தகாத உறவில் இருந்த பெண் செய்த கேடு கெட்ட செயல்! முதல் கணவன் செய்த காது கூசும் கேவலம்! என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டத்தின் உச்சிப்புளி அருகே, நாகாச்சி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்தாள் "சசிகலா". அவளது இதயத்தில் பதிந்திருந்தது ஒரு பெயர் – "பாண்டி".

ராமேஸ்வரத்தில் டிராவல்ஸ் தொழில் செய்து வந்த 28 வயது பாண்டி, கேணிக்கரை வலசை பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தனர். அந்தக் காதல் ஆழமானது; திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

பாண்டியின் பெற்றோர் சசிகலாவைப் பெண் கேட்டு அவள் வீட்டுக்கு வந்தனர். ஆனால் சசிகலாவின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவளது தந்தை கண்ணன், பாண்டியையும் அவரது குடும்பத்தையும் தரக்குறைவாகப் பேசி அவமானப்படுத்தினார் என்று கூறப்படுகிறது.

இறுதியில், சசிகலாவை தங்களுடைய உறவினரான முருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்து, எதையோ சாதித்ததை போல உணர்ந்துள்ளனர் சசிகலாவின் பெற்றோர். திருமணம் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தன. அவர்களுக்கு நான்கு வயது அழகிய பெண் குழந்தை ஒன்றும் இருந்தது.

ஆனால், சசிகலாவின் இதயம் மாறவில்லை. திருமண வாழ்க்கையில் இருந்தாலும், பாண்டியுடனான தொடர்பை அவள் துண்டிக்கவில்லை. செல்போன் மூலம் அவர்கள் பேசிக்கொண்டே இருந்தனர். காதல் மறக்க முடியாத நினைவாக, அவளது மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தது.

கடந்த மாதம், சசிகலாவின் கணவர் முருகன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றார். அந்த நேரத்தில், சசிகலா வீட்டை விட்டு வெளியேறி பாண்டியுடன் தலைமறைவானாள். அதிர்ச்சியடைந்த அவளது பெற்றோர் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் விசாரணை நடத்தி இருவரையும் கண்டுபிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். பேச்சுவார்த்தை நடத்தி, மகளின் எதிர்காலம் என்ன ஆவது.. உன் அம்மா.. உனக்கு 4 வயசா இருக்கும் போது உன் அப்பாவை விட்டுவிட்டு வேறு ஒருவனுடன் ஓடியிருந்தால் உன் நிலை என்ன ஆகியிருக்கும்..? அந்த நிலையை உன் மகளுக்கு நீ கொடுக்க வேண்டுமா.. என்று சசிகலாவுக்கு அறிவுரை வழங்கினர். இறுதியில், அவளது தந்தை கண்ணனிடம் ஒப்படைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த அறிவுரைகள் அவளது மனதில் எட்டியதாகத் தெரியவில்லை.

தொடர்ந்து, கணவன் முருகனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளார். அவ தான் இன்னொருத்தன் கூட ஓடிப்போயிட்டாளே.. அவளை எதுக்கு மறுபடியும் கூட்டிக்கிட்டு வந்து பொழப்பு நடத்திகிட்டு இருக்கான் இந்த முருகன் பையன்.. அவ பண்ணது கேடு கெட்ட வேலை.. இப்போ இவன் பண்றது காது கூசும் கேவலம்.. என விசும்ப தொடங்கினார்கள் அக்கம் பக்கத்தினர். 

கணவன் முருகனுடன் வாழந்தாலும், காதலன் நினைவில் நிம்மதியாக வாழ முடியாமல், அவனுடன் சேர்ந்து வாழ முடிய வில்லையே என்ற வேதனியில் தவித்தாள் சசிகலா. மன அழுத்தம் தாங்க முடியாமல் போனது. இரண்டு நாட்களுக்கு முன்பு, தந்தையின் வீட்டிற்கு வந்த அவள் தவறான முடிவை தேடிக் கொண்டாள். சடலத்தை மீட்ட உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில், பாண்டி ராமேஸ்வரத்தில் இருந்து பெங்களூருக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்றிருந்தார். பயணிகளை இறக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, தர்மபுரி மாவட்டம் பாளையம் சுங்கச்சாவடி அருகே, சசிகலா சடலமான செய்து கொண்ட செய்தி அவரைச் சென்றடைந்தது.

அந்தச் செய்தி அவரை உலுக்கியது. கடும் அதிர்ச்சியில் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, சாலையோரமாக இருந்த மரத்தில் கயிறு கட்டி தவறான முடிவை தேடிக்கொண்டார். இதை பார்த்த வாகன ஓட்டிகள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தொப்பூர் போலீசார், மரத்தில் சடலமாக தொங்கிய பாண்டியின் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒருவருக்குப் பின் ஒருவராக உயிரிழந்த இரு உயிர்கள். காதல் மறக்க முடியாத நினைவாக மாறி, இரு குடும்பங்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

சசிகலாவின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பாண்டியின் உடல் கிருஷ்ணகிரி மருத்துவமனையிலும் போஸ்ட்மார்ட்டத்துக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் ராமேஸ்வரம் மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காதல் என்ற பெயரில் எவ்வளவு ஆழமான வலி இருக்கிறது என்பதை இந்தக் கதை நினைவூட்டுகிறது.

Summary : In Tamil Nadu, a woman who had married against her family's wishes but remained emotionally attached to her former lover faced ongoing family conflicts. After five years of marriage, she left home but was returned. Overwhelmed by inner turmoil, she passed away, and upon hearing the news, her former lover also passed away.