ஹைதராபாத் நகரின் குகட்பள்ளி பகுதியில், சாதாரணமான ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார் சுதீர் ரெட்டி. 44 வயதான அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து, மனைவி பிரசன்னா மற்றும் 9 வயது மகனுடன் இனிமையான வாழ்க்கை நடத்தி வந்தார்.
பிரசன்னா வீட்டுக்கு அருகில் சிறிய மளிகை கடை நடத்தி வந்தாள். 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திருமணம், முதலில் இனிமையாகத் தொடங்கியது. ஆனால் காலப்போக்கில், அந்த இனிமை விரிசல்களாக மாறியது.

ஒரு இளைஞன், தெருவெல்லாம் உணவுப் பொருட்கள் விற்று வந்தான். பிரசன்னாவின் கடைக்கு அடிக்கடி வருவதால், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது பழக்கமாக மட்டும் நின்றுவிடவில்லை; திருமணத்தை மீறிய உறவாக மாறியது.
ஒருமுறை, அந்த இளைஞருடன் ஆடையின்றி உல்லாசமாக இருந்த பிரசன்னாவை பார்த்த அதிர்ந்து போனார். மனைவியை கண்டித்தார்.
அக்கம் பக்கத்தினர் சொன்னதால் கோபம் கொண்ட அவர், பிரசன்னாவை அடித்து எச்சரித்தார். "இனி கடைக்கே போக வேண்டாம். செல்போனையும் என்னிடம் கொடு" என்று கட்டுப்பாடுகளை விதித்தார்.
ஆனால் பிரசன்னாவின் கோபம் அணையவில்லை. தன்னை விட வயதில் சிறியவனுடன் காதலில் இருக்கிறோம் என்ற உறுத்தலே இல்லாம.. தன் காதலனுடன் சேர்ந்து, கணவனை தீர்த்து கட்ட திட்டமிட்டாள். இருவரும் கூலிப்படையைத் தொடர்பு கொண்டு, பணம் கொடுத்து கொலைத் திட்டத்தை வகுத்தனர்.
ஒரு இரவு... டிசம்பர் 23, 2025. சுதீர் வேலைக்குப் பிறகு வீட்டுக்கு வந்து, இரவு உணவு உண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில், பிரசன்னாவின் காதலன் கதவை மெதுவாகத் தட்டினான். பிரசன்னா எழுந்து, கதவைத் திறந்து விட்டாள். கூலிப்படையைச் சேர்ந்த இருவர் உள்ளே நுழைந்தனர்.
அவர்கள் சுதீரை எழுப்பாமல், கட்டையால் தாக்கினர். பின்னர் அவனது கைகால்களை இறுக்கிப் பிடித்தனர். இறுதியில் உள்ளே நுழைந்த காதலன் வீட்டில் இருந்த துப்பட்டாவை எடுத்து, சுதீரின் கழுத்தை இருக்கி இழுத்தான்.
சுதீர் துடித்தான்... திணறினான்... ஆனால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. கணவன் துடிதுடித்து இறந்து கொண்டிருப்பதை பார்த்த பிரசன்னா அருகில் நின்று, விடாத.. நல்லா அழுத்தி பிடி.. என அமைதியாக ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள். சில நிமிடங்களில்... சுதீரின் உயிர் பிரிந்தது.
கொலையாளிகள் சென்ற பிறகு, பிரசன்னா நாடகத்தைத் தொடங்கினாள். காலையில் கணவரை எழுப்ப முயன்றதாகவும், அவர் தூக்கத்தில் இறந்து விட்டதாகவும் உறவினர்களிடம் அழுது புரண்டாள். "திடீரென தூக்கத்திலேயே போய்விட்டார்" என்று சொல்லி, அனைவரையும் ஏமாற்றினாள். உறவினர்கள் துக்கத்தில் மூழ்கினர்.
ஆனால், சுதீரின் சகோதரி சுனிதாவின் கண்களுக்கு, அண்ணனின் உடலில் காயங்கள் தெரிந்தன. "இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது" என்று சந்தேகப்பட்டு, போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சடலத்தை மீட்டு, போஸ்ட்மார்டத்துக்கு அனுப்பினர்.
போஸ்ட்மார்டம் அறிக்கை வந்தபோது, உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. சுதீர் இயற்கையாக இறக்கவில்லை. அவரை அடித்து காயப்படுத்தியிருந்ததோடு, துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்திருந்தனர். குடும்பமே அதிர்ந்து போனது.
போலீஸ் விசாரணை தீவிரமடைந்தது. பிரசன்னாவை கிடுக்கிப்பிடி கேள்விகளால் விசாரித்தபோது, அவள் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டாள். தன் காதலனும், கூலிப்படையைச் சேர்ந்த இருவரும் சேர்ந்து கொலை செய்ததாகக் கூறினாள். போலீஸார் 20-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, செல்போன் சிக்னல்களைப் பயன்படுத்தி காதலனை கைது செய்தனர். கூலிப்படையினரைத் தேடி வருகின்றனர்.
இந்த கொலை, தகாத உறவால் ஏற்படும் கொடூரங்களை மீண்டும் நினைவூட்டியது. ஒரு கணவன் தன் மனைவியை நம்பி வாழ்ந்தான். ஆனால் அவள் அந்த நம்பிக்கையைத் துரோகம் செய்து, இரவோடு இரவாக அவனைத் துடிக்கத் துடிக்க கொன்றாள்.
இன்றும் குகட்பள்ளியில் அந்த வீடு அமைதியாக நிற்கிறது... ஆனால் அதன் உள்ளே நடந்த கொடூரம், எப்போதும் மறக்க முடியாத காயமாக இருக்கும்.
Summary : In Kukatpally, Hyderabad, Sudhir Reddy passed away unexpectedly during sleep. His family noticed unusual marks on his body and suspected foul play. Police investigation and postmortem report revealed the true circumstances. His wife Prasanna and her associate were arrested for their involvement in the incident.

