ஒரே அறையில் இரண்டு பேருடன் வினோதமான முறையில் தாய் செய்த அசிங்கம்.. மகள் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் 2019-ஆம் ஆண்டு நடந்த அதிர்ச்சிகரமான கொலை வழக்கில், கணவனை கொலை செய்த மனைவி, அவரது கள்ளக்காதலன் மற்றும் கள்ளக்காதலனின் நண்பர் ஆகிய மூவருக்கும் ஆக்ரா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளாக விளங்கியது கொலை செய்யப்பட்ட ராம்வீர் சிங்கின் குழந்தைகளே. தங்களது தாயின் திருமணத்துக்கு புறம்பான உறவை வெளிப்படுத்தி, அப்பாவின் கொலையாளிகளை தண்டிக்க உதவிய குழந்தைகளின் வாக்குமூலமே இந்த தீர்ப்புக்கு அடித்தளமாக அமைந்தது.

நடந்தது என்ன?

2019 பிப்ரவரி 14-ஆம் தேதி, வாலண்டைன்ஸ் டே அன்று, ஆக்ராவின் டௌகி பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஆட்டோ ஓட்டுநர் ராம்வீர் சிங் வீட்டிலிருந்து வெளியே சென்ற பிறகு காணாமல் போனார்.

அவரை தேடிய குடும்பத்தினர் எங்கும் கிடைக்காததால், ராம்வீரின் மாமா டிகாராம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு கிணற்றில் ராம்வீரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

உடற்கூறாய்வு அறிக்கையில், உடலில் 12 இடங்களில் காயங்கள் இருந்ததும், கடுமையான தாக்குதலால் கோமாவுக்கு சென்று உயிரிழந்ததும் உறுதியானது.

சந்தேகத்தின் அடிப்படையில் ராம்வீரின் மனைவி குசுமா தேவி (அப்போது 28 வயது), அவரது கள்ளக்காதலனும் ஆட்டோ ஓட்டுநருமான சுனில் குமார், மற்றும் சுனிலின் நண்பர் தர்ம்வீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைதுக்குப் பிறகு, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கட்டை (ஃபாவடா), எரிக்கப்பட்ட செல்போன் போன்ற ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குற்றவாளிகள் விசாரணையின் போது கொலையில் தங்களுக்கு தொடர்பில்லை என மறுத்து, ராம்வீருக்கு உள்ளூர் ரவுடிகளுடன் தொடர்பு இருந்ததால் அவர்களே கொலை செய்திருக்கலாம் என வழக்கை திசைதிருப்ப முயன்றனர்.

குழந்தைகளின் துணிச்சலான வாக்குமூலம்

வழக்கின் திருப்புமுனையாக அமைந்தது ராம்வீரின் மூன்று குழந்தைகளின் வாக்குமூலம். கொலை நடந்த போது 15, 13 மற்றும் 8 வயதுடைய இந்தச் சிறுவர்கள் நீதிமன்றத்தில் தைரியமாக சாட்சியமளித்தனர்.

பெரிய மகன் (அப்போது 15 வயது) கூறியதாவது: "எங்கள் அம்மா சுனில் குமாருடன் இரண்டு ஆண்டுகளாக தகாத உறவில் இருந்தார். சுனில் வீட்டுக்கு வரும்போதெல்லாம் எங்களை அம்மா அடிப்பார்.

சுனிலையும் தர்ம்வீரையும் பலமுறை வீட்டருகே பார்த்திருக்கிறேன். ஒரே அறையில் இருவருடனும் அசிங்கமான கோலத்தில் இருந்ததை ஒரு முறை பார்த்தேன். இதை அப்பாவிடம் சொன்னேன். அப்பா ஆட்டோ ஓட்ட செல்லும் நேரத்தில் சுனில் அமைதியாக வீட்டுக்குள் வந்து அம்மாவுடன் அறையில் இருப்பார்."

இதே போன்ற வாக்குமூலத்தை மற்ற இரு சிறுவர்களும் அளித்தனர். இந்த சாட்சியங்கள், உடற்கூறாய்வு அறிக்கை, பறிமுதல் ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்பு

ஆக்ராவின் அபர சிறப்பு அமர்வு நீதிபதி சஞ்சய் கே. லால், நவம்பர் 2025-இல் தீர்ப்பளித்தார். குசுமா தேவி, சுனில் குமார், தர்ம்வீர் ஆகிய மூவரும் கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு குடும்ப உறவுகளில் ஏற்படும் விரிசல்களையும், தகாத உறவுகளால் ஏற்படும் விபரீதங்களையும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.

அதே நேரத்தில், உண்மையை வெளிப்படுத்த துணிந்த குழந்தைகளின் தைரியம் பாராட்டுக்குரியது. இத்தகைய சம்பவங்கள் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.

Summary in English : In Agra, a court sentenced a wife, her partner, and his friend to life imprisonment for the death of her husband in 2019. The couple's three children provided key statements about their mother's extramarital relationship, which helped establish the motive and led to the conviction. Each accused was also fined one lakh rupees.