தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலஐ! வெளியான அதிர வைக்கும் காரணம்!

சென்னை : பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன், 15 கோடி ரூபாய் கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகி, நேற்று அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று மாலை அடையாறு பகுதியில் உள்ள பூங்காவில் இருந்து அவர் திடீரென ஆற்றில் குதித்ததாக தகவல் வெளியானது.

உடனடியாக மீட்கப்பட்ட அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று காலை பிரேத பரிசோதனை முடிவடைந்ததைத் தொடர்ந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், கே. ராஜன் கடன் பிரச்சனையால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளானதாக தெரிய வந்துள்ளது. சில மாதங்களாக குடும்பத்துடன் பிரிந்து வாழ்ந்த அவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார்.

அவ்வப்போது வீட்டுக்கு செல்லும்போது ஏற்பட்ட சண்டைகளும் அவரது மன உளைச்சலை அதிகரித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

15 கோடி ரூபாய் கடன் இருப்பதால் ஏற்பட்ட தொல்லை மற்றும் அதனால் வந்த மன உழைச்சலே தற்கொலைக்கு முக்கிய காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

கே. ராஜன் தமிழ் திரையுலகில் பல படங்களை தயாரித்த அனுபவமிக்க தயாரிப்பாளராக அறியப்படுகிறார். அவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

English Summary : Film producer K. Rajan was found deceased in the Adyar River on Sunday. Police investigation revealed that he had been facing a debt of 15 crore rupees. He had been living separately in a private hotel at Nungambakkam for a few months due to family issues and financial stress.