வேறு ஆணுடன் உடலுறவு.. கணவனுக்கு வீடியோ காலில் காட்டிய மனைவி.. அடுத்து நடந்த அதிர்ச்சி திருப்பம்..

இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்குப் பிறகு கள்ள உறவுகள், குடும்பப் பிரச்னைகள் மற்றும் சில சமயங்களில் கொலை வரை செல்லும் கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதுபோன்ற சூழலில், தனது மனைவி மற்றும் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு கணவன் எடுத்த முடிவு உத்தரப் பிரதேச மக்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மிர்சாப்பூரைச் சேர்ந்த தஞ்சய் (Tanjay), தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர். இவருக்கும் ஜலால்பூர் (ஜௌன்பூர் மாவட்டம்) பகுதியைச் சேர்ந்த பம்மி (Pammi) என்பவருக்கும் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தஞ்சய்க்கு மும்பையில் சிறந்த வேலை கிடைத்ததால், மனைவி மற்றும் குழந்தையுடன் மும்பைக்குச் சென்று குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.

ஆனால், அங்கேயே பம்மிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜு (Raju) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் படிப்படியாக திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு, தஞ்சய் அலுவலகம் சென்றிருந்தபோது, பம்மி தன்னுடன் வாழ விருப்பமில்லை என்றும், ராஜுவுடன் செல்லப் போவதாகவும் தெரிவித்தார்.

இதைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்த தஞ்சய், மனைவியை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், பம்மி தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

இந்நிலையில், இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். கடந்த வாரம், கள்ளக்காதலன் ராஜூவை வீட்டிற்கே அழைத்து உல்லாசமாக இருக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார் பம்மி.

அப்படி எதுவும் செய்யாதே, நம்முடைய குடும்பம், குழந்தைகளை நினைத்து பார் என்று சொல்லிவிட்டு வேலைக்கு சென்றிருக்கிறார் தஞ்சய். அலுவலகத்தில் இருந்த போது, அலங்கோலமான நிலையில் வீடியோகாலில் தொடர்பு கொண்ட மனைவி பம்மி, சீக்கிரமா வீட்டுக்கு வா.. வந்து நான் என்ன பண்ணுறேன்னு பாரு.. என அழைத்துள்ளார். பதறியடித்துக்கொண்டு சென்று பார்த்த போது, அங்கு தன்னுடைய காதலன் ராஜூவுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார் பம்மி.

இதை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார் தஞ்சய். ஆனால், வன்முறை, கொலை போன்ற எந்தத் தேவையற்ற சம்பவங்களையும் தவிர்க்க விரும்பிய தஞ்சய், ஒரு மாற்றுத்தீர்வைத் தேர்ந்தெடுத்தார். அவர் தனது மனைவி பம்மி மற்றும் அவளது காதலன் ராஜு ஆகியோரை குளிக்க சொல்லி, ஜௌன்பூர் நீதிமன்றம் அருகே உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு, வழக்கறிஞர்கள் மற்றும் தரப்பினரின் முன்னிலையில் முறையான சட்ட ரீதியான ஆலோசனைகளுக்குப் பிறகு, திருமண சடங்குகளின்படி பம்மியை ராஜுவுக்கு திருமணம் செய்து வைத்தார். தஞ்சய் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி, மகிழ்ச்சியுடன் வழியனுப்பினார்.

இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சய் இதுகுறித்து கூறுகையில்,

"தேவையற்ற வன்முறை மற்றும் ஆபத்துகளைத் தவிர்க்கவே இந்த முடிவை எடுத்தேன். மேலும், எனது மகனை நானே பொறுப்பேற்று வளர்த்துக் கொள்வேன்" என்றார்.

இது போன்ற சம்பவங்கள் சமூகத்தில் அதிகரித்து வரும் கள்ள உறவுகள் மற்றும் குடும்பப் பிரச்னைகளுக்கு ஒரு வித்தியாசமான, அமைதியான தீர்வை வழங்கியுள்ளது. தஞ்சயின் இந்த முடிவு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Summary : In Uttar Pradesh, a man from Mirzapur discovered his wife's extramarital relationship in Mumbai. Instead of conflict, he calmly arranged and solemnized her marriage with her partner at a temple near Jaunpur court, blessed them, and decided to raise their son alone.