கர்நாடகாவின் மைசூரு மாவட்டம், ஹன்சூர் தாலுகாவில் உள்ள ஹிரசனஹள்ளி கிராமம். அங்கு வசித்து வந்த 25 வயது இளம்பெண் ரக்ஷிதா.
திருமணமாகி ஒரு இரண்டு வயது குழந்தைக்கு தாயாக இருந்த அவர், வெளியில் இருந்து பார்க்க சாதாரண இல்லத்தரசியாகத் தெரிந்தாலும், அவரது வாழ்க்கையில் சில ரகசியங்கள் இருந்தன.
சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு, திருமணத்துக்கு முன்னர் கல்குவாரியில் வேலை செய்யும் சித்தராஜு என்ற இளைஞருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. ரக்ஷிதாவின் கணவர் கேரளாவில் வேலை செய்து வரும் நிலையில், அந்த உறவு தொடர்ந்து வந்தது.

இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசி வந்தனர். குடும்ப சூழல், திருமண வாழ்க்கை ஆகியவை அவர்களுக்கு இடையேயான தொடர்பை முழுமையாக தடுக்கவில்லை.
ஒரு நாள் சனிக்கிழமை காலை, இருவரும் ஒன்றாக வெளியே செல்ல திட்டமிட்டனர். அருகிலுள்ள கோயிலுக்கு சென்ற பிறகு, மைசூரு அருகே உள்ள பேரியா (Bherya) பகுதியில் இருந்த ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.
அன்று மதியம் அல்லது மாலை நேரத்தில், அந்த அறைக்குள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. நீ உன் கணவனை பிரிந்து என்னோடு வந்துவிடு. நான் உன்னையும், உன் குழந்தைகளையும் பார்த்துக்கொள்கிறேன். என்றான் சித்த ராஜு.
ஆனால்,ரக்ஷிதா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தாள். உன்னோட உடலுறவுக்கு மட்டும் சம்மதம். ஆனால், உன்னுடன் குடும்பம் நடத்த வர வேண்டும் என எதிர்பார்க்காதே. ஜிம் பாடி போல இருக்கும் உன்னோட உடல் எனக்கு வேணும். ஆனால், உன்னோட பொருளாதார சூழல் என் வாழ்க்கைக்கு போதாது. புரிந்து கொள் என்று சித்தராஜுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள்.தகராறு நீண்டு சென்றது.

வாக்குவாதம் கைகலப்பானது. ரக்ஷிதா மயங்கினாள். சிறுதி நேரம் பேச்சு மூச்சில்லாமல் இருந்த அவள் உயிரிழந்து விட்டாள் என்பதை அறிந்து அதிர்ந்து போன சித்தராஜு தன்னிடம் இருந்த பாறையை உடைக்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சியை பயன்படுத்தினார்.ரக்ஷிதாவின் வாயில் திணித்தான்.திடீரென அறையில் இருந்து பலத்த வெடிச்சத்தம் கேட்டது.
சத்தம் கேட்டு லாட்ஜ் ஊழியர்கள் உடனடியாக அறைக்கு ஓடி வந்தனர். கதவைத் திறந்து பார்த்தபோது, ரக்ஷிதா முகம் வெடித்த நிலையில், தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரது முகப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

சித்தராஜு அந்த இடத்தில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். ஆனால் லாட்ஜ் ஊழியர்கள் மற்றும் அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து தடுத்து நிறுத்தினர்.
உடனடியாக மைசூரு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையைத் தொடங்கினர். அறையில் சிதறிக் கிடந்த மின்சார வயர்கள், பிற பொருட்கள் ஆகியவற்றை சேகரித்தனர். ரக்ஷிதாவின் உடல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
போலீஸ் விசாரணை மற்றும் அதிர்ச்சி தகவல்கள்:
மைசூரு போலீஸ் அதிகாரிகள் சித்தராஜுவை கைது செய்து தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின. இருவருக்கும் இடையே நீண்டகால உறவு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
தகராறின் போது சித்தராஜு வெடிபொருளைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ரக்ஷிதாவின் வீட்டில் இருந்து சில பொருட்கள் மற்றும் நகைகள் காணாமல் போனதும் விசாரணையில் சேர்க்கப்பட்டது.

மைசூரு போலீஸ் சூப்பிரண்டெண்ட் விஷ்ணுவர்த்தனா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த வழக்கை தீவிரமாக கையாண்டனர். இது திட்டமிட்ட செயலா அல்லது தகராறின் போது ஏற்பட்ட சம்பவமா என்பது குறித்து முழு விசாரணை நடைபெற்று வருகிறது. சித்தராஜு மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிராமத்தில் பெரும் அதிர்ச்சி:
இந்த சம்பவம் ஹிரசனஹள்ளி உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரக்ஷிதாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கிராம மக்கள் “இளம் பெண்களின் உறவுகள் குடும்பங்களை எப்படி சிதைக்கின்றன” என பேசத் தொடங்கினர். இந்த சம்பவம் பலருக்கு எச்சரிக்கையாக அமைந்தது.
இளம் தலைமுறையினர், குடும்ப உறவுகள், நம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது. மைசூரு போலீசார் இந்த வழக்கை விரைவில் முடித்து நீதி கிடைக்கச் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary : In Mysuru, Karnataka, a 20-year-old married woman from Hunsur area checked into a lodge with her longtime acquaintance. Following a disagreement inside the room, an incident occurred leading to her sudden death due to explosive materials. The man was detained by police, and an investigation is underway.