மூன்று குழந்தைகள்.. கணவனை விட்டு எஸ்.ஐ-யுடன் பத்து ஆண்டுகள் கள்ளத்தொடர்பு.. இறுதியில் அரங்கேறிய சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..!

கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு ஒரு சுவாரஸ்யமான (ஆனால் சர்ச்சைக்குரிய) உண்மை ஆகும். இதை எளிமையான கதை வடிவில் கொடுத்துள்ளோம்.

2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கியது இந்தக் கதை.

வினோதினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏற்கனவே திருமணமானவர், மூன்று குழந்தைகளுக்கு அம்மா. தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால், சட்டப்படி அவர்களுடைய திருமணம் இன்னும் முடிந்தபாடில்லை. அதாவது விவாகரத்து வாங்கவில்லை. விவாகரத்து வழக்கு கூட தாக்கல் செய்யப்படவில்லை.

அப்போது, வினோதினிக்கு, மகேஷ் என்ற ஒரு உதவி ஆய்வாளர் அறிமுகமானார். இருவரும் நெருக்கமான உறவுக்கு வந்தனர்.வினோதினிகூறியதன்படி, அந்த போலீஸ் அதிகாரி மகேஷ் "நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன்" என்று சொல்லி, பல ஆண்டுகளாக (2016 முதல் 2025 ஜூலை வரை) உடல் உறவு வைத்திருந்ததாக குற்றச்சாட்டு.

இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். மேலும், போலீஸ் காரன் பொண்டாட்டி என ஊருக்குள் பவுசாக சுற்றி வந்துள்ளார் இந்தவினோதினி. இந்த பவுசு பிடித்து போகவே, இருவருக்கும் உறவு தொடர்ந்ததாகவும் சொல்லப்பட்டது.

இதற்கு நடுவில், 2025 ஜனவரியில் அந்த போலீஸ் அதிகாரி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும், இன்னைக்கு வச்ச கறிக்குழம்பை விட, நேத்து வச்ச மீன் குழம்புக்கு ருசி ஜாஸ்தி என்று திருமணத்திற்கு பிறகும்வினோதினியுடன்உல்லாச உறவு தொடர்ந்ததாக கூறப்பட்டது.

உல்லாச உறவு என்று வந்து விட்டால் உன்னை மிஞ்ச ஆள் இல்லை என்றுவினோதினியின் பணிவிடை பாராட்டி, திருமணத்திற்கு பிறகும்வினோதினியுடன் உல்லாச உறவை தொடர்ந்து வந்துள்ளார் மகேஷ்.

ஜூலை 2025-ல்வினோதினிபோலீஸில் புகார் கொடுத்தார். குற்றச்சாட்டு: அவர் திருமண வாக்குறுதியால் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தார் (BNS பிரிவு 64(2)(m) & 69-ன் கீழ் - இது புதிய சட்டத்தில் false promise of marriage-ஆல் ஏமாற்றி உறவு வைத்திருந்தால் வரும் குற்றம்).

போலீஸ் அதிகாரி மகேஷ் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்திற்கு சென்றார்.

நீதிமன்றம் (நீதிபதி பெச்சு குரியன் தாமஸ்) விசாரித்தபோது முக்கிய கேள்வி இதுதான்:

"ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து ஆகாத ஒரு பெண்ணுக்கு, வேறொருவர் திருமணம் செய்து கொள்வேன் என்று சொன்னால் அது சட்டப்படி சாத்தியமா?"

நீதிமன்றம் சொன்னது:

"இரு தரப்பும் ஏற்கனவே திருமணமானது தெரிந்திருந்தால், 'நான் உன்னை மணந்து கொள்வேன்' என்ற வாக்குறுதி சட்டப்படி சாத்தியமில்லாதது. அப்படியானால் false promise of marriage என்ற குற்றச்சாட்டு prima facie (முதல் பார்வையில்) இருக்க முடியாது."

வினோதினியின் திருமணம் இன்னும் சட்டப்படி முடியவில்லை என்பது தெளிவாக இருந்தது. 2016-லேயே அவரது கணவர் மனைவியை என்னுடன் சேர்ந்து வாழ அனுப்ப வேண்டும் என்ற போலீஸ் ஸ்டேஷனில் கேட்ட போது கூட "நான் திரும்பி வரமாட்டேன்" என்று கணவரிடம் சொல்லிவிட்டு, அந்த போலீஸ் அதிகாரியுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.

எனவே, இது ஏமாற்று வாக்குறுதி அடிப்படையிலான பாலியல் குற்றம் என்று சொல்ல முடியாது என்று நீதிமன்றம் கருதியது.

மேலும், காவல்துறை விசாரணைக்கு இனி கஸ்டடியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், வழக்கு தீவிரமானதாக இருந்தாலும் இந்தக் குற்றச்சாட்டு சட்டரீதியாக நிலைக்காது என்றும் கூறி...

ஜாமீன் கொடுத்தது! (சில நிபந்தனைகளுடன் - விசாரணைக்கு ஒத்துழைப்பது, புகார் கொடுத்தவரை தொடர்பு கொள்ளாமல் இருப்பது போன்றவை).

சுருக்கமாக சொன்னால் :"ஏற்கனவே திருமணமான பெண்ணிடம் 'திருமணம் செய்து கொள்வேன்'னு சொல்லி ஏமாற்ற முடியாது... ஏன்னா அது சட்டப்படி சாத்தியமே இல்லை!" என்று நீதிமன்றம் சொல்லி, போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன் தந்திருக்கிறது.

இது false promise of marriage வழக்குகளில் முக்கியமான தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

Summary : Kerala High Court granted bail to a police sub-inspector accused of maintaining a long-term relationship with a married woman who had separated from her husband. The court held that a false promise of marriage cannot apply prima facie since the complainant was already in a subsisting marriage. Custodial interrogation was deemed unnecessary.