கொல்கத்தாவின் ஒரு சாதாரண காலனியில், விடியற்காலை 4 மணிக்கு ஒரு தொலைபேசி அலறியது. அந்த குரல் நடுங்கியது, ஆனால் தெளிவாக இருந்தது.
"சார்... என்னை ஒரு ஆள் கடத்திட்டு வந்து... ரேப் பண்ணிட்டான் சார்... இப்போ அவன் போதையில தூங்கிட்டு இருக்கான்... அவன் போன்ல இருந்து தான் பேசுறேன்... விரைவா வந்து காப்பாத்துங்க சார்!"

விலாசம் கொடுக்கப்பட்டது. போலீஸ் பறந்தது. குடிபோதையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த ராஜீவ் சர்க்கார் (47) என்பவரை அள்ளிச் சென்றனர். அவருக்கு எதிரே அமர்ந்திருந்தாள் மீரா (17) – கண்ணீரும், பயமும் கலந்த முகத்துடன்.
ராஜீவ் கண் விழித்தபோது, உலகமே தலைகீழாக மாறியிருந்தது.
"என்ன... என்ன நடக்குது? என்னை ஏன் இங்க கொண்டு வந்திருக்கீங்க?"
"உன் மீது இந்தப் பெண் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருக்கா. அவ வயது 17. போக்சோ பாய்ந்துடுச்சு."
ராஜீவின் உடல் துடித்தது. "இது பொய்! அவ என் மகள் அனன்யாவோட தோழி தானே? நான்... நான் அவளை தொடக்கூட இல்ல!"
ஆனால் ஆரம்ப விசாரணையில் சில விஷயங்கள் வெளியாகின.
மீரா கடந்த ஆறு மாதங்களாக ராஜீவ் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றிருக்கிறாள். அவனோடு நெருக்கமாகப் பழகியிருக்கிறாள். காம ஆசைகளைத் தூண்டும் விதமாக நடந்து கொண்டிருக்கிறாள். தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிய சாட்சியங்கள் இருந்தன. ஆனால்... எந்த அசிங்கமான புகைப்படமோ, வீடியோவோ இல்லை.
போலீஸாருக்கு சந்தேகம் முளைத்தது.
ராஜீவ் கதறினான். "இந்த பெண் என்னுடைய மகளின் தோழி, பார்பதற்கு என் முன்னாள் காதலி சுசித்ராவோட முகச்சாயலில் இருந்தா... அதான் நான் கொஞ்சம் நெருக்கமா பழகினேன். ஆனா, என்னோட சுண்டு விரல் கூட இந்த பெண் மீது பட்டது இல்லை. என்னோட மகளின் தோழியை மகளாக தானே பார்த்தேன்.. இந்த புகார் போலியானது.. நான் எந்த தவறும் செய்யவில்லை..!"
மெதுவாக உண்மை வெளியே வந்தது.
புகார் கொடுத்த மீராவை விசாரிக்க தொடங்கியது போலீஸ். பகீர்!
ராஜிவின் முன்னாள் சுசித்ராவின் மகள் தான் இந்த மீரா.
2003-ம் ஆண்டு ராஜீவ், சுசித்ராவை விட்டுப் பிரிந்து வேறொருத்தியைத் திருமணம் செய்துகொண்டான். சுசித்ரா தனியாக இருந்தாள். பிறகு திருமணம் செய்துகொண்டு மீராவைப் பெற்றெடுத்தாள். ஆனால் வஞ்சம் அவளை விடவில்லை.
ராஜீவின் மகள் அனன்யா படிக்கும் அதே பள்ளியில் மீராவும் படித்தாள். ஒருநாள் பள்ளி வாசலில் இருவரையும் பார்த்த சுசித்ராவுக்கு தீப்பிடித்தது. தன் மகளைப் பயன்படுத்தி... ராஜீவை போக்சோவில் சிக்க வைக்கலாம் என்று திட்டமிட்டாள்.
மீராவிடம் "ராஜீவ் அங்கிள் ரொம்ப நல்லவரு... கொஞ்சம் ஃபிரண்ட்லியா பேசு" என்று சொல்லி அனுப்பினாள். மெதுவாக தனக்கு ராஜீவ் தனக்கு செய்த கொடுமைகளை சொல்லி மகள் மனதில் வஞ்சத்தை விதைத்தாள் சுசித்ரா.
ஒரு கட்டத்தில், ராஜிவின் ஆசையை தூண்டும் விதமாக நடந்து கொள்.. உன் மீது அவன் கை வைத்தாள் போதும்.. நம் திட்டம் நிறைவேறிவிடும்.. என்று சொன்னாள். இறுதியில்... அந்த இரவு.
தாய் சுசித்ராவின் கேவலமான திட்டத்திற்கு துணை புரிந்தார் மகள் மீரா. ஆனால், ராஜீவ் முன்பு என்ன தான் கவர்ச்சியாக நடந்து கொண்டாலும் அவரிடம் இருந்து எந்த விதமான மோசமான பார்வையும் இல்லை. தன்னையும் மகள் போலவே பார்க்கிறார் என்பதை உணர்ந்த மீரா தாயிடம் இதை சொல்லியிருக்கிறாள்.
ராஜீவ் போலீஸிடம் கதறினான். "என்னை ஏமாற்றி சிக்க வைச்சிருக்காங்க சார்! என் முன்னாள் காதலி தான் இதுக்குப் பின்னாடி இருக்கணும்.. எனக்கு சந்தேகமா இருக்கு சார்.. இந்த பொண்ணு மீரா.. எனக்கு மகள் மாதிரி சார்..!"
விசாரணை திரும்பியது.
சுசித்ரா கைது செய்யப்பட்டாள். பல கட்ட விசாரணைக்கு பிறகு, இறுதியாக, அவள் ஒப்புக்கொண்டாள். "அவர் என்னை விட்டுப் போனதுக்கு பழிவாங்கணும் என்று தான் இதை செய்தேன்.."
- ராஜீவ் சர்க்கார் – விடுதலை (போக்சோ குற்றச்சாட்டு நிரூபணமாகவில்லை, ஆனால், மீராவின் முன்பு மது அருந்தியது உள்ளிட்ட சில சட்ட விதிமுறை மீறல்களுக்கு அபராதம்)
- மீரா – சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டாள் (தவறான வழிகாட்டுதலுக்காகவும், திட்டமிட்ட செயலுக்காகவும்)
- சுசித்ரா – சதி மற்றும் குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற குற்றத்துக்காக கைது, நீதிமன்ற விசாரணை நடைபெறுகிறது.
இந்தக் கதையில் யாரும் முழுமையான பாதிக்கப்பட்டவர் இல்லை. ஆனால் எல்லோரும்... ஒரு வகையில் பழிவாங்கலின் பலியாட்கள்.
கொல்கத்தாவின் அந்த சிறிய வீட்டில், இன்றும் கண்ணீர் வழிகிறது. ஆனால் அது யாருடையது என்பதை... இனி யாராலும் சொல்ல முடியாது. யார் செய்தது தவறு? யாரை நியாயப்படுத்துவது என குழப்பமே மிஞ்சுகிறது.
**இது உண்மை கதைகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
Summary : In Kolkata, a 47-year-old man was accused by a 17-year-old girl of wrongdoing. Investigation revealed she was sent by his ex-lover for revenge. The girl was the ex-partner's daughter. All parties faced legal consequences, highlighting a planned act of vengeance using family ties.

