“மகளுடன் வாலிபர் உல்லாசம்” சடலத்தை மறைத்த இடத்தை கண்டு மிரண்டு போன போலீஸ்! ஹாலிவுட்டை மிஞ்சிய கொடூரம்!
யெர்ரகோண்டபாலம் : 21 வயது இளைஞர் கொலை - உடலை துண்டு துண்டாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசிய பெற்றோர் கைது ஆந்திரப் பிரதேசம், மார்க்கபுரம் மாவட்டம்: காதலியின் வீட்டிற்கு சென்ற 21 வயது இளைஞரை, அவரது பெற்றோர் இரும்புக் கம்பியால் தாக்கிக் கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி மறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் எங்கே மறைக்கப்பட்டது என்பது தான் போலீசாரை மிரள வைத்துள்ளது. இறந்தவர் ஆஞ்சநேயலு (21). இவர் யெர்ரகோண்டபாலம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த இவர், அக்கா மற்றும் மாமாவிடம் வளர்ந்து வந்தார். அவருக்கு திருமணம் ஏற்பாடு செய்ய முடிவு செய்த அக்கா, கடந்த மே 13-ம் தேதி பெண் பார்க்க அழைத்துச் சென்றார். பெண் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில், “முக்கிய வேலை இருக்கிறது” எனக் கூறிவிட்டு ஆஞ்சநேயலு தனியாகப் பிரிந்து சென்றார். இரண்டு நாட்கள் கழித்தும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அக்கா மற்றும் உறவினர்கள் யெர்ரகோண்டபாலம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, ஆஞ்சநேயலுவின் செல்போன் சிக்னல் பொட்டிரெட்டிபல்லி பகுதியில...