Posts

Showing posts with the label child missing

“வலிக்குது.. விடுங்க.. துடிதுடித்த சிறுவன்..” பீர் கொடுத்து இளம்பெண் செய்த அசிங்கம்.. விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி!

Image
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அமைதியான மாவனட்டி கிராமத்தில், சூரியன் மறையும் வேளையில், 13 வயது ரோகித் தன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான். எட்டாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன், தன் தந்தை சிவராஜ் மற்றும் தாய் மஞ்சு ஆகியோரின் ஒரே ஆதரவாக இருந்தான். கட்டிடத் தொழிலாளியான சிவராஜின் குடும்பம் ஏழ்மையில் வாழ்ந்தாலும், ரோகித்தின் சிரிப்பில் அவர்களுக்கு உலகமே இருந்தது. ஜூலை 2 அன்று மாலை 4 மணியளவில், ரோகித் வீட்டு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென அவன் காணாமல் போனான். முதலில் யாரும் பெரிதாக எண்ணவில்லை. அக்கம் பக்கத்தில் தேட ஆரமபித்தனர். ஆனால் இரவு ஆகியும், சிறுவன் திரும்பாததால் பெற்றோரின் மனம் பதறியது. ஊரெங்கும் தேடியபோது, சிலர் "இரண்டு இளைஞர்கள் காரில் ரோகித்தை அழைத்துச் சென்றதாக" கூறினர். அதிர்ச்சியடைந்த சிவராஜும் மஞ்சுவும் உடனே அஞ்சட்டி காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர். ஆனால், காவல் ஆய்வாளர் வங்கஜா அலட்சியமாக "விடிந்ததும் பார்க்கலாம்.. இப்போ கம்ப்ளெய்ன்ட் குடுத்துட்டு கெளம்புங்க.." என்று கூறிவிட்டார். அந்த இரவு ரோகித்தின் பெற்றோருக்கு நரகமாக இருந்...