ஆடையின்றி கணவன் மேல் அமர்ந்து மனைவி செய்த அசிங்கம்.. வீடியோ காலில் கள்ளக்காதலன் கண்டு ரசித்த கொடூரம்..
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் புல்கான் பகுதியைச் சேர்ந்த 45 வயதான மனீஷ் குப்தா, அந்தப் பகுதியில் மளிகை கடைகளுக்கு ஏஜெண்டாகப் பணியாற்றி வந்தவர். பின்னர் சொந்தமாக மளிகை கடை ஒன்றை நடத்தி குடும்பத்தை பராமரித்து வந்தார். அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய நிஹாரிகாவுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. பழக்கம் காதலாக மாறி, இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் 2017-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 6 வயது ரியான்ஸ் என்ற மகன் உள்ளான். மகன் பிறந்த பிறகு நிஹாரிகா தன் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து குடும்பத்தை கவனித்து வந்தார். ஆனால் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு, ஜம்முவைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் சமூக வலைத்தளத்தில் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் படிப்படியாக திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி போனில் பேசியதோடு, நேரிலும் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நிஹாரிகா எப்போதும் மொபைலில் மூழ்கியிருக்கும் நிலை உருவானது. இது கணவன் மனீஷ் மற்றும் மனைவிக்கு இடையே தொடர்ந்து வாக்குவாதங்களை ஏற்படுத்தியது. ஒரு நாள் மகன் ரியான்ஸ், தன் தாய் வேறொரு ஆண...