ஒரே அறையில் இரண்டு பேருடன் வினோதமான முறையில் தாய் செய்த அசிங்கம்.. மகள் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் 2019-ஆம் ஆண்டு நடந்த அதிர்ச்சிகரமான கொலை வழக்கில், கணவனை கொலை செய்த மனைவி, அவரது கள்ளக்காதலன் மற்றும் கள்ளக்காதலனின் நண்பர் ஆகிய மூவருக்கும் ஆக்ரா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளாக விளங்கியது கொலை செய்யப்பட்ட ராம்வீர் சிங்கின் குழந்தைகளே. தங்களது தாயின் திருமணத்துக்கு புறம்பான உறவை வெளிப்படுத்தி, அப்பாவின் கொலையாளிகளை தண்டிக்க உதவிய குழந்தைகளின் வாக்குமூலமே இந்த தீர்ப்புக்கு அடித்தளமாக அமைந்தது. நடந்தது என்ன? 2019 பிப்ரவரி 14-ஆம் தேதி, வாலண்டைன்ஸ் டே அன்று, ஆக்ராவின் டௌகி பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஆட்டோ ஓட்டுநர் ராம்வீர் சிங் வீட்டிலிருந்து வெளியே சென்ற பிறகு காணாமல் போனார். அவரை தேடிய குடும்பத்தினர் எங்கும் கிடைக்காததால், ராம்வீரின் மாமா டிகாராம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு கிணற்றில் ராம்வீரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடற்கூறாய்வு அறிக்கையில், உடலில் 12 இடங்களில் காயங்கள் இருந்ததும், கடுமையான தாக்குதலால் கோமாவுக்கு சென்று உயிரிழந்ததும் உறுதியானது. சந்தேகத்தின் அடிப...