மகிழ்ச்சியில் அந்த இடத்தில் சிறுநீர் கழித்த காதலன்.. போலீஸ் விசாரணையில் அம்பலம்.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..
தெலங்கானாவின் ஒரு சிறிய கிராமத்தில், ரமேஷ் என்ற இளைஞன் தன் மனைவி பிரியாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். ரமேஷுக்கு ஒரு தம்பி இருந்தான் – கிரண். இருவரும் சகோதரர்களாக நெருக்கமாக இருந்தாலும், கிரணுக்கு அண்ணி பிரியாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருந்தது. கடந்த ஆறு மாதங்களாக பிரியாவும் ரமேஷும் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர். ஒருமுறை கிராம பெரியவர்கள், பஞ்சாயத்து கூட பேசி, மீண்டும் சேர்ந்து வாழுமாறு அறிவுறுத்தியிருந்தார்கள். ஒரு நாள் இரவு, ரமேஷ் திடீரென மாரடைப்பால் மயங்கியதாக பிரியா அம்புலன்ஸுக்கு போன் செய்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். உறவினர்கள் விரைந்து வந்தபோது, ரமேஷ் இறந்து விட்டார் என்பது தெரிய வந்தது பிரியா கணவரை இழந்த துக்கத்தில் கதறி அழுது, துடித்து நடித்தார். அனைவரும் அவரை ஆறுதல் செய்தனர். ஆனால், அண்ணியின் இந்த நடிப்பை கிரணால் அதை நம்ப முடியவில்லை. “அண்ணன், மாரடைப்பால் இறந்தார் என்று நம்ப முடியவில்லை. அண்ணியின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யுங்கள்” என்று போலீசில் புகார் கொடுத்தான். போலீசார் விசாரணைக்கு வீட்டுக்கு வ...