"3 எழுத்து இட்லி நடிகை.. குடும்பத்தை அழிக்க வந்த.." கைநீட்டி காறித்துப்பிய நடிகர் ரவி மோகன்!

சென்னை : நடிகர் ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை பிளாக்மெயில் செய்து அடிமையாக வைத்திருந்ததாகவும், தனது குடும்பத்தை கெடுத்தது “மூன்று எழுத்து இட்லி நடிகை” தான் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரவிமோகன், தனது தோழி கெனிஷா சென்னையை விட்டு வெளியேறுவதாக அறிவித்த நிலையில் கண்ணீர் மல்க பேசினார். “தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை” எனக் கூறி அவர் கதறி அழுதார்.

ரவிமோகன் மேலும் கூறியதாவது: “ஒரே நாளில் விவாகரத்து செய்திருக்க முடியும். ஆனால் என் பிள்ளைகளுக்காக அமைதி காத்தேன். எனக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் என்னுடன் இருந்தவர் என் தோழி கெனிஷா. அழகுக்காக செல்பவன் என்றால் எப்போதோ சென்றிருப்பேன். என்னுடன் இருந்த என் தோழியை அனுப்பிவிட்டீர்கள்.

ஏற்கனவே என் மீது பல கோடி கடன், வழக்குகள் உள்ளன. ஆனாலும் சிரித்தபடியே இருந்தேன். ஏஐ மூலம் எடிட் செய்து எனக்கு எதிராக பரப்புகிறார்கள். சைபர் துன்புறுத்தலால் பலர் உயிரிழந்துள்ளனர்.

ஆர்த்தியும் அவரது குடும்பத்தினரும் என்னை பிளாக்மெயில் செய்து அடிமையாக வைத்திருந்தனர். கையை அறுத்துக் கொண்டு பிளாக்மெயில் செய்துதான் ஆர்த்தி என்னை திருமணம் செய்து கொண்டார். மனைவி ஆர்த்தி குடும்பத்தின் மருத்துவ செலவுக்காக மாதம் ரூ.25,000 அனுப்பியிருக்கிறேன்.

எனது பெயரில் ஒரு வங்கிக் கணக்கு கூட இல்லை. சம்பாதித்த பணத்தை கூட சுதந்திரமாக செலவு செய்ய முடியவில்லை. என் குடும்பத்தை கெடுத்தது மூன்று எழுத்து இட்லி நடிகைதான். செய்வதை செய்துவிட்டு பெண்ணியம் பேசுகிறார். எப்படி இப்படி எல்லாம் நடிக்க முடிகிறது என்று தெரியவில்லை” என்றார்.

ரவிமோகனின் இந்த குற்றச்சாட்டுகள் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அவரது தோழி கெனிஷா சென்னையை விட்டு வெளியேறுவதாக அறிவித்திருந்த நிலையில், இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

Summary in English : Actor Ravi Mohan addressed reporters in Chennai and shared his emotional struggles. He spoke about standing by his children, financial challenges, and support from his friend Kenisha, who is leaving the city. He claimed his wife Aarthi’s family controlled his earnings and that a certain actress harmed his family life.
உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!