Posts

Showing posts with the label Radha daughter

நடிகை ராதாவின் மகளா இது? அடையாளமே தெரியாமல் இப்படி மாறிப்போக இப்படியொரு காரணமா?

Image
தமிழ் சினிமாவின் 80களின் எவர்கிரீன் நாயகியாக வலம் வந்த நடிகை ராதா, பாரதிராஜா இயக்கத்தில் 'அலைகள் ஓய்வதில்லை' படம் மூலம் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். பின்னர் மும்பை தொழிலதிபர் ராஜசேகரன் நாயரை திருமணம் செய்து சினிமாவிலிருந்து விலகிய ராதாவுக்கு, விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர், துளசி நாயர் என்ற இரு மகள்களும் உள்ளனர். இதில் ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயர் தெலுங்கில் நாக சைதன்யாவுடன் அறிமுகமாகி, தமிழில் 'கோ' படம் மூலம் பிரபலமடைந்தார். அதேபோல் இளைய மகள் துளசி நாயர் 2013ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான 'கடல்' படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். கார்த்திக் - ராதா ஜோடி 'அலைகள் ஓய்வதில்லை'யில் அறிமுகமானதைப் போல, கௌதம் கார்த்திக் - துளசி நாயர் ஜோடி 'கடல்'லில் அறிமுகமாவது என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அர்ஜுன், அரவிந்த் சாமி உள்ளிட்டோரும் நடித்த இப்படம் வெளியாவதற்கு முன்பே 17 கோடிக்கு மேல் வியாபாரமானது. ஆனா...