பெங்களூரின் ஹெப்பகோடி பகுதி. அங்கு உள்ள ஒரு குடியிருப்பு வளாகம் இரவு நேரங்களில் அமைதியாக இருக்கும். மாடிகளில் காயப்போடப்பட்ட துணிகள் காற்றில் ஆடும். பெண்கள் தங்கள் புதிய உள்ளாடைகளை கிளிப் மாட்டி பாதுகாப்பாக தொங்க விடுவார்கள்.
ஆனால் சில நாட்களாக அந்த உள்ளாடைகள் மட்டும் மாயமாகி வந்தன. பழைய துணிகள் தொட்டாலும் புதியவை காணாமல் போகும். பெண்கள் அச்சத்தில் தவித்தனர். "இது யாருடைய வேலை? ஏன் உள்ளாடைகள் மட்டும்?" என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஒரு நாள், ஒரு பெண் ஹெப்பகோடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். "என் புது பிரா, பேண்டி எல்லாம் காணாமல் போயிடுச்சு... இது தொடர்ந்து நடக்குது!" என்று சொன்னார். போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
குடியிருப்பு முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இரவு நேரத்தில் ஒரு வாலிபர் மாடிகளில் ஏறி, உள்ளாடைகளை எடுத்து மறைத்து வைத்து செல்வது தெளிவாகப் பதிவாகியிருந்தது. அவன் எதையோ மறைத்தபடி விரைவாக நடப்பது, சுற்றி பார்த்தபடி செல்வது... எல்லாம் கேமராவில் சிக்கியது.

அந்த அடையாளங்களை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். விரைவிலேயே அந்த வாலிபர் அமுல் என்பவர் என்பது தெரிய வந்தது. 23 வயது. கேரளாவைச் சேர்ந்தவர். பெங்களூரில் வேலை தேடி வந்து, நண்பருடன் தங்கியிருந்தார். வேலை கிடைக்கவில்லை. ஆனால் அவனுக்கு ஒரு ரகசிய பழக்கம் இருந்தது.
போலீசார் அவனை தட்டி தூக்கினர். விசாரணையில் அமுல் உண்மையை ஒப்புக்கொண்டான். "பெண்களின் உள்ளாடைகளை அணியும்போது எனக்கு ஒரு வித போதை ஏற்படுது... அது என்னை கட்டுப்படுத்த முடியாமல் ஆக்குது," என்று சொன்னான்.

பகலில் திருடினால் மாட்டிக்கொள்வோம் என்று இரவு நேரங்களில் மட்டும் மாடிகளில் ஏறி திருடி வந்தான். அதிலும், 40+ வயது உள்ள பெண்களின் உள்ளாடைகள் அதிகம் திருடப்பட என்ன காரணம் என்று கேட்ட போது, அதில் தான் போதை அதிகம் உள்ளது எனவும் திருடிய உள்ளாடைகளை அணிந்து, செல்போனில் வீடியோக்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோவும் போடுவேன்.. என்னுடைய நண்பர்கள் மட்டுமே அதனை பார்க்க முடியும் என கூறினார்.
போலீசார் அவன் அறையில் சோதனை நடத்தினர். அறை முழுக்க உள்ளாடைகள் குவிந்து கிடந்தன. மூட்டை மூட்டையாக! கலர் கலராக. எல்லா வகையும். போலீசாரே அதிர்ந்து போனார்கள். "இது என்ன புது திருட்டு?" என்று அவர்களே முணுமுணுத்தனர். அனைத்து உள்ளாடைகளையும் பறிமுதல் செய்து, அமுலை கைது செய்தனர்.

இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு தும்கூரில் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் மாணவிகளின் உள்ளாடைகளை திருடிய வழக்கில் சிக்கியிருந்தான். இப்போது வரிசையில் அமுலும் இணைந்துவிட்டான்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுந்துள்ளது. மாடியில் காயப்போடும் துணிகளை எப்படி பாதுகாப்பாக வைப்பது? இந்த வினோத ஆசைக்கு முடிவு எப்போது?
அமுல் இப்போது சிறையில். ஆனால், இந்த உள்ளாடை திருடும் 'தங்கத்தம்பி' இப்போது ஒரு இருண்ட ரகசியத்தின் சின்னமாக மாறியுள்ளான்.



