கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அமைதியான மாவனட்டி கிராமத்தில், சூரியன் மறையும் வேளையில், 13 வயது ரோகித் தன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான்.
எட்டாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன், தன் தந்தை சிவராஜ் மற்றும் தாய் மஞ்சு ஆகியோரின் ஒரே ஆதரவாக இருந்தான். கட்டிடத் தொழிலாளியான சிவராஜின் குடும்பம் ஏழ்மையில் வாழ்ந்தாலும், ரோகித்தின் சிரிப்பில் அவர்களுக்கு உலகமே இருந்தது.
ஜூலை 2 அன்று மாலை 4 மணியளவில், ரோகித் வீட்டு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென அவன் காணாமல் போனான். முதலில் யாரும் பெரிதாக எண்ணவில்லை. அக்கம் பக்கத்தில் தேட ஆரமபித்தனர். ஆனால் இரவு ஆகியும், சிறுவன் திரும்பாததால் பெற்றோரின் மனம் பதறியது.

ஊரெங்கும் தேடியபோது, சிலர் "இரண்டு இளைஞர்கள் காரில் ரோகித்தை அழைத்துச் சென்றதாக" கூறினர். அதிர்ச்சியடைந்த சிவராஜும் மஞ்சுவும் உடனே அஞ்சட்டி காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர்.
ஆனால், காவல் ஆய்வாளர் வங்கஜா அலட்சியமாக "விடிந்ததும் பார்க்கலாம்.. இப்போ கம்ப்ளெய்ன்ட் குடுத்துட்டு கெளம்புங்க.." என்று கூறிவிட்டார். அந்த இரவு ரோகித்தின் பெற்றோருக்கு நரகமாக இருந்தது.
அடுத்த நாள் காலை, கொதித்துப் போன உறவினர்களும் கிராம மக்களும் அஞ்சட்டி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். "எங்கள் குழந்தையை உடனே மீட்க வேண்டும்!" என்று கோஷமிட்டனர். "ஏழை மக்களின் புகாரை ஏன் அலட்சியப்படுத்துகிறீர்கள்? கோடீஸ்வரர்களுக்கு மட்டும் தான் நடவடிக்கை எடுப்பீர்களா?" என்று கேள்வி எழுப்பினர்.

போராட்டத்தின் அழுத்தத்தால் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அப்போதுதான் கொடூர உண்மை வெளியானது. தேன்கணிக்கோட்டை சாலையில், திருமுடுக்கு கீழ்ப்பள்ளம் அருகேயுள்ள வனப்பகுதியில் 50 அடி ஆழமான பள்ளத்தில் ரோகித் சடலமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடல் முழுவதும் காயங்கள். மூச்சுத் திணறடிக்கப்பட்டிருந்தது. கிராம மக்கள் கூட்டமாகச் சென்று சடலத்தைப் பார்த்து கதறினர். "இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? உடனே ஆக்ஷன் எடுத்திருந்தால் என் மகன் உயிருடன் இருந்திருப்பானே!" என்று சிவராஜ் கண்ணீர் விட்டார்.
போராட்டம் தீவிரமடைந்தது. சடலத்தை உடற்கூறாய்வுக்கு அனுப்பாமல், அஞ்சட்டி பேருந்து நிலையத்தில் வைத்தே போராட்டத்தைத் தொடர்ந்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

"உரிய விசாரணை நடத்தப்படும்" என்று உறுதியளித்த பிறகே போராட்டம் கைவிடப்பட்டது. சடலம் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது. விசாரணையில் அதிர்ச்சி தரும் வாக்குமூலங்கள் வெளியாகின.
மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதேவன் (21), அருகிலுள்ள உன்னிசன அள்ளியைச் சேர்ந்த மாதேவா (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன், 19 வயதான கீர்த்தனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண்ணும் (மாதேவனின் காதலி) கைது செய்யப்பட்டாள்.
மாதேவனுக்கு அந்த இளம்பெண்ணுடன் ரகசிய உறவு இருந்தது. ஒரு மாலை, இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்த போது விளையாட்டுத்தனமாக அங்கு சென்ற ரோகித் அதைப் பார்த்துவிட்டான்.
இதை, "ஊரில் சொல்லிவிடுவானோ?" என்ற பயத்தில் மாதேவன் தன் நண்பன் மாதேவாவிடம் கூறினான். மூவரும் சதி செய்தனர்.
ரோகித் விளையாடிக் கொண்டிருந்தபோது, தின்பண்டங்கள் கொடுத்து ஏமாற்றி காரில் ஏற்றினர். ஊரை விட்டு வெளியே சென்றதும், அவன் வாயில் பீர் ஊற்றி மயக்கினர்.

பின்னர், முகத்தை மூடி மூச்சுத் திணறடித்துதிருமுடுக்கு அருகேயுள்ள பள்ளத்தில் தூக்கி எறிந்து கொன்றனர். இச்சம்பவம் கிராம மக்களை அதிர்ச்சியடையச் செய்தது. "ஒரு ரகசியத்தை மறைக்க ஒரு குழந்தையின் உயிரைப் பறித்துவிட்டார்களே!" என்று கண்ணீரோடு கூறினர்.
காவல்துறையின் ஆரம்ப அலட்சியத்தால் தாமதமானது என்பதால், "உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் ரோகித் இன்று உயிருடன் இருந்திருப்பான்" என்று உறவினர்கள் கோபமடைந்தனர்.
இந்தக் கொடூரம், ஏழை மக்களின் புகார்களை உடனடியாகக் கவனிக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது. மாவனட்டி கிராமத்தில் இன்றும் ரோகித்தின் நினைவு கண்ணீராக வழிகிறது. "நியாயம் வேண்டும்... நீதி வேண்டும்!" என்ற கோஷங்கள் அந்த ஊரின் வானத்தைத் தொடர்ந்து எதிரொலிக்கின்றன.
Summary in English : In Krishnagiri district's Mavanatti village, 13-year-old Rohit went missing while playing. After family and villagers protested against delayed police response, his body was found in a pit. Three persons, including a woman, were arrested following investigation into the incident.

