அமேதி மாவட்டத்தின் அமைதியான கிராமத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர் சுனில் குமார் தன் மனைவி பூனம் மற்றும் இரு சிறுமிகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
ஆறு வயது திரிஷ்டி பள்ளிக்கூடம் செல்லத் தொடங்கியிருந்தாள்; ஒரு வயது குழந்தை இன்னும் தவழ்ந்து கொண்டிருந்தது. வீட்டில் எப்போதும் குழந்தைகளின் சிரிப்பும், சுனில் கேட்கும் சினிமா பாடல்களும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

ஆனால் யாருக்கும் தெரியாத ஒரு இரகசியம் பூனத்தின் வாழ்க்கையில் நிழலாடிக்கொண்டிருந்தது.
சந்தன் வர்மா. கிராமத்தின் இளைஞன். தோற்றத்தில் அமைதியானவன், ஆனால் உள்ளுக்குள் கொந்தளிப்பவன். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, பூனம் அவனைச் சந்தித்தாள்.
முதலில் உதவி கேட்டு வந்தவன், பிறகு அடிக்கடி வீட்டுக்கு வரத் தொடங்கினான். சுனில் பள்ளியில் இருக்கும் நேரங்களில், பூனமும் சந்தனும் பேச ஆரம்பித்தனர். பேச்சு நட்பானது, நட்பு காதலானது, காதல் தகாத உறவானது.
சந்தன் பூனத்திடம், “நீ இல்லாம என்னால் வாழ முடியாது” என்று சொல்லிக்கொண்டிருந்தான். பூனம் முதலில் பயந்தாள், பிறகு அவனை அனைத்துக்கொண்டாள்.

ஆனால், காலப்போக்கில் அவளுக்கு பயம் மேலோங்கியது. குழந்தைகள் வளர்ந்து கொண்டிருந்தனர். கணவன் நம்பிக்கையாக இருந்தான், தன்னை ராணி போல பார்த்துக்கொள்கிறான்.
கணவனின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் குற்ற உணர்ச்சியில் துடித்தாள் பூனம். ஒருநாள் திடீரென பூனம் முடிவெடுத்தாள்: இந்த உறவை முறித்துக்கொள்ள வேண்டும். நான் தற்போது கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறினாள்.
சந்தன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. “நீ என்னை விட்டு போனால், உன்னையும் உன் குடும்பத்தையும் விடமாட்டேன்” "நீ கர்ப்பமாக இருந்தால் எனக்கு பிரச்சனை இல்லை, பின் பக்கம் பண்ணலாம்.," என்று மிரட்டினான். பூனம் பயந்து போனாள்.

ரகசியமாக போலீஸ் நிலையத்துக்குச் சென்று, சந்தன் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் கொடுத்தாள். சந்தன் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் அவன் மறைந்து கொண்டான்.
ஆனால் உள்ளுக்குள் ஒரு கொடூரத் திட்டம் தீட்டினான்.
ஒரு வியாழக்கிழமை இரவு. சுனில் வீட்டில் பாடம் தயாரித்துக்கொண்டிருந்தான். குழந்தைகள் தூங்கிவிட்டனர். பூனம் சமையலறையில் இருந்தாள். திடீரென கதவு தட்டப்பட்டது. பூனம் கதவைத் திறந்தாள் – அங்கு சந்தன் நின்றிருந்தான், கையில் துப்பாக்கி.
“நீ என்னை ஏமாற்றிவிட்டாய்!” என்று கத்தினான்.
பூனம் பின்னால் ஓட முயன்றாள். ஆனால், சந்தன் உள்ளே புகுந்தான். சுனில் எழுந்து நிற்கும் முன்னரே முதல் குண்டு பாய்ந்தது. சுனில் நெஞ்சில் சுடப்பட்டு தரையில் விழுந்தான். பூனம் அலறினாள். குழந்தைகள் அழுது எழுந்தனர்.

சந்தன் நிற்கவில்லை. ஒவ்வொரு குண்டாக – பத்து குண்டுகள். பூனம், திரிஷ்டி, ஒரு வயது குழந்தை... அனைவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
கொலை முடிந்ததும் சந்தன் தன் துப்பாக்கியைத் திருப்பினான் – தன்மீது. ஆனால் துப்பாக்கி தோல்வியடைந்தது. அவன் உயிர் பிழைத்தான். வீட்டை விட்டு வெளியேறி, தன் புல்லட் பைக்கில் ஏறி டெல்லி நோக்கிப் பறந்தான்.
அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே அவன் ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டிருந்தான்: “ஐந்து பேர் இறப்பார்கள். விரைவில் காட்டுவேன்.”

விசாரணையில் அவன் அனைத்தையும் ஒப்புக்கொண்டான். “அவள் என்னை விட்டு போனதால் இப்படி செய்தேன்” என்றான்.
கிராமமே அதிர்ந்தது. ஒரு தகாத உறவு எப்படி ஒரு குடும்பத்தையே அழித்தது என்பதை நினைத்து அனைவரும் திகைத்தனர்.
இரகசியங்கள் எப்போதும் இரகசியமாக இருப்பதில்லை. சில சமயம் அவை இரத்தத்தில் எழுதப்படுகின்றன.
Summary in English : In Amethi, Uttar Pradesh, a man named Chandan Verma took the lives of a school teacher, his wife Poonam, and their two young daughters due to a strained extramarital relationship with the woman that had lasted 1.5 years. After a recent fallout and her complaint against him, he entered their home, fired multiple shots, and later attempted suicide unsuccessfully. He was arrested the next day while fleeing to Delhi.

