பின் பக்கம் பண்ணலாம்.. கர்ப்பமான ஆசிரியை.. அடங்காத கள்ளக்காதலன்.. ஒரே நேரத்தில் துடிதுடித்து இறந்த 4 பேர்..
அமேதி மாவட்டத்தின் அமைதியான கிராமத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர் சுனில் குமார் தன் மனைவி பூனம் மற்றும் இரு சிறுமிகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். ஆறு வயது திரிஷ்டி பள்ளிக்கூடம் செல்லத் தொடங்கியிருந்தாள்; ஒரு வயது குழந்தை இன்னும் தவழ்ந்து கொண்டிருந்தது. வீட்டில் எப்போதும் குழந்தைகளின் சிரிப்பும், சுனில் கேட்கும் சினிமா பாடல்களும் ஒலித்துக்கொண்டிருக்கும். ஆனால் யாருக்கும் தெரியாத ஒரு இரகசியம் பூனத்தின் வாழ்க்கையில் நிழலாடிக்கொண்டிருந்தது. சந்தன் வர்மா. கிராமத்தின் இளைஞன். தோற்றத்தில் அமைதியானவன், ஆனால் உள்ளுக்குள் கொந்தளிப்பவன். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, பூனம் அவனைச் சந்தித்தாள். முதலில் உதவி கேட்டு வந்தவன், பிறகு அடிக்கடி வீட்டுக்கு வரத் தொடங்கினான். சுனில் பள்ளியில் இருக்கும் நேரங்களில், பூனமும் சந்தனும் பேச ஆரம்பித்தனர். பேச்சு நட்பானது, நட்பு காதலானது, காதல் தகாத உறவானது. சந்தன் பூனத்திடம், “நீ இல்லாம என்னால் வாழ முடியாது” என்று சொல்லிக்கொண்டிருந்தான். பூனம் முதலில் பயந்தாள், பிறகு அவனை அனைத்துக்கொண்டாள். ஆனால், காலப்போக்கில் அவளுக்கு பயம் மேலோங்கியது. குழந்தைகள் வளர்ந்து கொண்டிருந...