Posts

Showing posts with the label natural death

நண்பனின் மனைவியை நூதன முறையில் மிரட்டி உல்லாசம்.. வெளிவந்த 4 ஆண்டு கொலஐ ரகசியம்.. சினிமாவுல கூட இல்லாத ட்விஸ்ட்..

Image
சத்தீஸ்கரின் ஒரு சிறிய நகரத்தில், காதல், துரோகம், கொலை மற்றும் பிளாக்மெயில் ஆகியவை ஒரு கொடூரமான சங்கிலியாக இணைந்து, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்து சிதறியுள்ளது. இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தில் மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரேகா, ஆறு ஆண்டுகளாக விக்ரமை தீவிரமாக காதலித்து வந்தாள். ஆனால் பெற்றோர்களின் வற்புறுத்தலால், அர்ஜுன் என்ற இன்னொரு இளைஞனை திருமணம் செய்து கொண்டாள். திருமணத்துக்குப் பிறகும் ரேகாவால் விக்ரமை மறக்க முடியவில்லை. அவளது மனம் எப்போதும் அவனிடமே இருந்தது. கணவர் அர்ஜுனுடன் அடிக்கடி சண்டை, கோபம், வாக்குவாதங்கள் – இவை வீட்டை நரகமாக்கின. ஒரு நாள், ரேகா வீட்டை விட்டு வெளியேறி விக்ரமுடன் சென்று விட்டாள். பெற்றோர்கள் மிரட்டி, புத்திமதி சொல்லி, அவளை மீண்டும் அர்ஜுனின் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டனர். ஆனால், ரேகாவின் மனதில் கொலை எண்ணம் துளிர்த்தது. "அர்ஜுன் இல்லாவிட்டால், விக்ரமுடன் சுதந்திரமாக வாழலாம்" என்று முடிவு செய்தாள். திட்டம் கொடூரமானது. ஒரு இரவு, அர்ஜுனுக்கு அதிகமான மது கொடுத்து மயக்கினாள். நள்ளிரவில் விக்ரமும் அவனது நண்பன் ராகேஷும் திருட்டுத்தனமா...