43 வயதில் நடிகை திரிஷா திருமணம்! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்!

நடிகை திரிஷா கிருஷ்ணன் திருமணம் செய்யப் போகிறார்... அது மட்டுமல்ல, தெலங்கானாவைச் சேர்ந்த பிரபல அரசியல் குடும்பத்தின் பேரனும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஒருவருடன் திருமண பந்தத்தில் இணையவுள்ளார் என்ற பரபரப்பு தகவல் தற்போது தெலுங்கு & தமிழ் சினிமா வட்டாரங்களில் தீயாய்ப் பரவி வருகிறது!

தற்போது 42 வயதாக உள்ள திரிஷா, தன்னைவிட 5 வயது குறைவான 38 வயது நபரைத் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக இந்த தகவல்கள் கூறுகிறது.

மேலும், வரும் ஜூன் மாதத்தில் – அதாவது திரிஷா 43 வயதை எட்டும் போது – இந்தத் திருமணம் நடைபெறவுள்ளது என்று சில வட்டாரங்கள் உறுதியாகப் பேசுகின்றன.

இரு குடும்பங்களும் நெருங்கிய தொடர்பில் உள்ளதால், இந்தத் திருமணம் குடும்ப அமைப்பில் மிகச் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரிஷாவின் திருமண வாழ்க்கைக்கு இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆனால்... இதுவரை திரிஷா தரப்பிலோ, அவரது குடும்பத்தாரோ, அல்லது திரைத்துறையில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதெல்லாம் வெறும் வதந்தி மட்டுமா? அல்லது விரைவில் பெரிய ஆச்சரிய அறிவிப்பு வர இருக்கிறதா?

திரிஷாவின் ரசிகர்களுக்கு இப்போது காத்திருப்பு தான் மிகப்பெரிய சுவாரஸ்யம்!

இந்தத் தகவல் உண்மையா இல்லையா என்பதை நாட்கள் தான் சொல்லும்... ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி வைரலாகி வருவது உறுதி!

Summary : Actress Trisha Krishnan is reportedly set to marry a film producer from a prominent political family in Telangana. The groom is said to be five years younger than her. The wedding is expected to take place in June when she turns 43. No official confirmation has been released so far.