உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் புல்கான் பகுதியைச் சேர்ந்த 45 வயதான மனீஷ் குப்தா, அந்தப் பகுதியில் மளிகை கடைகளுக்கு ஏஜெண்டாகப் பணியாற்றி வந்தவர். பின்னர் சொந்தமாக மளிகை கடை ஒன்றை நடத்தி குடும்பத்தை பராமரித்து வந்தார்.
அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய நிஹாரிகாவுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. பழக்கம் காதலாக மாறி, இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் 2017-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 6 வயது ரியான்ஸ் என்ற மகன் உள்ளான்.

மகன் பிறந்த பிறகு நிஹாரிகா தன் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து குடும்பத்தை கவனித்து வந்தார். ஆனால் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு, ஜம்முவைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் சமூக வலைத்தளத்தில் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
அந்தப் பழக்கம் படிப்படியாக திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி போனில் பேசியதோடு, நேரிலும் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் நிஹாரிகா எப்போதும் மொபைலில் மூழ்கியிருக்கும் நிலை உருவானது. இது கணவன் மனீஷ் மற்றும் மனைவிக்கு இடையே தொடர்ந்து வாக்குவாதங்களை ஏற்படுத்தியது.
ஒரு நாள் மகன் ரியான்ஸ், தன் தாய் வேறொரு ஆணுடன் வீடியோ கால் பேசுவதைப் பார்த்து தாத்தா ராம்கிஷோரிடம் சொன்னான். இதனை அறிந்த மனீஷ் மனைவியின் போனை சோதனையிட்டபோது உண்மை வெளியானது.
மனீஷ் தன் மனைவியை கண்டித்து, திருந்தி குடும்ப வாழ்க்கை வாழுமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும் அந்தத் தொடர்பு தொடர்ந்தது. கடந்த ஜூன் 5-ஆம் தேதி மதியம், மளிகை கடைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த மனீஷ், மனைவி தன் நண்பருடன் பேசுவதைக் கண்டு மீண்டும் கண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த நிஹாரிகா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவரின் வயிற்றில் சரமாரியாகக் குத்தினார். அப்போது போனில் இருந்த அந்த வாலிபர் “இன்றே அவன் கதையை முடித்துவிடு” என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
மனீஷின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தந்தை ராம்கிஷோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மனீஷ், ஜூன் 16-ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தார்.
மனீஷின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நிஹாரிகாவை கைது செய்துள்ளனர். அவரது ஜம்மு நண்பர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் புல்கான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary : In Kanpur’s Pulkana area of Uttar Pradesh, 45-year-old grocery shop owner Manish Gupta had a heated argument with his wife Niharika on June 5 over her external personal relationship. During the dispute, Niharika caused serious injuries to him with a knife. Manish was rushed to hospital and passed away on June 16. Police have arrested Niharika based on his father’s complaint and are inquiring about her associate from Jammu. The couple has a six-year-old son.