“மகளுடன் வாலிபர் உல்லாசம்” சடலத்தை மறைத்த இடத்தை கண்டு மிரண்டு போன போலீஸ்! ஹாலிவுட்டை மிஞ்சிய கொடூரம்!

யெர்ரகோண்டபாலம் : 21 வயது இளைஞர் கொலை - உடலை துண்டு துண்டாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசிய பெற்றோர் கைது

ஆந்திரப் பிரதேசம், மார்க்கபுரம் மாவட்டம்: காதலியின் வீட்டிற்கு சென்ற 21 வயது இளைஞரை, அவரது பெற்றோர் இரும்புக் கம்பியால் தாக்கிக் கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி மறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் எங்கே மறைக்கப்பட்டது என்பது தான் போலீசாரை மிரள வைத்துள்ளது. 

இறந்தவர் ஆஞ்சநேயலு (21). இவர் யெர்ரகோண்டபாலம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த இவர், அக்கா மற்றும் மாமாவிடம் வளர்ந்து வந்தார். 

அவருக்கு திருமணம் ஏற்பாடு செய்ய முடிவு செய்த அக்கா, கடந்த மே 13-ம் தேதி பெண் பார்க்க அழைத்துச் சென்றார். பெண் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில், “முக்கிய வேலை இருக்கிறது” எனக் கூறிவிட்டு ஆஞ்சநேயலு தனியாகப் பிரிந்து சென்றார்.

இரண்டு நாட்கள் கழித்தும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அக்கா மற்றும் உறவினர்கள் யெர்ரகோண்டபாலம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, ஆஞ்சநேயலுவின் செல்போன் சிக்னல் பொட்டிரெட்டிபல்லி பகுதியில் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 15 வயது சிறுமியுடன் (வெங்கட்ராமன் - ரமணா தம்பதியின் மகள்) ஆஞ்சநேயலு காதலித்து வந்தது தெரியவந்தது. மே 13 அன்று இரவு சிறுமி தனது பெற்றோர் வீட்டில் இல்லை எனக் கூறி ஆஞ்சநேயலுவை போன் செய்து அழைத்துள்ளார். இரவு 10.30 மணியளவில் அவர் சிறுமியின் வீட்டிற்குச் சென்றார்.

இருவரும் தனிமையில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக வீட்டிற்குத் திரும்பிய சிறுமியின் பெற்றோர் அவர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை வெங்கட்ராமன், அருகில் இருந்த இரும்புக் கம்பியால் ஆஞ்சநேயலுவை சரமாரியாகத் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

கொலையை மறைக்கும் நோக்கில், வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி ரமணா, பன்றி வெட்டும் கத்தியால் உடலை துண்டு துண்டாக வெட்டி, அருகிலுள்ள 100 அடி ஆழ்துளை கிணற்றில் வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வெங்கட்ராமன், ரமணா மற்றும் அவர்களது 15 வயது மகள் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆஞ்சநேயலுவின் உடலை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் யெர்ரகோண்டபாலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Summary : A 21-year-old man from Yerragondapalem, Andhra Pradesh, went missing after visiting a house in Pottireddipalli on May 13. Police investigation revealed he had gone to meet a 15-year-old girl. Her parents returned home and an incident occurred leading to his death. The couple later disposed of the body in a deep borewell. Police have arrested the family.