கட்சி வேலை.. கட்சி வேலை.. என சொல்லி மனைவியை வேட்டையாடிய தவெக நிர்வாகி! கணவர் வெளியிட்ட பகீர் வீடியோ!

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் களத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த தனலட்சுமிக்கு தற்போது 22 வயது ஆகிறது.

இவரது கணவர் ராஜலிங்கம், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வரும் ராஜலிங்கம், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் தனது நெருங்கிய உறவினரின் மகளான தனலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் நடைபெற்றபோது தனலட்சுமிக்கு 16 வயதுதான். அதனால் 18 வயது வரை அவரைக் காப்பகத்தில் வைத்திருந்தனர். 18 வயது ஆனபிறகு இருவரும் ஒரே வீட்டில் வசிக்கத் தொடங்கினர்.

ஒன்றாக வாழத் தொடங்கியதும் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனால் தனலட்சுமி கணவரைப் பிரிந்து தாய்வீட்டில் வசிக்கத் தொடங்கினார். பின்னர் தவெக கட்சியில் இணைந்து, கடவூர் தெற்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.

கணவனைப் பிரிந்து வாழ்ந்த தனலட்சுமிக்கு, அதே ஒன்றிய செயலாளரான முத்துசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நெருக்கமாக மாறியதாகக் கூறப்படுகிறது. வசதியான பின்னணியைச் சேர்ந்த முத்துசாமி, தனலட்சுமிக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து வந்தார்.

குறிப்பாக ஸ்கூட்டியும் வாங்கிக் கொடுத்தார். கட்சிப் பணி என்று சொல்லி அடிக்கடி தனலட்சுமியை வெளியே அழைத்துச் சென்றார். இது ராஜலிங்கத்திற்குத் தெரியவந்தது.ராஜலிங்கம் தனது மனைவியிடம் இதுகுறித்துக் கேட்டபோது, முத்துசாமி தலையிட்டு, “இனிமேல் தனலட்சுமிக்கு நீ போன் பேசக்கூடாது. நான் கட்சியில் இருக்கிறேன். தேவையில்லாமல் தொந்தரவு செய்தால் உனக்கு என்ன நடக்கும் என்பதைப் பார்த்துக்கொள்” என்று மிரட்டும் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது.

ராஜலிங்கம் போன் செய்தபோதெல்லாம் தனலட்சுமி உடனடியாக முத்துசாமியை கான்பரன்ஸ் காலில் இணைத்துவிடுவார். தனலட்சுமி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்க, முத்துசாமி ராஜலிங்கத்தை மிரட்டிப் பேசியதாகத் தகவல்.

இந்த நிலையில் கடந்த மாதம் கடவூர் அருகே இடையம்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் முத்துசாமியும் தனலட்சுமியும் முத்துசாமியின் காரில் தனிமையில் இருந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது. “தவெக நிர்வாகிகள் உல்லாசமாக இருப்பதாக” என்று அந்த வீடியோ பரவியது. இதைப் பார்த்த ராஜலிங்கம் மனமுடைந்து போனார்.

தனலட்சுமி “எந்தவிதமான தவறான தொடர்பும் இல்லை” என்று சொல்லி வந்தாலும், வீடியோ வெளியான பிறகு இருவரும் சேர்ந்து அவரைத் தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும், “இப்படியே கேட்டுக்கொண்டிருந்தால் வாகனத்தை ஏற்றி முடித்துவிடுவோம்” என்று மிரட்டியதாகவும் ராஜலிங்கம் குற்றம்சாட்டுகிறார்.

இதையடுத்து ராஜலிங்கம் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கச் சென்றார். அங்கு பாலவிடுதி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், “இங்கே மனு கொடுக்க வேண்டாம். நானே வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறேன்” என்று சொல்லி மனுவை எடுத்துக்கொண்டார்.

ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், முத்துசாமியை அழைத்து விசாரிக்காமல் தனலட்சுமியை மட்டும் அழைத்து விசாரித்ததாகவும் ராஜலிங்கம் குற்றம்சாட்டுகிறார்.

மனு கொடுத்து 20 நாட்கள் ஆகியும் வழக்குப் பதிவாகாததாலும், வைரல் வீடியோவாலும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ராஜலிங்கம், அழுதபடி மொபைலில் வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்தார். பின்னர் விஷம் அருந்தி உயிருக்குப் போராடினார்.

அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மயிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வீடியோவில், “இவளைக் கட்டிக்கொண்டதால் என் வாழ்க்கை நாசமாகிவிட்டது. அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் அவன் வாங்கிக் கொடுக்கிறான்.

நான் கேட்டால் என் மாமனார்-மாமியார் அவளுக்கு ஆதரவு தருகிறார்கள். என்னைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள். இரவு நேரத்தில் காரில் இருந்ததைப் பார்த்த பிறகு என்னால் வாழ முடியவில்லை” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், கணவர் விஷம் அருந்தி உயிருக்குப் போராடுவதை அறிந்த தனலட்சுமி, உடனடியாக கரூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், “ராஜலிங்கத்துடன் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாகவும்” தெரிவித்திருக்கிறார்.

மேலும் மாமனார், மாமியார், கணவர் மற்றும் உறவினர்கள் தன்னைத் துன்புறுத்தியதாகவும், ஒரு லட்சம் ரூபாய் கடனைத் தானே செலுத்த வேண்டும் என்று தொந்தரவு செய்ததாகவும், மூன்று பவுன் தங்க நகையைப் பறித்து வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும், அதனால் கடந்த ஆறு மாதங்களாகத் தாய்வீட்டில் வசிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

கட்சிப் பொறுப்பைப் பயன்படுத்தி தன்னையும் கடவூர் தவெக தெற்கு ஒன்றியப் பொறுப்பில் உள்ள ஒருவரையும் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் தவறாகச் சித்தரிப்பதாகவும், தனக்கும் அந்த நபருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் தனலட்சுமி மறுத்திருக்கிறார்.

இது முழுக்க முழுக்க குடும்பப் பிரச்சனை என்றும், ஏற்கனவே குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்ததாகவும், நீதிமன்றத்தை நாடி சட்டரீதியாகத் தீர்வு பெறப்போவதாக எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்ததாகவும் அந்த மனுவில் கூறியிருக்கிறார்.

இரு தரப்பினரும் மாறி மாறி காவல் நிலையங்களில் புகார் அளித்து வரும் நிலையில், ராஜலிங்கம் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதால் இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தாவேக்கா நிர்வாகிகள் தொடர்பான இந்தப் பிரச்சனை கரூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளைக் கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் மறக்காமல் தெரிவியுங்கள்.

Summary in English : In Karur, 22-year-old Dhanalakshmi married lorry driver Rajalingam six years ago. After marital differences she moved to her mother’s home, joined a political party and became close to local official Muthusamy. A viral night-time video of them in a car triggered complaints and threats. Rajalingam later consumed poison and is under intensive care in hospital. Both sides have filed police complaints.
------Advertisement------
------Advertisement------