Posts

Showing posts with the label Indian-origin woman

ஹைதராபாத் பொண்ணுக்கு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி.. விசாரணையில் வெளியான குலைநடுங்க வைக்கும் தகவல்..

Image
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம், கொலம்பியா நகரில் வசித்து வந்த 27 வயதான இந்திய வம்சாவளி பெண் நிகிதா கோடிஷாலா (Nikitha Godishala) கத்திக்குத்து காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த நிகிதா, Vheda Health நிறுவனத்தில் டேட்டா அனலிஸ்ட்டாக பணியாற்றி வந்தார். நிகிதா டிசம்பர் 31 ஆம் தேதி முதல் தொடர்பு கொள்ள முடியாமல் மாயமான நிலையில், ஜனவரி 2 ஆம் தேதி அவரது முன்னாள் அறைத்தோழரான அர்ஜுன் சர்மா (26) என்பவர் போலீசில் மிசிங் புகார் அளித்தார். ஆனால், அதே நாளில் அர்ஜுன் இந்தியாவுக்கு தப்பி ஓடியது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த ஹோவர்டு கவுண்டி போலீசார் அர்ஜுனின் அப்பார்ட்மென்ட்டில் சோதனை நடத்தியபோது, ஜனவரி 3 ஆம் தேதி நிகிதாவின் உடல் கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் அர்ஜுன் சர்மா மீது முதல் மற்றும் இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். கொலை டிசம்பர் 31 இரவு 7 மணிக்குப் பிறகு நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். அர்ஜுன் இந்தியாவுக்கு தப்பியோடியதால், FBI மற்றும் இன்டர்போல் உதவியுடன்...