ஆள் இல்லாத காடு, 20 வயது ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற 33 வயது பெண்! அரங்கேறிய காது கூசும் அசிங்கம்!

முடிப்பள்ளி கிராமம், சித்தூர் மாவட்டம். அங்கு வசித்த சந்திரம்மா, 33 வயது இளம் பெண். இரண்டு குழந்தைகளுக்கு தாய். கணவருடன் பிரிந்து, தாய் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தாள்.

குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து, அவள் ஒரு டெய்லராக வேலை செய்தாள். அதோடு சீட்டு பிடிப்பது, வட்டிக்கு பணம் கொடுப்பது போன்ற சிறு தொழில்களையும் செய்து குடும்பத்தை நடத்தினாள்.

சந்திரம்மா கறாரான பெண். வரவு-செலவில் துல்லியமாக இருப்பாள். அவளுக்கு 20 வயதான சுப்பிரமணியம் என்ற இளைஞனுடன் நட்பு ஏற்பட்டது. அவன் அவளது நண்பர்களில் ஒருவன்.

இந்த நட்பு ஒரு கட்டத்தில், அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. இருவரும் சேர்ந்து சினிமா, பார்க், கோயில் என பைக்கில் ஊர் சுற்ற ஆரம்பித்தனர். கணவனை பிரிந்து தனிமையில் இருந்த சந்திரம்மாவிற்கு சுப்பிரமணியின் அரவணைப்பு புது உலகத்தை காட்டியது.

தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதை மறந்து சுப்பிரமணியுடன் நெருக்கமாக இருந்த சந்திரம்மா அவனுக்கு வட்டிக்கு பணம் கொடுத்தும் உதவியிருகிறாள். நாளைடவில் 2 லட்சம் ரூபாய் பணத்தை வட்டிக்கு வாங்கியிருந்தான் சுப்பிரமணி.

ஆனால், பணத்தை திருப்பிக் கொடுக்காமல் அசால்டாக இருந்தான். சந்திரம்மா அடிக்கடி அவனை நினைவூட்டி, வட்டியுடன் பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி நெருக்கடி கொடுத்தாள். இது இருவருக்கும் இடையே தகராறை ஏற்படுத்தியது.

நாட்கள் செல்லச் செல்ல, சுப்பிரமணியத்துக்கு இந்த நெருக்கடி தாங்க முடியவில்லை. “பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இவளை எப்படி அமைதிப்படுத்துவது?” என்று யோசித்தான். இறுதியில், கொலை செய்யும் கொடூரமான முடிவுக்கு வந்தான். தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டினான்.

ஒரு நாள், மாலை நேரம். சுப்பிரமணியம் சந்திரம்மாவிடம் வந்தான். “ கொஞ்சம், தங்க நகை வாங்கணும்... உங்க பணத்தையும் இன்னைக்கே செட்டில் பண்ணிடுறேன்.. வாங்க போகலாம்..” என்று கூறினான். சந்திரம்மா, நம்பிக்கையில் அவனது இருசக்கர வாகனத்தில் ஏறினாள். இருவரும் புறப்பட்டனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத தனிமையான காட்டுப்பகுதியை பைக் நெருங்கியது. என்ன கத்தி கூப்பாடு போட்டாலும் என்ன ஆச்சு என கேட்க ஒரு ஆள் கூட இல்லை. ஆனால், சுப்பிரமணியின் இரு நண்பர்கள் மறைவிலிருந்து வெளிப்பட்டனர். சந்திரம்மா உடல் நடுங்கியது. இங்க எதுக்கு கூட்டிகிட்டு வந்த என்று அப்பாவியாக சுப்ரமணியிடம் கேட்டாள். ஆனால், மூவரும் சேர்ந்து சந்திரம்மாவை தாக்கினர்.

அவள் எதிர்ப்பு தெரிவித்தாள், ஆனால் மூன்று ஆண்களின் வலிமைக்கு முன் அவள் திணறினாள். சுப்பிரமணியம் அவளை அடித்து தரையில் வீழ்த்தினான். உயிருக்கு போராடிய அவளின் கழுத்தை நெரித்தான். சில நிமிடங்களில்... சந்திரம்மாவின் உடல் குளிர்ந்து. அவளது போராட்டாம் ஓய்ந்தது.

கொலை முடிந்ததும், அவர்கள் அவளது உடலை அருகிலிருந்த முட்புதரில் தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றனர். சுப்பிரமணியம் மாலையில் தனியாக வீட்டுக்கு திரும்பினான். பிறகு, ஒரு கடத்தல் நாடகம் ஆடினான்.

“சந்திரம்மாவை காரில் வந்த ஒரு கும்பல் கடத்திச் சென்றுவிட்டது” என்று போலீசில் புகார் அளித்தான். அவன் நினைத்தான் – இந்த நாடகம் எல்லோரையும் ஏமாற்றிவிடும் என்று.

ஆனால், சந்திரம்மாவின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். “எங்கள் மகள் காணாமல் போய்விட்டாள்” என்று அழுதனர். சித்தூர் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கினர். சந்தேகத்தின் பேரில் சுப்பிரமணியத்தை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

முதலில் அவன் பொய் சொன்னான். ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் அவன் உடைந்தான். “நான்தான் கொலை செய்தேன். பணத்துக்காக... என் நண்பர்களும் உடந்தை” என்று வாக்குமூலம் அளித்தான். போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்திரம்மாவின் உடலை மீட்டனர். உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுப்பிரமணியம் மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் முடிப்பள்ளி கிராமம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “நம்பிய நண்பனே இப்படி செய்வானா?” என்று உறவினர்களும் அக்கம்பக்கத்தாரும் கண்ணீர் விட்டனர்.

சந்திரம்மாவின் இரு குழந்தைகள் தாயில்லாமல் தவித்தனர். ஒரு பெண்ணின் கடின உழைப்பும், குழந்தைகளுக்கான கனவும், ஒரு பணப் பிரச்னையால் நொறுங்கிப் போனது.

இந்தக் கொலை, பணத்துக்காக நட்பைத் துரோகம் செய்யும் மனித மூளையின் இருண்ட பக்கத்தை நினைவூட்டியது.

போலீசார் தீவிரமாக விசாரணை செய்து, குற்றவாளிகளை விரைவில் நீதிமன்றத்துக்கு நிறுத்தினர். சந்திரம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும்... அவரது குழந்தைகளுக்கு வலிமை கிடைக்கட்டும்.

இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை வடிவ செய்தி. நம்பிக்கை துரோகமும், பண ஆசையும் எத்தனை உயிர்களை பலி கொள்கின்றன என்பதை இது நினைவூட்டுகிறது.

Summary in English : In Mudipalli village of Chittoor district, Chandraamma a 33-year-old woman living with her two children disappeared one evening. She had gone with acquaintance Subramani on his vehicle. Police later found her body in nearby bushes after questioning. Subramani and two others were taken into custody following the investigation.