நாக்பூர் மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள ஒதுக்குப்புறமான பண்ணை வீட்டுக்கு அருகே இருக்கும் ஏரியில் ஒரு ஆணின் உடல் மிதந்து கிடந்தது.
விசாரணையில் அந்த உடல் 54 வயதான முக்கிய அரசு அதிகாரி சுரேஷ் பாட்டீல் என்பவருடையது என்று தெரிய வந்தது. அவர் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்திருந்தார். உடலில் ஏற்பட்ட காயங்களின் தன்மை போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சுரேஷ் பாட்டீல் நாக்பூர் பகுதியில் முக்கிய அரசு பதவியில் இருந்தவர். அவருக்கு 50 வயதான சுனிதா ஷர்மா என்ற பெண்ணுடன் கல்லூரி காலத்தில் நட்பு இருந்தது. ஆண்டுகள் கடந்த பிறகு, சுனிதாவின் கணவர் ராஜேஷ் ஷர்மா வெளிநாட்டில் பதவி உயர்வு பெற்று வேலைக்குச் சென்றுவிட்டார்.
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக அவர் வெளிநாட்டில் இருந்தார். தனிமையில் தவித்த சுனிதா, தனது பழைய நண்பர் சுரேஷை தேடி தொலைபேசி எண்ணைப் பரிமாறிக் கொண்டு பேசத் தொடங்கினார்.
இருவரின் பேச்சு இளமை நினைவுகளை மீட்டெடுத்தது. 50 வயதிலும் இளம்பெண் போல தனது உணர்வுகளை வெளிப்படுத்திய சுனிதா, சுரேஷுடன் விடிய விடிய செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அவருக்குள் பழைய கோபம் ஒன்று இருந்தது. கல்லூரி காலத்தில் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட சுரேஷ் மீது அந்த கோபம் ஆண்டுகள் பல ஆகியும் தணியவில்லை.
ஒரு கட்டத்தில் சுரேஷ், “நாம் தனிமையில் சந்திக்கலாமா? உன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும்” என்று கேட்டார். சுனிதாவும் சம்மதித்தார். சுரேஷ் அவரை தனது பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் நெருக்கமாக இருந்தனர்.
அப்போது சுனிதா, “என் கணவரை விவாகரத்து செய்துவிட்டு வருகிறேன். நீ என்னை திருமணம் செய்து கொள்” என்று கேட்டார். தனக்கு ஒரு மகன், ஒரு மகள் இருப்பதாகவும், இருவரும் திருமணமாகி தலா இரண்டு குழந்தைகள் வீதம் நான்கு பேரக்குழந்தைகளைப் பார்த்துவிட்டதாகவும் சொன்னார்.
ஆனால் சுரேஷ் உடனே மறுத்துவிட்டார். “முடியவே முடியாது” என்று திட்டவட்டமாகச் சொன்னார். இதனால் சுனிதாவின் கோபம் வெடித்தது. அவர் சுரேஷை கடுமையாக தாக்கினார். தாக்குதலில் சுரேஷ் உயிரிழந்தார். சுனிதா அவரது உடலை அருகிலுள்ள ஏரியில் வீசிவிட்டு, காரில் தனது வீட்டிற்கு திரும்பினார்.
சுரேஷ் காணாமல் போனதாக புகார் எழுந்ததும் போலீஸார் விசாரணை தொடங்கினர். கடந்த சில மாதங்களாக சுரேஷ் அடிக்கடி சுனிதாவுடன் தொலைபேசியில் பேசியது தெரிய வந்தது. சுனிதாவை கைது செய்து விசாரித்தபோது, அவர் இந்த அதிர்ச்சிகரமான உண்மையை ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவம் நாக்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் மேலும் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary : In Nagpur, a 50-year-old woman has been arrested in connection with the death of her 54-year-old former college acquaintance, a senior government official. They reconnected through phone calls while her husband worked overseas.
They met at his farmhouse where she proposed marriage after divorce. Upon his refusal, a confrontation occurred leading to the incident. The body was found in a nearby lake. She has two married children and four grandchildren.