வாயோடு வாய் வச்சி.. நான் விதவைன்னு தானே இப்படி பண்ணீங்க.. கதறிய அழும் ஆசிரியை வைரல் ஆடியோ..!

சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக வைரலாகி வரும் ஒரு ஆடியோ, பலரையும் உலுக்கியுள்ளது. அந்த ஆடியோவில் ஒரு ஆசிரியை தனது கண்ணீரை அடக்க முடியாமல் அழுது பேசும் குரல் பதிவாகியுள்ளது.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உடன் பணிபுரிந்த கணினி மேற்பார்வையாளர் சுல்தான் அலாவுதீன், பணியின் போது திடீரென அந்த ஆசிரியையை அணைத்து நன்றி தெரிவித்து கன்னத்தில் முத்தமிட்டார்.

தொடர்ந்து உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டதால் ஆசிரியை மிகுந்த அதிர்ச்சியடைந்து திகைத்துப் போனார்.

என்ன செய்வது என்று தெரியாமல் அன்று முழு நாளும் மன உளைச்சலுடன் இருந்ததாகவும், வீட்டிற்குச் சென்ற பின்னரும் உறக்கம் வராமல் தவித்ததாகவும் அவர் கூறுகிறார்.

இந்நிலையில் சுல்தான் அலாவுதீனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஆசிரியை, கண்ணீர் மல்க அவரிடம்,

“இப்படி செய்து விட்டீர்களே... நான் உங்களை அப்பா ஸ்தானத்தில் வைத்திருந்தேனே... நான் யாரிடம் போய் சொல்லப் போகிறேன்?”என்று அழுது கேட்கிறார்.

அதற்கு சுல்தான் அலாவுதீன், “நாம் உதட்டு முத்தம் கொடுத்தது காமத்தினால் கிடையாது” என்று குழப்பமான முறையில் பதிலளித்ததாக ஆடியோவில் கேட்கிறது.

ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இந்த சம்பவம் தொடர்பான உரையாடல் ஆடியோ இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பணியிடத்தில் நம்பிக்கைக்குரியவர்களின் நடத்தை குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

 

Summary in  English : A teacher was surprised when her computer supervisor colleague of over five years suddenly misuses her at the workplace. Later she called him and expressed her feelings, mentioning she had regarded him as a father figure. He explained that the kiss was not with any wrong intention. The audio of their conversation has gone viral online.