ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்துக்கு அருகிலுள்ள ஒரு சிறு கிராமம், பிருந்தா. அங்கு வசிப்பவள் சுமித்ரா தாஸ், வயது 42. கணவனை இழந்து 15 ஆண்டுகளாகியும், தன் ஒரே மகன் அர்ஜுனை (வயது 20) தனியாக வளர்த்து வந்தாள்.
கிராமத்தில் ஆடு வளர்ப்புதான் அவர்களின் வாழ்வாதாரம். சுமித்ராவிடம் 35க்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்தன. ஒவ்வொரு மாதமும் சில ஆடுகளை விற்று, குடும்பத்தை நடத்தி வந்தாள்.

அர்ஜுனின் நெருங்கிய நண்பன், பிரத்யும்னா சாஹு. வயது 21. இளைஞன், திடகாத்திரமான உடல், கிராம இளைஞர்களிடம் பிரபலம். அடிக்கடி அர்ஜுனின் வீட்டுக்கு வந்து போவான்.
சுமித்ரா தனிமையில் தவித்து வந்தாள். கணவன் இழப்புக்குப் பின், உடல் ரீதியான தாகமும் அவளை ஆட்டிப் படைத்தது. ஒரு நாள், ஆடு மேய்க்கச் செல்லும் போது, ரயில் தண்டவாளம் அருகே கிடக்கும் பழைய, கேட்பாரற்ற ரயில் பெட்டியில் பிரத்யும்னாவை சந்தித்தாள் சுமித்ரா.

அங்கு கிராம இளைஞர்கள் மது அருந்தி, சூதாடி, தவறான செயல்களில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் அன்று பிரத்யும்னா தனியாக இருந்தான். பேச்சு கொடுத்தாள் சுமித்ரா. நான் அர்ஜுனோட அம்மா சுமித்ரா, எங்க வீட்டுக்கு கூட நீ அடிக்கடி வந்திருக்கியே.. என்று பேச்சை தொடங்கினாள்.
அவன் இளைமை, அவளுக்கு ஆறுதலாகத் தெரிந்தது. நாட்கள் செல்ல செல்ல, அவர்களின் பழக்கம் ஆழமானது. ரகசிய சந்திப்புகள் ரயில் பெட்டியில் நடந்தன. இரவில் மது அருந்தி, உல்லாசத்தில் மூழ்கினர். பகலில் ஆடு மேய்ப்பது போல சென்று, அங்கு உல்லாசம்.

வயது வித்தியாசம் அவளுக்குத் தெரியவில்லை. பிரத்யும்னாவின் அரவணைப்பு அவளை மயக்கியது. தன் ஆடுகளை விற்று, அவனுக்கு 4 பவுன் தங்க சங்கிலி வாங்கிக் கொடுத்தாள்.

முதல் டிவிஸ்ட்:சுமித்ரா கர்ப்பமானாள். அதிர்ச்சியில் தவித்தாள். கர்ப்பத்தை கலைக்க முயன்றாள், ஆனால் தோல்வி. இதற்கிடையில், மகன் அர்ஜுன் உண்மையை அறிந்தான். தன் நண்பன் தன் அம்மாவுடன் தகாத உறவில் இருப்பதை, கர்ப்பம் என்பதை தெரிந்து கொண்டான்.
கோபத்தில் வெடித்தான். வீட்டில் சண்டை. சுமித்ராவை தாக்க முயன்றான். அவள் தப்பித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாள்: "என் மகன் என்னை கொடுமைப்படுத்துகிறான்."

பிரத்யும்னாவும் அங்கு வந்தான். "நாங்கள் காதலிக்கிறோம், திருமணம் செய்து கொள்ள விரும்புகிறோம். அவள் கர்ப்பமாக இருக்கிறாள்" என்றான். போலீசார் அதிர்ந்தனர், ஆனால் சட்டப்படி இருவரும் பெரியவர்கள் என்பதால், அர்ஜுனுக்கு அறிவுரை கொடுத்து அனுப்பினர்.
அர்ஜுன் வீட்டுக்கு திரும்பினான். கோபம் தணியவில்லை. ஆனால் அம்மாவும் நண்பனும் திருமணம் செய்து கொள்ளப் போவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இரண்டாவது டிவிஸ்ட்:சில நாட்களில், சுமித்ராவும் பிரத்யும்னாவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். தனி வீடு எடுத்து வசிக்க தொடங்கினர். ஆனால், அவர்கள் உல்லாசமாக இருப்பதற்கு சரியான இடம் அந்த பாழடைந்த ரயில் பெட்டி தான். அடிக்கடி அங்கு சென்று உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக்கினார்கள்.

அர்ஜுன் தனிமையில் தவித்தான். அம்மா விட்டு சென்ற ஆடுகளை வளர்ப்பதில் சிரமம். அவற்றை கவனிக்க முடியவில்லை. கோபத்தில் இருந்தான். தாயும், நண்பனும் ரயில் பெட்டி இருக்கும் பகுதிக்கு அடிக்கடி வந்து செல்கிறார்கள் என்பதை அறிந்தான். ஒரு நாள் இரவு ரயில் பெட்டிக்கு சென்றான்.

அங்கு அம்மாவும் பிரத்யும்னாவும் தனிமையில் இருப்பதை பார்த்தான். கோபத்தில் தாக்கினான். பிரத்யும்னாவை கொடூரமாக அடித்தான். அம்மா சுமித்ரா தடுக்க முயன்றாள், ஆனால் அர்ஜுன் சுமித்ராவையும் தள்ளிவிட்டான். சண்டையில் பிரத்யும்னா பலத்த காயமடைந்து இறந்து போனான். அர்ஜுனின் தாய் இரண்டாவது முறையாக விதவையானாள். அர்ஜுன் பயத்தில் ஓடிவிட்டான்.
மூன்றாவது டிவிஸ்ட்:போலீசார் விசாரித்த போது, உண்மை வெளியானது: பிரத்யும்னா உண்மையில் சுமித்ராவை மட்டும் காதலிக்கவில்லை. கிராமத்தில் வேறு ஒரு பெண்ணுடன்(அவள் கணவன் உயிருடன் இருக்கும் போதே) உறவு வைத்திருந்தான்.
அந்த பெண்ணின் கணவன் தான் பிரத்யும்னாவை கொலை செய்ய திட்டமிட்டிருந்தான். ஆனால், குழந்தைகள் இருப்பதால் அவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும் என பயந்து தன்னுடைய நண்பனான அர்ஜுனின் கோபத்தை தூண்டினான்.
உன் அம்மாவும், பிரத்யும்மனும் அந்த ரயில் பொட்டியில அடிக்கடி உல்லாசமா இருக்காங்க.. நீ அவனை தீர்த்து கட்டு, நான் உன்னை பெயிலில் எடுக்கிறேன். எல்லா உதவியும் பண்ணுறேன்.. என்று ஊக்கம் கொடுத்து.. திட்டத்தை நிறைவேற்றினான். சுமித்ரா கர்ப்பிணியாக, கணவனை இழந்து மீண்டும் விதவையானாள். அர்ஜுன் கொலை குற்றத்தில் சிறைக்கு போனான்.
கிராமம் அதிர்ந்தது. துருப்பிடித்த ரயில் பெட்டி மீண்டும் கேட்பாரற்று கிடந்தது, ஆனால் அதன் ரகசியங்கள் கிராமத்தை என்றென்றும் பாதித்தன.இந்த கதை தனிமை, ஆசை, கோபம் ஆகியவற்றின் கொடூர விளைவுகளை சொல்கிறது.
(**இது உண்மை சம்பவத்தை அடிபப்டையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை, வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை படம் போட்டு காட்டும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.)
Summary in English : In a small Odisha village, a 42-year-old widow raising her 20-year-old son alone develops a secret romantic relationship with his young friend. Their affair leads to pregnancy and family conflict, ending in separation, loss, and irreversible consequences for everyone involved.

