நடிகை ராதாவின் மகளா இது? அடையாளமே தெரியாமல் இப்படி மாறிப்போக இப்படியொரு காரணமா?

தமிழ் சினிமாவின் 80களின் எவர்கிரீன் நாயகியாக வலம் வந்த நடிகை ராதா, பாரதிராஜா இயக்கத்தில் 'அலைகள் ஓய்வதில்லை' படம் மூலம் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

பின்னர் மும்பை தொழிலதிபர் ராஜசேகரன் நாயரை திருமணம் செய்து சினிமாவிலிருந்து விலகிய ராதாவுக்கு, விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர், துளசி நாயர் என்ற இரு மகள்களும் உள்ளனர்.

இதில் ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயர் தெலுங்கில் நாக சைதன்யாவுடன் அறிமுகமாகி, தமிழில் 'கோ' படம் மூலம் பிரபலமடைந்தார். அதேபோல் இளைய மகள் துளசி நாயர் 2013ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான 'கடல்' படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

கார்த்திக் - ராதா ஜோடி 'அலைகள் ஓய்வதில்லை'யில் அறிமுகமானதைப் போல, கௌதம் கார்த்திக் - துளசி நாயர் ஜோடி 'கடல்'லில் அறிமுகமாவது என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அர்ஜுன், அரவிந்த் சாமி உள்ளிட்டோரும் நடித்த இப்படம் வெளியாவதற்கு முன்பே 17 கோடிக்கு மேல் வியாபாரமானது. ஆனால் படம் பெரும் தோல்வியடைந்தது.

பின்னர் ஜீவாவுடன் 'யான்' படத்தில் நடித்த துளசி நாயருக்கு அந்தப் படமும் ஹிட் ஆகவில்லை. அதன்பிறகு சினிமாவிலிருந்து விலகிய அவர், குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், துளசி நாயரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த நவம்பர் 27ஆம் தேதி நடிகை ராதாவின் தாயார் (துளசியின் பாட்டி) சரசம்மா வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் துளசி நாயர் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது வைரலாகி உள்ளன.

இதில் வெள்ளை உடையில் சோகமான தோற்றத்தில் இருக்கும் துளசி நாயர், அதிக உடல் எடையுடன் காணப்படுகிறார். 'கடல்' படத்தில் ஒல்லியாக, அழகாக இருந்த துளசி இப்போது ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டாரே என நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிலர் "ஹோட்டல் பிசினஸ் செய்வதால் உணவுக் கட்டுப்பாடு இல்லாமல் எடை கூடிவிட்டதோ?" எனக் கூறினாலும், குடும்ப ஹோட்டல் பிசினஸ் (UDS குரூப்) முக்கியமாக அக்கா கார்த்திகா நாயரே கவனித்து வருகிறார்.

துளசி நாயர் சினிமாவிலிருந்து விலகிய பிறகு குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட நலன் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருவதால் இயல்பாக உடல் எடை கூடியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

எது எப்படியோ, உடல் எடை கூடுவதும் குறைவதும் தனிப்பட்ட விஷயம். அதை வைத்து உருவக் கிண்டல் செய்வது தவறு என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். துளசி நாயரின் இந்த மாற்றம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary : Thulasi Nair, daughter of veteran actress Radha, debuted in Mani Ratnam's 2013 film Kadal and acted in Yaan. After stepping away from cinema, her recent photo from her grandmother's funeral in November went viral on social media, showing noticeable weight gain and sparking discussions about personal changes.