வீட்டில் உள்ளாடையுடன் ஓடிய அண்ணன்! புது மனைவி செய்த அசிங்கம்! இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்!

கோரக்பூர் (உத்தரபிரதேசம்) : உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள குல்ரிஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாராயண்பூர் கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புதிதாகத் திருமணமான மனைவியை, தனது சகோதரருடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன் சதீஷ், மறுநாள் சகோதரர் அதிஷையும் சுத்தியலால் தாக்கியுள்ளான்.

அதிர்ஷ்டவசமாக அதிஷ் உயிர் தப்பினார். சதீஷை போலீசார் கைது செய்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு சதீஷ் - சரோஜினினி தம்பதியின் திருமணம் நடைபெற்றது.

மரபுப்படி, மணப்பெண் சரோஜினினி தனது தாய் வீட்டில் சிறிது காலம் தங்கிய பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவரின் வீட்டுக்கு வந்தார். ஆரம்பத்தில் வாழ்க்கை இயல்பாக சென்றது. சரோஜினினி வீட்டுக்கு வந்த பிறகு நடந்த முதல் முக்கிய சடங்கு "முதல் சமையல்" விழா.

அப்போது சரோஜினினி தயாரித்த உணவை குடும்பத்தினர் அனைவரும் ருசித்து பாராட்டினர். குறிப்பாக, சதீஷின் அண்ணன் அதிஷ் சரோஜினின் சமையலை புகழ்ந்தது சதீஷுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதற்கு முன்பே, சதீஷ் தனது அண்ணன் அதிஷை உள்ளாடையுடன் வீட்டில் சுற்றி வருவதைப் பார்த்திருந்தார்.

இது அவரது மனதில் ஆழமான சந்தேகத்தை விதைத்தது. சரோஜினின் சமையலை அதிஷ் பாராட்டியதும் சந்தேகம் உச்சத்தை அடைந்தது. அதே இரவு, ஆதாரமற்ற சந்தேகத்தால் கோபமடைந்த சதீஷ், படுக்கையறையில் சரோஜினின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.

இரவு முழுவதும் உயிரற்ற உடலுடன் அமர்ந்திருந்தார். மறுநாள் காலையில், வீட்டின் மாடியில் உள்ள அதிஷின் அறைக்குச் சென்று சுத்தியலால் தலையில் தாக்கினார். சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் சதீஷைத் தடுத்து அதிஷை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிஷ் உயிர் தப்பினார். சரோஜினின் தந்தை குல்ரிஹா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சதீஷ், அதிஷ், அவரது பெற்றோர், மைத்துனி உள்ளிட்டோர் மீது வரதட்சணை கொடுமை தொடர்பான கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில் சதீஷ் கொலையை ஒப்புக்கொண்டார். மனைவி - சகோதரருக்கு இடையே தகாத உறவு இருப்பதாக சந்தேகித்ததாகக் கூறினார். ஆனால், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குடும்பத்தை பிளவுபடுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary in English : In Gorakhpur, Uttar Pradesh, a newlywed husband suspected an improper relationship between his wife and elder brother. Due to baseless suspicion, he strangled his wife and later attacked his brother with a hammer. The brother survived. Police arrested the husband after he confessed.