தாயின் கண் முன் காதலனுடன் உடலுறவு.. கடைசியில் தாய்க்கு நேர்ந்த கதி.. ஒரே சமயத்தில் இரண்டு பேருடன் உல்லாசம்..

மத்தியப் பிரதேசத்தின் பெத்வா நதிக்கரையோரம் அமைதியாக இருந்த இரவு நேரத்தில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இளம் காவலர் சுரேஷ் ஒரு அதிர்ச்சிகரமான காட்சியைக் கண்டார்.

அரைகுறையாக எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் ஆற்றங்கரையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க முயன்றார். ஆனால் அந்தப் பகுதியில் செல்போன் சிக்னல் சரியாக இல்லாததால், தனது நிலையத்தை நோக்கி வேகமாக ஓடினார்.

சுமார் 20 நிமிடங்களில் காவல் நிலையத்தை அடைந்த சுரேஷ், நடந்ததை விளக்கினார். உடனடியாக துணை ஆய்வாளர் ராமகிருஷ்ணன், ஒரு கான்ஸ்டபிள் மற்றும் சுரேஷ் ஆகிய மூவரும் அந்த இடத்திற்கு விரைந்தனர். அங்கு சென்றபோது அவர்களுக்காக காத்திருந்தது இன்னொரு பெரிய அதிர்ச்சி.

அங்கு 25 வயது இளைஞர் ராஜேஷ், அரைகுறையாக எரிந்த உடலின் மீது பெட்ரோல் ஊற்றி, கார் டயர் மற்றும் சர்க்கரை ஆகியவற்றைப் போட்டு முழுமையாக எரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.

மூவரும் சத்தமிட்டபடி நெருங்கியதும், எதிர்பாராத இந்த நிலையில் பதறிப்போன ராஜேஷ், தப்பிக்கும் நோக்கில் ஆற்றில் குதித்தார். ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக ஒரு காவலர் தண்ணீரில் இறங்கி அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து கைது செய்தனர்.

தடயவியல் நிபுணர்கள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணை தீவிரமடைந்தது. ராஜேஷின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இறந்து போன 50 வயது பெண் லட்சுமியின் மகள் பிரியா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் வெளியான தகவல்கள் மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தை அதிர வைத்துள்ளன. ராஜேஷ் கூறியதாவது: “பிரியாவை கடந்த மூன்று ஆண்டுகளாக நான் காதலித்து வந்தேன். 

அவர் ஏற்கனவே திருமணம் ஆகி, கணவருடன் வசித்து வந்தாலும், என்னுடனும் நெருக்கமாக இருந்தார். அவரது கணவருக்கு நான் 60 லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருந்தேன். அதன் வட்டிக்காக வீட்டிற்கு வரும்போது எங்களுக்கு இந்த தொடர்பு ஏற்பட்டது.”

பிரியா தனது கணவர் வீட்டிலிருந்து தாய் வீட்டிற்கு செல்வதாகக் கூறிவிட்டு, தாய் லட்சுமியின் வீட்டிற்கு ராஜேஷை அழைத்து உல்லாசமாக இருப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஒருபக்கம் கணவருடன் குடும்ப வாழ்க்கை, மறுபக்கம் தாய் வீட்டில் ராஜேஷுடன் உல்லாசம் என இரு வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

ஒரு நாள், இருவரும் தனியாக இருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த லட்சுமி, தனது மகளையும் ராஜேஷையும் அப்படி பார்த்து அதிர்ச்சியடைந்தார். “என் மாப்பிள்ளை உன்னை எவ்வளவு அன்போடு பார்த்துக் கொள்கிறார். 

இப்படி துரோகம் செய்வது சரியா? நீ என் மாப்பிள்ளைக்கு கடன் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இரு என் மாப்பிள்ளைக்கிட்ட சொல்லுறேன்” மாப்பிள்ளைக்கு இந்த விஷயத்தை தெரிவிக்கப் போவதாகக் கூறி தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார்.

பயந்துபோன பிரியா, வேண்டாம் என தனது தாயை தடுத்தார். கைகலப்பு நடைபெற்றது. ஒரு கட்டத்தில் தாயை கடுமையாகத் தாக்கினார். மயக்கமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அன்று இரவு வரை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பிரியா, ராஜேஷின் உதவியுடன் உடலை ஆற்றருகே கொண்டு சென்று எரிக்க முயற்சித்தார். அன்று இரவு பெய்த கனமழை காரணமாக உடல் முழுமையாக எரியவில்லை.

அடுத்த நாள், சரியாக எரிந்ததா என்பதைப் பார்க்க வந்த ராஜேஷ் மீண்டும் பெட்ரோல், டயர் மற்றும் சர்க்கரை கொண்டு வந்து எரிக்க முயன்றபோது, ரோந்து வந்த காவலர்களிடம் சிக்கினார்.

இந்த சம்பவம் பெத்வா நதிக்கரையைச் சுற்றிய பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மேலும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குடும்ப உறவுகளில் ஏற்படும் நம்பிக்கைத் துரோகங்கள் எந்த அளவுக்கு ஆபத்தானவை என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.

(இது உண்மை சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்ட கிரைம் கதை. பெயர்கள் மற்றும் நடந்த இடம் கற்பனை)

English Summary : In Madhya Pradesh near Betwa River, a young policeman found a partially burned body of a woman during patrol. A 25-year-old man was later seen trying to burn it further and was arrested. Investigation revealed a family dispute involving the woman’s daughter, leading to her arrest. The case has shocked the region.