"விடாத.. நல்லா அழுத்தி பிடி..” இளைஞருடன் ஆடையின்றி செய்த அசிங்கம். துடிதுடித்த கணவன்.. ரசித்து பார்த்த சைக்கோ மனைவி..
ஹைதராபாத் நகரின் குகட்பள்ளி பகுதியில், சாதாரணமான ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார் சுதீர் ரெட்டி. 44 வயதான அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து, மனைவி பிரசன்னா மற்றும் 9 வயது மகனுடன் இனிமையான வாழ்க்கை நடத்தி வந்தார். பிரசன்னா வீட்டுக்கு அருகில் சிறிய மளிகை கடை நடத்தி வந்தாள். 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திருமணம், முதலில் இனிமையாகத் தொடங்கியது. ஆனால் காலப்போக்கில், அந்த இனிமை விரிசல்களாக மாறியது. ஒரு இளைஞன், தெருவெல்லாம் உணவுப் பொருட்கள் விற்று வந்தான். பிரசன்னாவின் கடைக்கு அடிக்கடி வருவதால், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது பழக்கமாக மட்டும் நின்றுவிடவில்லை; திருமணத்தை மீறிய உறவாக மாறியது. ஒருமுறை, அந்த இளைஞருடன் ஆடையின்றி உல்லாசமாக இருந்த பிரசன்னாவை பார்த்த அதிர்ந்து போனார். மனைவியை கண்டித்தார். அக்கம் பக்கத்தினர் சொன்னதால் கோபம் கொண்ட அவர், பிரசன்னாவை அடித்து எச்சரித்தார். "இனி கடைக்கே போக வேண்டாம். செல்போனையும் என்னிடம் கொடு" என்று கட்டுப்பாடுகளை விதித்தார். ஆனால் பிரசன்னாவின் கோபம் அணையவில்லை. தன்னை விட வயதில் சிறியவனுடன் காதலில் இருக்கிறோம் என்ற உறுத்தலே இல்லாம.. த...