தெலங்கானாவின் ஒரு சிறிய கிராமத்தில், ரமேஷ் என்ற இளைஞன் தன் மனைவி பிரியாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். ரமேஷுக்கு ஒரு தம்பி இருந்தான் – கிரண்.
இருவரும் சகோதரர்களாக நெருக்கமாக இருந்தாலும், கிரணுக்கு அண்ணி பிரியாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருந்தது. கடந்த ஆறு மாதங்களாக பிரியாவும் ரமேஷும் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர். ஒருமுறை கிராம பெரியவர்கள், பஞ்சாயத்து கூட பேசி, மீண்டும் சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தியிருந்தார்கள்.

ஒரு நாள் இரவு, ரமேஷ் திடீரென மாரடைப்பால் மயங்கியதாக பிரியா அம்புலன்ஸுக்கு போன் செய்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். உறவினர்கள் விரைந்து வந்தபோது, ரமேஷ் இறந்து விட்டார் என்பது தெரிய வந்தது பிரியா கணவரை இழந்த துக்கத்தில் கதறி அழுது, துடித்து நடித்தார். அனைவரும் அவரை ஆறுதல் செய்தனர்.
ஆனால், அண்ணியின் இந்த நடிப்பை கிரணால் அதை நம்ப முடியவில்லை. “அண்ணன், மாரடைப்பால் இறந்தார் என்று நம்ப முடியவில்லை. அண்ணியின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யுங்கள்” என்று போலீசில் புகார் கொடுத்தான்.
போலீசார் விசாரணைக்கு வீட்டுக்கு வந்தனர். படுக்கை அறையில் ஒரு கெட்ட வாடை வந்தது – சிறுநீர் கழித்தது போன்ற நாற்றம். பிரியாவிடம் கேட்டபோது, “எங்கள் குழந்தைகள் அவ்வப்போது படுக்கையில் சிறுநீர் கழித்துவிடுவார்கள்” என்று சமாளித்தார்.
ஆனால் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வாடையின் ஆதாரம். சுவரில் மாட்டப்பட்டிருந்த ரமேஷின் புகைப்படத்திலிருந்து தான் அந்த சிறுநீர் நாற்றம் வந்தது! போலீசார் உடனே புகைப்படத்தை பரிசோதித்தனர்.
கிரண் ஒரு தகவலை வெளியிட்டான்: “அண்ணிக்கு ஒரு கள்ளக்காதலன் இருக்கிறான் – ராஜு. அவனுடன் தகாத தொடர்பு. அவனை விசாரியுங்கள்.”
கடும் விசாரணையில் உண்மை வெளியானது. பிரியாவும் ராஜுவும் சேர்ந்து ரமேஷை கொன்றுவிட்டனர். ரமேஷ் இறந்ததை உறுதிப்படுத்திய பிறகு, ராஜு ரமேஷின் புகைப்படத்தை தரையில் போட்டு, அதன் மீது சிறுநீர் கழித்து அவமரியாதை செய்தான். அதிர்ச்சியடைந்த பிரியா அதை வெறுமனே துடைத்துவிட்டு, சுவரில் மாட்டிவைத்தார்.

பிரேத பரிசோதனை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, போலீசார் சிறுநீரில் DNA பரிசோதனை செய்தனர். இரண்டு வாரங்களில் அறிக்கை வந்தது: அது ராஜுவின் சிறுநீர்தான் என உறுதியானது.
பிரியாவும் ராஜுவும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தந்தை இறந்து விட, தாய் சிறைக்கு சென்று விட இரண்டு சிறு குழந்தைகள் இப்போது கிரணின் வீட்டில் வளர்க்கப்படுகின்றன. என்னதான் சித்தப்பா வீட்டில் வளர்ந்தாலும், அம்மா, அப்பாவை போல அந்த குழந்தைகளுக்கு அரவணைப்பு கிடைக்குமா?
இந்தக் கதை நமக்கு ஒரு பாடத்தை சொல்கிறது. திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் வந்தால், அவற்றை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். கள்ளத்தொடர்பு போன்ற தவறுகள் குடும்பத்தை அழித்துவிடும். கோபத்தில் எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையை பாழாக்கிவிடும்.
- திருமணத்தில் நம்பிக்கையும் விசுவாசமும் மிக முக்கியம். தவறான உறவுகள் துரோகத்திற்கு வழிவகுக்கும்.
- குடும்ப பிரச்சினைகளை பஞ்சாயத்து அல்லது கவுன்சிலிங் மூலம் தீர்க்க முயலுங்கள். வன்முறை ஒருபோதும் தீர்வல்ல.
- பெற்றோர்களே, குழந்தைகளின் நட்பு, அரவணைப்பு, பாசம் எல்லாமும். உறவுகளை கவனியுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டுங்கள்.
- இழப்பு வந்தால், சட்டத்தை நம்புங்கள். சற்று தாமதமாகலாம், ஆனால், உண்மை எப்போதும் வெளிவரும்.
இந்தக் கதை உங்களின் உணர்ச்சியைத் தூண்டியிருக்கலாம்,அதே சமயம், ஒரு வாழ்க்கை பாடத்தையும் கொடுத்திருக்கும் என நம்னுகிறோம். வாழ்க்கை அழகான கண்ணாடி பாத்திரம். எதையும் மறைக்க முடியாது. இந்த கண்ணாடி பாத்திரத்தை அன்பால் நிரப்புங்கள், துரோகத்தால் உடைத்து விடாதீர்கள்.

நம் கையால் வயிறார உணவு உண்டு, நிம்மதியாக படுத்து உறங்கும் குழந்தைகளின் அழகை பார்க்கும் போது கிடைக்காத சந்தோஷமா இந்த அற்பத்தனமான கள்ளக்காதலில் கிடைத்துவிட போகிறது.
Summary : In Telangana, a wife reported her husband's sudden death due to heart attack and acted grief-stricken. The brother's suspicion led to police investigation. A strange odor from the husband's photo revealed evidence linking her and her secret partner to the incident. Both were arrested, and the children now live with the uncle.

