ஹைதராபாத் பொண்ணுக்கு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி.. விசாரணையில் வெளியான குலைநடுங்க வைக்கும் தகவல்..

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம், கொலம்பியா நகரில் வசித்து வந்த 27 வயதான இந்திய வம்சாவளி பெண் நிகிதா கோடிஷாலா (Nikitha Godishala) கத்திக்குத்து காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த நிகிதா, Vheda Health நிறுவனத்தில் டேட்டா அனலிஸ்ட்டாக பணியாற்றி வந்தார்.

நிகிதா டிசம்பர் 31 ஆம் தேதி முதல் தொடர்பு கொள்ள முடியாமல் மாயமான நிலையில், ஜனவரி 2 ஆம் தேதி அவரது முன்னாள் அறைத்தோழரான அர்ஜுன் சர்மா (26) என்பவர் போலீசில் மிசிங் புகார் அளித்தார்.

ஆனால், அதே நாளில் அர்ஜுன் இந்தியாவுக்கு தப்பி ஓடியது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த ஹோவர்டு கவுண்டி போலீசார் அர்ஜுனின் அப்பார்ட்மென்ட்டில் சோதனை நடத்தியபோது, ஜனவரி 3 ஆம் தேதி நிகிதாவின் உடல் கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.

போலீசார் அர்ஜுன் சர்மா மீது முதல் மற்றும் இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். கொலை டிசம்பர் 31 இரவு 7 மணிக்குப் பிறகு நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அர்ஜுன் இந்தியாவுக்கு தப்பியோடியதால், FBI மற்றும் இன்டர்போல் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

நிகிதாவின் குடும்பத்தினர் வெளியிட்ட தகவலின்படி, அர்ஜுன் சர்மா நிகிதாவின் முன்னாள் காதலன் அல்ல, மாறாக சில காலம் ஒன்றாக அறையில் தங்கியிருந்த அறைத்தோழர்.

அர்ஜுன் நிகிதாவிடம் கடனாக பெற்ற சுமார் 50,000 அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.40 லட்சம்) திரும்ப கேட்டதாலேயே இந்த கொலை நடந்திருக்கலாம் என நிகிதாவின் தந்தை ஆனந்த் கோடிஷாலா சந்தேகிக்கிறார்.

மேலும், அர்ஜுன் நிகிதாவின் வங்கிக் கணக்கிலிருந்து அனுமதியின்றி சில ஆயிரம் டாலர்களை எடுத்துக்கொண்டதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நிகிதாவின் உடல் அமெரிக்காவில் உள்ள நிலையில், அதனை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய அரசு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவ வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய தூதரகம் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாகவும், தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Summary in English : A 27-year-old Indian-origin woman, Nikitha Godishala from Hyderabad, was found deceased in her former roommate's apartment in Columbia, Maryland, US. The roommate, Arjun Sharma, 26, reported her missing on January 2 before fleeing to India the same day. Police discovered her body with injuries on January 3 and later arrested Sharma in Tamil Nadu. The family suspects a financial dispute and seeks assistance to repatriate her remains.