாள் அண்ணா… கொஞ்சம் குடிங்க.”
அர்ஜுன் கேலியாகச் சிரித்தான்.“என்ன புதுசா இருக்கு? நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னை முடிக்கப் போறீங்களா?”
ரியான் வருத்தப்பட்ட முகத்தோடு சொன்னான்,“என்ன இருந்தாலும் நீங்க தான் எங்களுக்கு எல்லாமே… இப்படிப் பேசுறீங்களே…”
முதல் குடியில் சிரிப்பு.இரண்டாவது ரவுண்டில் தள்ளாட்டம்.மூன்றாவதில் கண்கள் மங்கின.
சாய்மா அமைதியாக நின்றாள். அவள் கண்களில் கண்ணீர் இல்லை. கோபம் மட்டுமே தேங்கியிருந்தது. பல மாதங்களாக, பல ஆண்டுகளாக தேங்கிய கோபம்.
ரியான் பின்னால் நின்றான்.அர்ஜுன் தரையில் உட்கார்ந்து போதையில் உளறிக்கொண்டிருந்தான்.
அப்போது சாய்மா மெதுவாக முன்னால் வந்தாள்.“வா… பக்கத்துல உக்காருடி” என்று உரிமையோடு அழைத்தான் அர்ஜுன்.அவன் பேண்ட்டை கழற்றத் தொடங்கினான்.
சாய்மா அமைதியாக அருகில் சென்று அமர்ந்தாள்.உடனே வழக்கம்போல அவன் கைகள் அவள் உடலில் அலையத் தொடங்கின.
ஆனால் அடுத்த சில நிமிடங்களில்…சாய்மாவின் கைகள் அர்ஜுனின் கழுத்தைப் பிடித்தன.ரியான் பக்கத்தில் வந்து உதவினான்.இருவரும் சேர்ந்து இறுக்கினர்.
அர்ஜுன் திமிறினான்.கால்கள் உதைத்தன.கைகள் துடித்தன.ஆனால் மது அவனை மிகவும் பலவீனப்படுத்தியிருந்தது.குரல் வெளியே வரவில்லை.
பத்து நிமிடங்கள்.பிறகு அமைதி.
இருளில் இரண்டு நிழல்கள் மட்டும் நின்றன.அர்ஜுனின் உடல் தரையில் சரிந்து கிடந்தது.
சாய்மா மெதுவாக ரியானைப் பார்த்தாள்.“இனி யாரும் நம்மை தொல்லை செய்ய மாட்டாங்க.”
ரியான் தலையசைத்தான்.ஆனால் அவன் கண்களில் மகிழ்ச்சி இல்லை.பயம் இருந்தது. மிகப் பெரிய பயம்.
அடுத்த நாள் காலை, தோட்டத்தில் ஒரு உடல் கிடந்தது.போலீஸ் வந்தது. விசாரணை தொடங்கியது.குடிபோதையில் இறந்துவிட்டான் என்று ஊர் முழுக்க பேச்சு.
ஆனால் கொல்கத்தா போலீஸ் அப்படியெல்லாம் சீக்கிரம் ஏமாறுபவர்கள் அல்ல.இரண்டே நாட்களில் உண்மை வெளியே வந்தது. பாட்டிலில் இருந்த கை ரேகைகள், உயிருக்கு போராடும் போது அர்ஜுன் கால்கள் உதைத்ததில் கிளறிவிடப்பட்ட மண்ணின் தடம். கழுத்தில் இருந்த நகக்கீறல். இது கொலை என்று போலீசுக்கு காட்டியது.
சாய்மாவும் ரியானும் கைது செய்யப்பட்டனர்.
அன்றிலிருந்து கிருஷ்ணாபூர் டிகி தோட்டத்தில் டிராக்டர் ஓடினாலும், யாரும் அதிகம் பேசுவதில்லை.இரவு ஒன்பது மணிக்கு அங்கு யாரும் தனியாக நிற்பதில்லை.
ஏனென்றால்…அந்த இருட்டில் இன்னும் ஒரு கழுத்து நெரிப்பு நின்றுகொண்டிருப்பதாக எல்லோருக்கும் தோன்றியது.
Summary : In a quiet farm near Kolkata, a man in a relationship with a widow becomes controlling and suspicious. He harasses her young daughter, causing deep distress. The woman and her daughter's boyfriend, fearing ongoing harm, decide to act together one evening after offering him drinks, leading to his sudden death. The truth emerges soon after.

